வெளிப்படுத்துவது


மாதவிடாய் வலியோடிருக்கும்

மனைவியைக் காதலிப்பதுதான் எப்படி

கொஞ்சம் பூண்டும் வெங்காயமும்

உரித்துத் தருவதைத் தவிர....

வயோதிக அன்னையிடம் பூக்கும்

கனிவைக் காட்டுவதுதான் எப்படி

அவள் மலம் இழும்பிய புடவையை

அலசிப் போடுவதைத் தவிர....

தூக்கத்திலிருக்கும் மகளிடம் பொங்கும்

பிரியத்தைக் கொட்டுவதுதான் எப்படி

உள்ளாடை தெரிய விலகியிருக்கும்

இரவு உடையைச் சரிசெய்வதைத் தவிர!

 
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2015-2016 Nasadiya Tech. Pvt. Ltd.