கேப்டன் யாசீன்
படைப்புகள்
40
படித்தவர்கள்
1,861
விருப்பங்கள்
225

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் ஆசிரியர் மனநல ஆலோசகர் சமூக சேவகர். புரட்சி நிலா என்ற தலைப்பில் கவிதை வடிவில் நாவல் விரைவில் வெளிவர இருக்கின்றது. தமிழில் கவிக்கோ அப்துல் ரகுமானைத் தொடர்ந்து கஜல் கவிதை நூல்கள் இரண்டு அச்சில். முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் மாத இதழ் ஒன்றில் கடந்த இரு ஆண்டுகளாய்த் தொடராய் எழுதி வருகிறேன். பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகத்தைத் தாண்டி படிக்கத் தொடங்கிய பழக்கம் ஏழாம் வகுப்பிலேயே கவிதை எழுதத் தூண்டிட, இலக்கியத்தின் விரல் பிடித்தேன். தொடர்ந்த விடுதி வாழ்க்கையின் தனிமை என் எழுத்துத் தவத்திற்குத் தீனியிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது என் முதல் சிறுகதை வெளியானது. தொடர்ந்து என் கவிதைப் பயணம் தன் முகவரியை எழுதிட இலக்கியக் கடலில் கால் நனைக்கத் துவங்கினேன். பாக்யா வார இதழும் என் கவிதைக்கு அடைக்கலம் தர வெளிச்சப் புள்ளிகளின் விலாசம் தொட்டேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் படைப்பாளர்கள் மாநாட்டில் கவிச்சுடர் பட்டம் வழங்கப்பட்டது. இப்போதும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு இதழில் என் கவிதைகள் தனக்கான சுவடுகளைப் பதித்துக் கொண்டே வருகின்றன. கேப்டன் யாசீன் என்ற பெயரில் முகநூலில் பலருடைய பாராட்டுதல்களைப் பெற்று பணிவோடு பயணம் போகிற என் கவிதை வாகனம் இன்று முதல் பிரதிலிபி வழியாகவும் இதோ.....


ப. திலீபன்

857 ஃபாலோவர்ஸ்

Asi Asivaru

0 ஃபாலோவர்ஸ்

Surenthar

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.