பத்மஜா நாராயணன்
படைப்புகள்
9
படித்தவர்கள்
4,283
விருப்பங்கள்
520

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

பல நாடுகளின் கலை, கலாச்சாரம், பண்பாடு, இவற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதில் மொழிப்பெயர்ப்பாளரின் பங்கு அளப்பரியது. நோபல் பரிசு பெற்ற மலாலாவின் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கும் அண்ணாநகரைச் சேர்ந்த பத்மஜா நாராயணன் மொழிபெயர்ப்புத்துறையில் கவனிக்கத்தக்கவர். அவர் கூறியது, “என் சொந்த ஊர் காரைககால். படித்து வளந்தது எல்லாம் அங்கேதான். சிறு வயதில் இருந்தே ஏற்பட்ட வாசிக்கும் பழக்கம்தான் அச்சாணி. படித்ததையும், பிடித்ததையும், தோன்றியதையும் பகிர வலைபூ அளித்த வாய்பைப் பயன்படுத்திகொண்டேன். பிறகு சிற்றிதழ்களில் நான் எழுதிய கவிதைகள், மொழிப்பெயர்ப்புக் கட்டுரைகள் வரத் தொடங்கின" தற்போது வங்கியில் பணிபுரிகிறார். மொழிப்பெயர்ப்பை தேர்ந்தெடுத்த காரணத்தை பற்றி அவர் கூறுகையில், "பல வருடங்களாக தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், என இரண்டு மொழிகளிலும் வாசித்து வருகிறேன். நல்ல தமிழ் படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனத் தோன்றும். அதே போல், சிலவற்றை படிக்கும்போது அவற்றை தமிழுக்கு கொண்டுவர வேண்டும் என்று தோன்றும், மகாகவியும் இதைத்தான் சொன்னார். சிற்றிதழ்கள் அத்தகைய பணியினை சிறப்பாக செய்கிறது. அவர்கள் தந்த உற்சாகம்தான் பிரதான காரணம்" ‘‘நான் மலாலா’’ என்கிற நூலை முதன்முதலாக மொழிபெயர்த்துள்ளார். மொழிப்பெயர்ப்பில் இலக்கியத்தின் பங்கு குறித்து பேசுகையில், "இலக்கியம் அன்பைப்பற்றியும், மனிதர்களை பற்றியும் மட்டுமே பேசி வருகிறது, இது உலகெங்கிற்குமான பொதுத்தன்மை. இதன் மூலமாக மற்ற தேசங்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பாக உள்ளது. மனிதனை இன்னும் அருகில் சென்று அறிய இலக்கியம் உதவுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பிறந்த பர்ஷ்டூனியப் பெண்ணான மலாலாவை எங்கள் வீட்டுப்பெண்ணாக உணர அதுவே காரணம். அவள் உங்கள் வீட்டுப் பெண்ணும்கூட! அப்படி ஏதோ ஒரு தூர தேசத்தின் கனவை, லட்சியத்தை, மனிதர்களை மனதுக்கு நெருக்கமாக அறிய மொழிப்பெயர்ப்புதான் ஒரே வழி" "முதல் கவிதைத் தொகுப்பான ‘மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்’ நூலிற்கு ‘கவிதை உறவின்’ முதல் பரிசு கிடைத்தது. தமிழின் மிகப்பெரிய தொகுப்பான ‘கோணங்கியின் கல்குதிரை’ சிற்றிதழில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பை பெரிய விருதாக நினைக்கிறேன். அதேபோல மலைகள்.காம் சிபி செல்வன் அளிக்கும் ஊக்குவிப்பும் எனக்கு கிடைத்தே விருதே! எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் மூலப்படைப்பினை உள்ளபடியே தமிழாக்கம் செய்ய விரும்புகிறேன். ஏதேனும் புரியாவிட்டால், அதை பற்றித் தேடி முழுவதுமாகப் புரியும்வரை காத்திருந்து பணியினைத் தொடருவேன் " தெரிவை என்ற கவிதை தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். நல்ல கவிதை தொகுப்புகளை வெளியிட்டு மேலும், மற்ற மொழிகளில் உள்ள நூல்களை மொழிப்பெயர்க்க வேண்டும் என்பதே இலக்கு என்கிறார்.  


hanoon

0 ஃபாலோவர்ஸ்

Sarvesh

2 ஃபாலோவர்ஸ்

Sarvethiga

4 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.