தூவிய ஞாபகம்

கிணற்றின் அழுக்கை

மீன்கள் தூர்வாரும் அழகை

இரசிக்க இயலவில்லை,

அவள் பார்வையால்

என் மோகத்தை

தூர்வாரிய ஞாபகம்.


முருங்கை பூக்களை

அணில் கோதிய விளையாட்டை

ருசித்தும் புரியவில்லை,

அவள் கூந்தலில்

விளையாட்டாய்

விரல் கோதிய ஞாபகம்.


பூஜைக்கு பூக்கள் தூவியும்

மனதை

நிலைப்படுத்தத் தெரியவில்லை,

அவள் உதடுகளோடு

நிலைத்து நின்று

நினைவிழந்த ஞாபகம்.


மரபுக்கவிதை எழுத

'பா'க்கள் தாவியும்

போதவில்லை,

அவள் அகம்தொட்டு

புறம் தாவிய ஞாபகம்.


உயிரான பேச்சையும்

உந்தலாய்

செய்யமுடியவில்லை,

அவளோடு இரவில்

உந்தலாய் உளவிய ஞாபகம்.


இதயத்தில் கூடுகட்டி

குடியேறியவள்

களைக்கிறாள் நினைவுகளை எல்லாம்

நொடிப்பொழுதிலும்

இடி போன்ற ஞாபகங்களில்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.