காதல் ......கிலோ என்ன விலை ??

அப்பா இருந்தாலும் இப்படி செய்திருக்க கூடாது ..அண்ணனின் மூன்று வருட தெய்வீக காதல் அது ....அண்ணன் அப்பாகிட்ட எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்பதாய் இல்லை ...அப்பாவை மீறி அண்ணன் எந்த செயலையும் செய்பவனும் அல்ல ஏன்னா சின்ன வயசுல இருந்தே அப்பான்னா பயம் ஒரு வித மரியாதை குடும்பத்துல உள்ள எல்லார்க்கும் இருந்துச்சு ...

அப்பா மறுப்பு சொல்லவே அண்ணனுடைய காதல் கானலாய் போனது ..நம்ம குடும்பத்துல எவனும் ஒழுக்கம் தவறி போயிட கூடாது ..காதல் என்ற பேச்சுக்கே இந்த குடும்பத்துல இடம் இல்லைனு சொல்லிட்டு அப்பாவோட தங்கச்சி மகளை அண்ணனுக்கு கல்யாணம் முடிச்சு வச்சார் ...தன் காதலிக்கு செய்த துரோகத்தை நினைத்து வருந்தினான் . ..குற்றவுணர்ச்சி அண்ணன் தமிழை தனிமையில் வாட்டி எடுத்தது என்பதை என்னால் உணர முடிஞ்சது ...என்னத்த இருந்தாலும் உண்மையான காதல் அவ்வளவு சீக்கிரத்துல அவன் நெஞ்சை விட்டு போகாது ....

ஏண்டா சின்னவனே உங்க அண்ணன் மாதிரி நீயும் லவ்வு -கிவ்வுன்னு அலையாதடா,அப்புறம் உங்க அண்ணனுக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் என்றாள் அம்மா ..இங்க பாருடா சின்னவனே உனக்கு என் அண்ணன் மகள் ரஞ்சிதாவை தான் கல்யாணம் முடிக்க போறோம் அதனாலே ஒழுங்கா மரியாதையா இரு என்றாள் அம்மா காமாட்சி ...

சரிம்மா என்றான் சின்னவன் வினோத் ....

நீங்க என்னங்கடா என்னை லவ் பண்ணுறதை தடுக்குறது நீங்க எனக்கு நிச்சயம் பண்ண போற ரஞ்சிதாவை உங்களுக்கு தெரியாம கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்ணுறேன் பாரு என மனசுக்குள்ளேயே சபதம் எடுத்தான் வினோத் ...

ரஞ்சிதாவின் அப்பா வயல்வேலைக்கு சென்றவுடனே அவளை பார்க்க வீட்டுக்கு சென்று விடுவான் ..அத்தை இப்போது உயிரோடு இல்லை அதனால் வினோத்தின் காதல் விளையாட்டு சுலபமாக அரங்கேறியது ...தன்னுடைய அத்தை மகன் அதுவும் தன்னை கட்டிக்க போறவன் என்று அவனுக்கு தன் இதயத்தில் ரொம்பவும் இடம் கொடுத்தாள் ரஞ்சிதா..நாட்களும் கடந்தது ,காதலும் வளர்ந்தது .....

சின்னவன் வினோத் தன் மாமன் மகளை தனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று காத்திருந்தவனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி ..ஆம் தன்னுடைய அப்பா அண்ணனுக்கு அவன் வாழ்க்கையில் குண்டு வைத்தது போல இவன் வாழ்க்கையிலும் குண்டு வைக்க காத்திருந்தார் ...

சின்னவனே உங்க அண்ணனுக்கு என் சகோதரி மகளை கட்டி வச்சு அவன் வாழ்க்கை சரியில்லை அதனாலே உனக்கு சொந்தத்துல வரன் வேண்டாம்ப்பா அதனாலே உனக்கு பிரத்தில தான் பொண்ணு பார்க்க போறேன் என்றார் ...

அப்பா நான் மாமா பொண்ணு ரஞ்சிதாவை விரும்புறேன் என்றான் ..என்னது லவ் பண்றியா ?முடியவே முடியாது ...

இந்த காதலுக்கு ஒத்துக்கவே முடியாது ..நம்ம குடும்பத்துல காதலுக்கு இடமே இல்லை ..நான் சொன்னா சொன்னது தான் ..உனக்கு பிரத்தில தான் பொண்ணு பார்க்க போறேன் என்றார் ...

அண்ணன் பிரத்தி பொண்ணை லவ் பண்ணான் சொந்தத்துல கல்யாணம் முடிச்சு வச்சான் ,நான் சொந்தத்துல லவ் பண்ணேன் பிரத்தில பொண்ணு பார்க்க போறான் ??

இவன் என்னை மனுஷன்யா ?ஆக மொத்தம் உங்களை மாதிரி உள்ள ஆளுங்களுக்கு லவ் தான் பிரச்சனைன்னு மனசுக்குள்ளே நினைச்சுகிட்டு அப்பா சொன்ன கட்டளைக்கு பூம் பூம் மாடு போல தலையாட்டினான் வினோத் ...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.