எங்கே நிம்மதி ?

கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்

நம்

மனதில்

வரிசை வரிசையாக

ஏதாவது எண்ணங்கள்

முடிவில்லாமல்

முடிக்க முடியாமல்

ஓட விட்டுக்கொண்டே...

நாம்

எண்ணங்களின்றி

தனிமையில் இருக்க

பயந்து கொண்டு

எண்ணக்குவியலில்

ஒளிந்து கொண்டே...

நாம்

எண்ணங்களின் பின்னால்

ஓடிக் கொண்டே

எண்ணங்களில் நம்

வேண்டாத எண்ணற்ற

எண்ணங்களையும்

வரவழைத்துக் கொண்டே...

நம்

எண்ணங்கள் நினைவுகள்

காதல்கள் மோதல்கள்

கனவுகள் கற்பனைகள்

ஆர்ப்பாட்டம் போராட்டங்கள்

நம்மிடையே

அள்ள அள்ள

குறையாத

அட்சயப்பாத்திரம் !

நம்

எண்ணிக்கையில்லா

எண்ணங்கள் நினைவுகள்

கனவுகள் கற்பனைகள்

காதல் மோதல்கள்

மனதில்

வெறுமையாகும்போது

தோன்றுவது அமைதி

அங்கே

நிரந்தர நிம்மதி !

பூ.. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.