வண்ண ஓவியமோ
கம்பன் காவியமோ
வில்லென புருவத்தில்
சொல்லென வந்தாயே
விரித்த கூந்தலில்
வலை விரித்தாயே
மௌனப் புன்னகையே
காதல் சாம்ராஜ்யமே
குவிந்த இதழில்
குவியாமல் பேசினாயே
பூக்களையே புடைவையாய் உடுத்தினாயா?
இல்லை
உன்னை கொடி என நினைத்து முல்லை சுற்றிக் கொண்டதா ?

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.