வாழ்க்கையில கிடைக்காத விஷயத்தை தான் நாம்ம அடிக்கடி அளவுக்கதிகமாய் நினைச்சு பார்ப்போம்... என்னை பொறுத்தவரைக்கும் உசுரே போனா கூட ஆன்மாவுல சொல்லாத முதல் காதல் நிறைஞ்சு இருக்கும். வாழ்க்கையில என்ன பெரிய வேலைக்கு போனாலும் சரி , கோடி கோடியா சம்பாதித்தாலும் சரி, உலக அழகியையே கல்யாணம் பண்ணாலும் சரி தோற்று போன முதல் காதலும் -காதலியும் மண்ணோடு மக்கும் வரை உன் மனசோட நிறைஞ்சு இருப்பாள் ...

சொல்ல போற என் காதல் கதை உங்களுக்கு ட்ராஜரியா இருக்குமா ?இல்ல ஜோக்கா தெரியுமா ?அல்லது நீ உன் காதல்ல அந்த பொண்ணுக்கிட்ட சொல்லவே இல்லை அது காதலே இல்லைனு நீங்க சொன்னாலும் சரி என்னை பொறுத்தவரைக்கும் சொல்லாத என் காதல் என் மனசோடு நிறைந்திருக்கும் பொக்கிஷமே !!

அப்ப எனக்கு பதினெட்டு வயசு இருக்கும். என் குடும்பத்துல பன்னிரண்டாவது முடிச்சிட்டு பட்டப்படிப்புக்காக கல்லூரி போற முதல் வாரிசு நானா தான் இருக்கும் ,கூட பொறந்தது ஒரே ஒரு தங்கச்சி மட்டும் தான்.. சினிமாவுல காதல் காட்சிகள் வந்தா கூட அது தப்புன்னு நினைக்கிற குடும்பம் எங்களுடையது படிக்கணும்னு என்கிற ஆசையில எப்படியோ குடும்பத்தார் சம்மதம் வாங்கி காலேஜ் வரைக்கும் வந்திட்டேன் ..

நினைச்ச மாதிரியே நல்ல படியா தான் படிச்சேன் அவளை பார்க்காத வரைக்கும் ..எங்க ஊருக்கு அருகே உள்ள கிராமத்தில் இருந்து தான் வர்றா..என்னை பொறுத்தவரைக்கும் அவ தான் என் உலக அழகி ...எத்தனையோ பொண்ணுங்க இருந்தும் அவளை பார்த்ததும் என் மனசு ஏன் இப்படி ஆச்சுன்னு எனக்கே தெரியலை ..அவளை எப்போதும் பார்த்துகிட்டே இருக்கணும் ,பேசணும் ,பழகணும் ,காதலிக்கணும்,கல்யாணம் பண்ணனும்னு இந்த பாழாய் போன மனசு சொல்லிக்கிட்டே இருந்தது.. சின்ன வயசுல இருந்து ஆண்கள் மட்டும் படிக்கும் ஸ்கூலில் தான் படிச்சேன் ,மத்த பொண்ணுங்ககிட்ட எல்லாம் எனக்கு பேச வராது,தெரியாது ..என் தேவதைக்கிட்ட பேசணும்னு நினைச்சா கூட அவளை நேர்ல பார்க்கும் போது அந்த வார்த்தை மட்டும் வரலை அது ஏன்னு இதுவரைக்கும் தெரியலை ..என்னை பொறுத்தவரைக்கும் நல்ல படியா படிச்சு முடிக்கணும் நல்ல வேலைல சேரனும் அடுத்து என் தேவதை கூட காலமெல்லாம் வாழனும் அப்ப அது மட்டும் தான் என் சிந்தனை முழுதும் ஓடிக்கிட்டு இருந்தது .. என்ன தான் அவகிட்ட பேச தயங்கினாலும் அவளை பார்ப்பதை நிறுத்தலை என் ஊரு பஸ் வந்தாலும் அவ ஊரு பஸ் வர்ற வரைக்கும் அந்த பஸ் ஸ்டாண்டை விட்டு போக மாட்டேன் ..என்னதான் கூட்டம் நின்றாலும் அவளை பார்ப்பதை மட்டும் நிறுத்தமாட்டேன் சில சமயம் அவ பார்ப்பா அந்த சமயம் நான் அவளை பார்க்காத மாதிரி திரும்பிப்பேன்.. மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணை தின்னுற மாதிரி பார்க்குறது ,லவ் பண்ணு-லவ் பண்ணுன்னு டார்ச்சர் பண்ணுறது எல்லாம் எனக்கு பிடிக்காது என்னாலே அவளும் - அவ படிப்பும் எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது ,அதே சமயத்தில் என் காதலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன் ..

பெண்கள் நல்லா படிக்கணும் எல்லா துறையிலும் சாதிக்கணும் அதில் எந்த வித தவறுமில்லை ஆனா சில ஆம்பளைங்க பார்வைகள் மட்டும் மாறணும்னு நினைக்குறேன் ..என் தேவதைக்கு டென்னிஸ்ன்னுன்னா உயிர் டிஸ்ட்ரிக்ட் லெவல்ல எல்லாம் விளையாடி இருக்கா காலேஜ்ல கிரௌண்ட்ல விளையாடும் போது பசங்க கூட்டமா வேடிக்கை பார்ப்பாங்க அப்ப அவளை பார்த்த அந்த பார்வைகள் எல்லாமே என் மேலே பாம்பு ஊர்வது போல தோணும் ..யாரையும் எதிர்த்து பேசாத சாது நான் ,எந்த வம்பு -தும்புக்கும் போகாதவன் அவங்க ஊரு பையன் ஒருத்தன் என் தேவதை விளையாடும் போது அவள் உடல் அங்கங்களை பார்த்து தவறாய் கமெண்ட் பண்ணினான் எங்கிருந்து தான் வந்தது கோபம் என்று எனக்கே தெரியலை அவன் பல்லை உடைக்காத குறையாக அவன் வாய் பீடா போட்ட மாதிரி ரத்தத்தால் சிவக்க வச்சிட்டேன் ...அப்போது தான் எனக்கே புரிந்தது அவள் மேல் எவ்வளவு பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கிறேன் என்று ..!!

மருதாணி அரைத்து அவள் பெயரை கையில் இட்டு கொள்வது ,ஸ்ரீராமஜெயம் போல அவள் பெயரை நோட் புத்தகத்தில் ஆயிரம் தடவைக்கு மேல் எழுதி பார்ப்பது ,மணி பர்சில் அவள் புகைப்படத்தை வைத்து கொள்வது,ரூம் அலமாரியில் அவள் பயன்படுத்திய நோட் புத்தகங்கள் ,அவள் ஸ்கூல் பாஸ்போர்ட் புகைப்படம் ,அவள் தூக்கியெறிந்த சாக்லேட் ராப்பர்,அவள் காலடி மண் ,காலண்டரில் கிழிக்க பட்ட அவள் பிறந்த தேதி,அவளுடைய முடிக்கற்றை என அவளுக்கு தெரியாமலே அவள் பயன் படுத்திய பல பொருள்களை சேகரித்து வைத்தேன் ..தமிழ் சினிமா பார்த்து வளர்ந்தவன் என் காதலும் உங்களுக்கு சினிமாத்தனமாக தெரியலாம் ஆனால் என் காதல் உண்மையானது ...இனக்கவர்ச்சி வந்த சில மாதத்தில் நம்மை விட்டு கடந்து விடும் ஆனால் உண்மையான காதல் வந்தால் வந்தது தான்,என்றுமே உண்மை காதல் நம் மனதை விட்டு போவாது ..வருஷம் கூடிகிட்டே இருந்தாலும் அவ மேலே கொண்ட என் காதல் வளர்ந்துக்கிட்டு தான் இருந்தது..

மூன்றாமாண்டை நெருங்கும் போது அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது ..அப்பாவை நம்பி தான் என் குடும்பம் உள்ளது.

படிப்பு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும் எனவே படிப்பில் முழு கவனம் செலுத்தி நல்லபடியாய் படிக்க ஆரம்பித்தேன் அதே சமயத்தில் என் காதலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன் ...தேர்வு நெருங்கும் போதும் என் தேவதைக்கிட்ட கூட என் காதல்ல சொல்லாம என் அம்மாகிட்ட என் காதல் கதையை சொன்னேன் தேர்வு முடிஞ்சதும் நல்ல வேலையை ரெடி செய்த பிறகு அந்த பொண்ணு வீட்ல போய் பேசுங்க அம்மா ,ஒரு மூணு வருஷம் கழிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு தங்கச்சிக்கு எல்லாம் கல்யாணம் முடிந்த பிறகு அந்த பொண்ணை நான் கல்யாணம் செய்யுற மாதிரி நீங்களும் -அப்பாவும் தான் அந்த பொண்ணு வீட்ல போய் பேசணும்னு எந்த தைரியத்தில் சொன்னேன் என்று எனக்கே தெரியலை ...

நான் சொன்ன அடுத்த கணம்

அடி செருப்பால நாயே ,அந்த மனுஷன் அரபு நாட்டுல போய் வியர்வை சிந்தி உன்னை படிக்க வச்சா உனக்கு பொண்ணு கேட்குதோ ?ஒழுங்கு மரியாதையா படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போற வழிய பாரு ?உன் தங்கச்சிக்கு என் அண்ணன் மவனை தான் பேசி வச்சிருக்கோம் அந்த ஆளுக்கு உன் காதல் செய்தி எல்லாம் தெரிஞ்சா என் பொண்ணை அவன் பையனுக்கு எப்படிடா கட்டுவான்? ஒழுங்கா படிக்கிறதா இருந்தா படி இல்லைனா உன் அப்பன்கிட்டே சொல்லி உன்னை பாலைவனத்துல ஒட்டகம் மேய்க்க அனுப்பி வச்சிடுவேன் என்று கோபமாக திட்டினாள் அம்மா ...

சின்ன வயசுல இருந்தே அடுத்தவங்களுக்காகவே வாழ பழக்கப்பட்டவன் ,என்னாலே யாரும் எந்த விதத்திலும் பாதிக்க பட்டு விட கூடாது என்று எண்ணுபவன் அதனாலே தான் என் காதல் என் நண்பர்கள் மூலம் என் கிளாஸ் முழுதும் தெரிஞ்சும் கூட ,என் தேவதை அறிஞ்சும் கூட என் வாயாலே என் காதலை என் தேவதைக்கிட்ட சொல்லவே இல்லை,என் காதலாலே அவ படிப்பும் -அவ வாழ்க்கையும் பாதிக்க பட்டு விட கூடாது ..உலக அழகியே ஆனாலும் ஏன் எவளா இருந்தாலும் உண்மையான காதலை சொன்னா ஏத்துக்கிக்குவாங்க .என் உண்மை காதலை என் தேவதைக்கிட்ட சொன்னா அவ கண்டிப்பா ஏத்துப்பா ஆனா என் காதலாலே என் தங்கச்சி வாழ்க்கை நாசமா போயிட கூடாது ..ஏன்னா என் சொந்தக்காரன் பயலுக பூரா காதல்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்குற ஆளுங்க ?சினிமா ,சீரியலில் கூட காதலை விரும்பாதவர்கள் கூட்டத்தில் இருந்து கொண்டு காதலில் நான் எப்படி ஜெயிப்பேன் ?காதல்ல ஜெயிக்கணும்னு நினைச்சேன் உண்மை தான் ஆனா உறவுகளோடு சேர்ந்து வாழணும்னு தான் நினைச்சேன் ..என் காதல்ல ஜெயிச்சா என் தங்கச்சி வாழ்க்கை ,என் உறவுகள் எல்லாரையும் நான் இழக்க நேரிடும் அதனாலே என் காதல்ல குழி தோண்டி புதைக்கலாம்னு முடிவு பண்ணேன் ..நல்ல படியா தேர்வு எழுதி டிகிரியும் வாங்கினேன் ..இப்போதைக்கு ஆகா -ஓகோன்னு வாழலைன்னாலும் சொந்த வீடு கட்டி என் குடும்பத்தை காப்பாத்த கூடிய ஒரு வேலையில் அந்த ஆண்டவன் புண்ணியத்தில் இருக்கேன். அப்பா இப்போதைக்கு உயிரோடு இல்லை .மாமாவுக்கும் -அம்மாவுக்கும் நடந்த மனஸ்தாபத்தில் அம்மா தங்கையை பிரத்தியில் திருமணம் செய்து கொடுத்து விட்டாள்...படித்த பையனாய் இருப்பதால் எனக்கு படித்த பெண்ணை தான் திருமணம் செய்யணும் என்பதில் அம்மா விடாப்பிடியாய் இருந்தாள்.படித்த பெண்கள் பெரும்பாலும் அதிகம் எதிர்பார்த்தார்கள் அதனால் வரன் தள்ளி -தள்ளி போனது அப்போது அம்மா நீ காலேஜ் படிக்கும் போதுஒரு படிச்ச பெண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று வாய் தவறி சொன்னாள் அப்போது அம்மாவை நான் பார்த்த பார்வையை அம்மா என்றென்றும் மறக்க மாட்டாள் ...எனக்கு மட்டும் தான் தெரியும் தோற்று போன காதலின் வலி என்னவென்று ? இப்போது எனக்கு திருமணமெல்லாம் முடிந்து விட்டது பிற்காலத்தில் எனக்கு குழந்தைகளும் பிறக்கலாம் ,காலங்கள் மாறலாம் ஆனால் என் மனதில் முதன் முதலாய் பூத்த காதலும் -என் தேவதையின் நினைவுகளும் நான் மண்ணை விட்டு போனாலும் என் ஆன்மாவில் என்றென்றும் நிலைத்திருக்கும் !!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.