குறும்பின் ஒரு வகைகட்டிலில் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்த மகன்

களைப்பில் கண்ணயர

இடம் மாற்றி அவன் படுக்கையில்

படுத்துறங்க எழுப்பும் அம்மா

எழுந்து மலங்க விழிக்கும் மகனிடம் அன்பு மிக

கைகளை நீட்டுகிறாள்

எழ ஏதுவாகுமென .

கைகள் இணைகிறது ....

விநாடிக்கு குறைவான நேரத்தில் நின்று நீட்டிய தாயின் கைகளை பிடித்துச் சின்ன சொடுக்கலில் பரந்த படுக்கையின் ஒரு முனையில் தள்ளி விட்டு சட்டென்று தானே எழுந்து செல்கிறான் பிள்ளை

திரும்பாமல் ....


மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு தெரியும் குறும்புகளின் பரிணாமம் கோடிகளில் என்று

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.