**Canteen**

கயல் , அவளுக்கும் அகிலுக்குமாய் இரு கோப்பை தேநீருடன் வந்தவள் , அவன் இன்னும் யோசனையிலேயே இருந்ததை கவனித்தவளாய் ,
"என்னப்பா .. யோசிச்சிட்டே இருக்க .. என்ன விஷயம் .."

ஒரு மிடறு அருந்தியவன் , கோப்பையை வைத்துவிட்டு , "Simple - ஆ கல்யாணம் பண்ணிக்கலாம்ல .. " சிந்தனை கலையாமல் கேட்டான் அகில்.

அகில் வீட்டில் அவனுக்கு பெண் பார்த்து கொண்டிருப்பது ஏற்கனவே தெரியும் என்பதால் ,பொதுவாய் பேசும் பொருட்டு .. "திடீர்ன்னு என்ன ..?!" சந்தேகமாய் கேட்டு வைத்தாள்..

"கேள்வி கேக்காத .. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு .. "

"அதெல்லாம் பண்ணிக்கலாம் .. பொண்ணு ??"

"பாத்தாச்சு .."

"ஹே ..சொல்லவே இல்ல .. இதுக்கு தான் காலைல இருந்து மூஞ்சத்தூக்கி வச்சிட்டு இருந்தியா.. வாழ்த்துக்கள்"

"சொல்றது என்ன .. காட்டவா??"

"சரியான ஆளுப்பா நீ ..எங்க போட்டோ காட்டு .."

அவள் கையில் அவன் கொடுத்தது..

Front camera on செய்த அவன் Smart Phone :)

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.