அவள் திமிர் பிடித்தவள்

சட்டென பார்ப்பாள் .. முகம் அப்படியே இருக்கும் .. மேல் இமை மட்டும் ஆவி விடும் இட்லி குக்கர் போல சடாரென திறக்கும் .. இது என்ன கேவலமான பார்வை .. என்று தோன்றும் இவளுக்குள் ஏதோ ஒரு மர்மம் அடங்கி தான் உள்ளது .. திடீரென சிறு பிள்ளையாய் அழகாக பேசுவாள் குழந்தைத்தனமாக பேசுவாள் புகைவண்டி விடும் புகை போல குபு குபுவென சிரிப்பாள் ஒரு கூட்டமே கூடி விடும் இவள் பேச்சை கேட்க இவள் நினைத்திருப்பாள் தன் அழகிற்காக வந்த கூட்டம் என்று திமிர் பிடித்த பார்வை அடங்காத பேச்சு தோற்க விரும்பாத மூச்சு நெருப்பான பார்வை வயதான தோற்றம் ஏன் ? அவளது ஒப்பனை இல்லாத முகம் அந்த வயதை மறைக்கும் கொடி இடை பிடிவாத போக்கு அழகு நடை முதிர்வான பேச்சு எல்லாம் தெரியும் என்ற உணர்வு எல்லோரும் இவளை ஒரு ஆனாய் பார்த்தார்கள் ... ஆனால் இந்த எல்லா திமிரும் சேர்ந்து என் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டாள் ! அந்த திமிர் பிடித்தவள் ...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.