தி.நகர் நடேசன் பார்க்.. பின்புறம் தெருவில் நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியில் தன் தலைமுடியை சரிசெய்து கொண்டிருந்தான் ஆதி .. அவனிடம்.. குமார் ..

“தம்பி இந்தாங்க .. சாப்பிடுங்க ..”

பிரியாணி பொட்டலத்தை ஆதி கையில கொடுத்தான் குமார் ..

“யோவ் ஏன்யா இன்னைக்கு இவ்வளவு late .. last ஆறு நாள் correct time 'க்கு கொடுத்தீங்க ..”

“sorry தம்பி .. இன்னைக்கு கொஞ்சம் late ஆகிடுச்சு “

“அட sorry 'லாம் எதுக்கு .. சும்மா உங்ககிட்ட விளையாடுனே .. கோச்சிக்காதிங்க'னு “ சொல்லிட்டு சாப்பாடை வேக வேகமாக சாப்பிட ஆரம்பிச்சான் ஆதி ..

“தம்பி பொறுமையா சாப்பிடுங்க .. இன்னைக்கு ஏன் இவ்வளவு அவசரமா சாப்புடுறீங்க .. “

“அதுவா .. இன்னைக்கு Friday .. இன்னும் கொஞ்ச நேரத்துல .. மூணு மணிக்கு என் ஆள் .. அபிராமி வருவா .. அதான் ...”

“அப்படியா .. உனக்கு lover 'லாம் இருக்கா.. அவுங்க பெயர் என்ன சொன்ன ..” ஆவலா கேட்டான் குமார் ..

அதுக்கு ஆதி ..

“|அவள் பெயர் .. அபிராமி.. “

“அபிராமி ..”

“அவள் இமை அசைவில் ..

களிப்புறும் என்

வாழ்வின் ஆனந்தங்கள் ..”


“ஓ.. கவிதை வேறயா .. “

“ஆமாண்ணே .. கவிதைகள்தான் எங்களை ஒன்னு சேர்த்தது.. எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் கிடையாது .. நான் facebook 'ல கவிதைகள் ,கதைகள் நிறைய எழுதுவேன் .. எல்லாரும் அத படிச்சிட்டு comment எழுதுவாங்க .. அப்படி என்னோட எல்லா கவிதைகளுக்கும் அபிராமி comment எழுதுவாங்க ..மற்ற எல்லாரையும் விட அவுங்க comment தனித்து இருக்கும் .. ஏன்னா.. என் எழுத்துகளோட ஆழமான உணர்வுகள் .. அவுங்க comment 'ல தெரியும் .. பல நேரங்களில் .. நான் அவுங்களோட comment 'க்காக காத்திட்டு இருப்பேன் ..

அப்புறம் நாங்க chat பண்ண ஆரம்பிச்சோம் .. அப்புறம் call ..

அப்படியே எங்க உரையாடல்கள்.. காதலை நோக்கி பயணித்தது .. “

“ஆதி .. உன் love story .. super 'ஆ இருக்கு ..”

“நன்றி .. நன்றி .. மணி மூணு ஆச்சு .. என் ஆள் வர்ற time .. யோவ்.. என் ஆள் வந்துட்டா.. அபிராமி ..”

பாதி சாப்பாடை தூக்கி போட்டுட்டு .. கைய அவசரமா கழுவிட்டு .. அபிராமி வந்த திசையை நோக்கி .. கண்கள்ல மகிழ்ச்சி பொங்க பார்த்தான் ஆதி ..

“ஐயோ ... அபிராமி .. white color சுடிதார்'ல .. சும்மா .. தேவதை மாதிரி .. மாதிரி என்ன.. தேவதையே தான் .. என் அபிராமி ..”

சிறுபிள்ளையாய் துள்ளி குதித்தான் ஆதி ..


சில மாதங்களுக்கு முன்பு ….

…..

இரவு 8.55 ..

ஆதியும் .. அபிராமியும் .. எப்போ 9 மணி ஆகும்னு காத்திட்டு இருந்தாங்க .. 9 மணிங்கறது .. அவுங்க phone 'ல பேசுற நேரம் அது ..

இல்ல இல்ல .. அது நிலவின் மடியில் அவர்களின் காதல்.. பேசும் நேரம் அது ..

மணி 9 .௦௦ ..

ஆதி .. அபிராமிக்கு call பண்ணான்..

call எப்போ வரும்னு காத்திட்டு இருந்த அபிராமி .. உடனே attend செய்தாள்..

“hello அபிராமி ..”

“சொல்லுங்க ஆதி .. இன்னைக்கு நாள் எப்படி போச்சு ..”

“நல்லாவே போச்சு .. உங்களுக்கு ..”

”எனக்கு இதுவரைக்கும் நல்லாத்தான் போயிட்டு இருக்கு .. ”

”சாப்டீங்களா .. ”

”சாப்டேன்.. அப்புறம் ஆதி .. இன்னைக்கு ஒரு special day .. என்னனு சொல்லுங்க பாப்போம் .. ”

”இன்னைக்கா.. இன்னைக்கு உங்க birthday கிடையாது ..வேற என்ன .. தெரியலையே .. ”

”அட போங்க.. இன்னையோட நாம phone 'ல பேச ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகுது .. ”

”ஓ .. அப்படியா .. sorry.. எனக்கு நியாபகம் இல்ல .. அப்போ இத celebrate பண்ண ஒரு கவிதை சொல்றேன் ..”

”சொல்லுங்க .. கவிதையானு பார்ப்போம் .. ”

“கூட்டத்தில் .. நீ .. என்னை தேடியதை ..

உன் நாணம் கண்ட.. மனம் ..

ஒப்புக்கொள்ள மறுத்தாலும் ..

சாட்சிகளாய்.. நின்றன - சந்தங்களான ..

உன் கொலுசின் ஒலிகள் ..”

“கவிஞரே .. அருமை .. ஆனா எனக்கு இது suit ஆகாது ...”

“ஏங்க..”

“ஏன்னா.. எனக்கு கொலுசு போடுற பழக்கம் கிடையாது ..”

“ஐயோ .. ஏங்க அப்புடி ..”

“கொலுசு போடலனா பிடிக்காதா?”

“அப்படி இல்ல .. பொண்ணுங்க கொலுசு போட்டா.. இன்னும் அழகா இருக்கும் .. அதான்..”

“பார்ரா.. கவிஞரே .. சரி விடுங்க ..”

“அப்புறம் அபிராமி .. நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்..”

“கவிஞரே .. நான் சொன்னது நியாபகம் இருக்கா .. எனக்கு phone ல propose பண்றது பிடிக்காது .. நேர்ல propose பண்றதுதான் பிடிக்கும்னு ..”

“சரிங்க ..”

“ஏதோ.. சொல்ல வந்திங்க ..”

“இல்ல .. ஒன்னும் இல்லங்க .. நேர்ல பாக்கும்போது சொல்றேன் .. உங்கள நேர்ல meet பண்ணனும் .. நானும் ரொம்ப நாளா கேட்குறேன் ..”

“ம் ... சரிங்க .. meet பண்ணலாம் ..”

“என்னங்க .. உண்மையாதான் சொல்றிங்களா..”

“ஆமாங்க ...”

“எப்போ.. எங்க..”

“நாளைக்கு Friday .. நாளைக்கு மூணு மணிக்கு .. தி .நகர் நடேசன் பார்க் .. ok 'வா? “

“double ok 'ங்க ..”

“bye .. good night .. கவிஞரே ..”

“good night .. அபிராமி ..”


Friday ... மாலை மூணு மணி .. நடேசன் பார்க்..

அரை மணி நேரம் முன்னாடியே வந்த ஆதி .. அபிராமிக்கிட்ட எப்படி propose பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தான் ..

அபிராமி அங்க மூணு மணிக்கு வந்தாங்க ..

ஆதி .. அபிராமி .. ரெண்டு பேரும்.. சாலையின் எதிர் எதிர் திசையில் இருந்தாங்க ..

first time நேர்ல பாக்குறதுனால .. ரெண்டு பேர் கண்கள்ல ஒரு பரவசம் ...

ஒருவரை ஒருவர் நெருங்கி வந்தாங்க ..

“hello அபிராமி ..”

“கவிஞரே .. ரொம்ப smart 'ஆ இருக்கீங்க .. நேர்ல ஏதோ சொல்றேன்னு சொன்னிங்க .. என்ன அது ..”

“அது வந்து.. அபிராமி ..”

திடிர்னு அந்த இடத்துல கூச்சல்.. குழப்பம் ..

…..

அங்க பூ வித்துட்டு இருந்த பூக்காரம்மா .. கூட்டத்தை விளக்கி பாத்தாங்க ..

ஆதியோட கால்.. அப்புறம் தலையில அடி..

கொலுசு சத்தம் ..

ஆதி மெல்ல கண்ண திறந்து பார்த்தான் .. அவன் தலை அருகே .. அபிராமியோட கால் துடிச்சிட்டு இருந்தது ..

மெல்ல தலைய தூக்கி பார்த்தான் .. தலையில இருந்து ரத்தம் சொட்ட.. சொட்ட .. அபிராமி ..

எழ முயற்சி பண்ணான் .. அவனால முடியல ..

துடிச்சிட்டு இருந்த கால்களில் கொலுச பார்த்தான் ..

ஐயோ அபிராமி .. அவள் கால்களை இறுக பிடிச்சிகிட்டான் ஆதி ..


Ambulance வந்து.. ரெண்டு பேரையும் கொண்டு போச்சு ..


அந்த பூக்காரம்மா .. கூட்டத்தை பார்த்து ..

“என்னய்யா ஆச்சு ..”

“அந்த side .. இருந்து வேகமா வந்த car .. இவுங்க ரெண்டு பேர் மேலையும் .. மோதிடுச்சு ..”

“ஐயோ .. நாசமா போறவன் .. “

“எப்படியாவது .. ரெண்டு பேரையும் பொழைக்க வச்சிருப்பா முருகா..”


இன்று .. இப்பொழுது ..

…….


“hello அபிராமி ..”

“கவிஞரே சாப்டாச்சா ..”

“ஆம் சாப்டாச்சு ..”

“இந்தாங்க .. சாப்ட வாய தொடைங்க முதல்ல ..”

தன்னோட kerchief நீட்டுனா.. அபிராமி ..


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ….

குமார் phone அடிச்சது .. குமார் ..

“hello .. “

“என்னங்க .. வேலை முடிஞ்சுதா.. “-- அவன் மனைவி ..

“ஆமாம் .. அந்த ஜோசியர் சொன்ன மாதிரி ஏழு நாள்.. road 'ல திரியிற மனநலம் பாதிக்கப்பட்ட, பத்து பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாச்சு .. இனியாவது தோஷம் நீங்கி நல்ல காலம் பொறக்குதான்னு பார்ப்போம் ..”

“சரிங்க .. சீக்கிரம் வாங்க ..”

குமார் phone cut பண்ணிட்டு .. ஆதி பக்கத்துல போனான் ..

அப்போ ஆதி ..

“அண்ணே.. இதான் என் ஆளு .. அபிராமி ..”

“அபிராமி .. இவர் குமார் .. எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாரு ..”

குமார் ஆதிகிட்ட ..

“ஏம்பா.. யாரப்பா சொல்ற .. இங்க யாருமே இல்லயே ..”

“இங்க பாரு அபிராமி .. இவர் கண்ணுக்கும் நீ தெர்ல ..”

“அண்ணே .. உன் கண்ணுல ஏதோ problem.. check பண்ணு முதல்ல ..”

“ நீ வா அபிராமி நம்ம போகலாம் ..”

ஆதியும் அபிராமியும் நடந்து போகும்போது .. அவள் கைகளை சீண்டுனான் ஆதி ..

அபிராமி தட்டி விட .. மறுபடியும் சீண்டுனான் ..

அபிராமி கோவமா .. "எல்லாரும் பாக்குறாங்க "

ஆதி முகம் சுருங்கிச்சு ..

உடனே .. அபிராமி .. ஆதியோட முகத்த கைகளில் ஏந்தி ..

கவிஞர் சோகமா இருக்க கூடாதுனு சொல்லி ..

அவன் நெற்றியிலயும் .. அப்புறம் அவன் உதடுகளிலும் முத்தமிட்டு..

காற்றில் கரைந்து போனாள்…. அபிராமி ..

அவள் முத்தத்தின் .. பரவசத்தில் ..

கண்களை மூடி .. கைகளை நீட்டி .. சிறு பிள்ளையாய்.. கூத்தாடினான் ..

அவள் பெயரை ஆர்பரித்தான் ..

அபிராமி ... அபிராமி ...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.