சேலைத்தலைப்புசாயந்தர மழைத்தூறலில்
தாய்க்கோழியின்றி
மின்சக்தியில் பொரித்த கோழிக்குஞ்சுகளுக்கு
பேரிலை ஒன்றைக்
குடையாக்கி
மொத்தமாய் நனைந்து கொண்டிருக்கிறாள்
ஒரு சிறுமி!

'நனையாதே காய்ச்சல் வரும்'
என்ற அம்மாவின் குரலை
அசட்டை செய்தபடி....

'எனக்கு நீயிருக்கேம்மா
பார்த்துக்க
இதுங்களுக்கு யார் இருக்கா'
என்கிறாள்

அம்மாவின் சேலைத்தலைப்பு
எல்லாருக்கும் குடையாகியது!

மகி

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.