திருமண அழைப்பிதழில் - உன்

பெயரோடு என் பெயரும் .....

எழுதிட கண்ட நாள் முதல் – உன்

நினைவினில் நான் சிவந்ததும்...

உன் பெயர் உச்சரித்து சுகம் கண்ட - உதடுகள்

என் பெயர் மறந்ததும் .....

உன்னை நினைத்து என் கைகளில்

மருதாணியோடு சிவந்த கை ரேகைகளும்....

என் கண்கள் காணுகின்ற இடமெல்லாம் – நீ

மட்டும் தெரிய.....

உன் நினைவினில் - என்னை

மறந்த அழகிய ஞாபகங்களும் .....

உன் பெயர் சொல்லி என் உறவுகள் - என்னை

அழைத்திடும் நாள் பார்த்து நான்.....

மணமேடையில் நீயும் நானும் மணமாலை சூட்டி - என்

மனதோடு உனை நான் மணவாளன் ஆக்கி...

உன் தோழ்களில் நான் சாய்ந்திடும் போது

என் தோழனாக நீயும்....

உன் சோகங்கள் கேட்டிட தாயாக நானும்....

அலைகள் வருடிய சுகத்தில்

மயங்கிய கடற்க்கரை மணலில் - அன்பே

உன் மார்போடு சாய்ந்து

நடந்திடும் சுகம் தேடி.....


கானல் நீர் போன்ற மனதோடு - என்றும்

கரையாத காதல் கொண்டு....

தேவை என்று நான் தேடும் முன்னே

தெவிட்டாமல் தருகின்ற அன்போடும்...

கைகள் கோர்த்து கால்கள் சேர்த்து

உன்னோடு நடந்திடும் பயணங்களும்.....

என்னை வருடி செல்லும் தென்றலில் – உன்

சுவாசம் உணர்ந்திடும் தருணங்களும்....

என் விழி பார்வைகள் சேர்ந்திடும் தொலைவினில்

உன் பார்வைகளின் நிழல் தரும் சுகங்களும்.....

நீ வரும் வழி பார்த்து – உனக்காக

காத்திருக்கும் ஏக்கங்களின் மயக்கங்களும்....

நான் மயங்கிடும் நேரங்களில் – உன்

தோள்களில் நானும்....

என்னை தாங்கிடும் நீயும்...

ஜென்மங்கள் எத்தனை எடுத்தாளும் – நான்

வேண்டிடும் வேண்டுதல் நீ மட்டும்....

அந்த வானம் உள்ள வரை நம் காதலும்

நீ உள்ள வரை மட்டும் நானும்....

வாழ்ந்தாலே போதும் உயிரே.....

கடற்கரை தனில் உனக்காக – நான்

காத்திருக்கையில் என் விழிகளை

வருடிச்சென்ற உன் நினைவலைகளின்

சாரலில் இதமாய் மூழ்கிய.....

உனக்காக காத்திருந்த நொடிகள்.....

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.