பேருந்து நிலயத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தாள் அன்ஷிகா. அவள் வேலைக்குச்செல்ல வேண்டும்.பஸ் வரும்வழியை காணோம் .மணியைப் பார்த்தவள் நேரமாகிவிட்டதால் ஆட்டோ பிடிக்கும் எண்ணத்துடன் பர பரப்பாக எழுந்தாள். அவளுடைய ஸ்கூட்டர் செர்வீஸ்க்குப் போயிருந்தது.காலி ஆட்டோ எதுவும் வரவில்லை.போகிற வருகிற ஆட்டோக்களில் எல்லாம் மக்கள்.என்ன செய்யலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு கார் வந்து நின்றது.

"உங்களுக்கு அவசரமாக எங்காவது செல்ல வேண்டுமா. இந்த வழியில் இன்று பஸ் எதுவும் வராது. வழியில் ஏதோ கலவரம்". என்றான் காரை ஓட்டி வந்த இளைஞன்.

"இன்று அவள் எப்படியும் வேலைக்குச் சென்றாக வேண்டும்.ஒரு முக்கியமான வேலை இருக்கிறது.நேற்றே முடிக்கவில்லை என்று மேனேஜருக்குக் கோபம். நேற்றுக் கொடுத்த ஸ்கூட்டர் இன்னும் வரவில்லை.பஸ் வராது.ஆட்டோ கிடைக்கவில்லை.கடவுளே இன்று பார்த்து இவ்வளவு சோதனையா?நெற்றியில் வழிந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.

"உங்களுக்கு ஆட்சபனையில்லை என்றால்,நீங்கள் என் காரில் வரலாம்.நீங்கள் எங்கு போகவேண்டுமோ அங்கே கொண்டு விடுகிறேன்."என்று சொல்லிக் கொண்டே காரின் கதவைத் திறந்து கொண்டு வெளிப் பட்டான் அவன். அவன் பார்வையும் பேச்சும் கண்ணியமாகவே காணப் பட்டது.

ஒரு நிமிஷத்துக்கு முன் கடவுளை நொந்து கொண்டாளே! கடவுளாகப் பார்த்து இவனை அனுப்பியிருக்கிறாரோ? அவளுடைய அவசரத் தேவை இப்படியெல்லாம் நினைக்க வைத்தது.ஆனால் அவளுடைய பெண்மையின் உள்ளுணர்வு அவளை எச்சரித்துத் தயங்க வைத்தது.அவள் எதுவும் பேசுமுன் அவளுடைய தயக்கத்தை கண்ட அவன்,

"உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் என்னுடன் வரவேண்டாம். இங்கே அருகில் ஒரு ஆட்டோ ஸ்டான்ட் இருக்கு. அதில் ஆட்டோ கிடைக்குமா பார்க்கிறேன்." அவன் காரில் ஏறிக்கொண்டு நகர்ந்தான்.அவன் சற்று தூரம் சென்றவுடன் ஒரு பெண் ஸ்கூட்டரில் வந்து பஸ் ஸ்டாண்டில் நிறுத்தினாள். அன்ஷிகாவிடம் சொன்னாள் ,

"பஸ்சுக்காக நிற்கிறீர்களா.பஸ் வரும் வழியில் ஏதோ கலாட்டா. பஸ்கள் வராது.என்னுடன் வாருங்கள் நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு கூட்டிப் போகிறேன் "என்று.

இன்று என்ன எல்லாமே வினோதமாக நடக்கிறது.வரவேண்டிய என் ஸ்கூட்டர் இன்னும் சரியாகி வரவில்லை.என்னுடைய ஆபீஸ் அவசரம்,பஸ்கள் வராமை,யாரோ முன்பின் தெரியாத வாலிபன் காருடன் வந்து அழைப்பு, இப்போது இந்த பெண்! மணியை பார்த்தவள் அந்தப் பெண்ணுடன் போகத் தீர்மானித்தாள்.

அறிமுகமில்லாத ஆடவனுடன் தனியாக காரில் செல்வதை விட ஒரு பெண்ணுடன் ஸ்கூட்டரில் போவது ஆபத்தில்லாதது.என்று நினைத்தாள்.

அப்போது

சற்று தள்ளி நடைபாதை மரத்தடியில் தூங்கி கொண்டிருந்த நாய் ஒன்று விழித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தது.அந்த ஸ்கூட்டர் பெண்ணை பார்த்தவுடன் ஆக்ரோஷமாகக் குரைத்துக் கொண்டு பாய்ந்து வந்தது. அன்ஷிகா பயந்துபோய் அப்படியே நின்று விட்டாள்.அந்தப் பெண் ஸ்கூட்டரை வேகமாக ஒட்டிக் கொண்டு போய்விடுவாள் என்று நினைத்தாள். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை.ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டே அந்த நாயை முறைத்துப் பார்த்து "ஹூம் "என்று உறுமினாள். அவ்வளவுதான். சட்டென்று நின்ற நாய் பின்னங்கால்களுக்கிடையே வாலை நுழைத்துக் கொண்டு முனகலாக கத்திக் கொண்டே திரும்பி ஓடியது.நாயை முறைத்தபோது அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தவர்கள் அரண்டு போயிருப்பார்கள்!

"பயந்து விட்டீர்களா? வாருங்கள் போகலாம்."என்று எதுவுமே நடக்காததுபோல் சிரித்துக் கொண்டே அந்தப் பெண் சொன்னாள்.அவள் அழகாகவே இருந்தாள். இந்தப் பெண்ணா சற்றுமுன் அப்படி இருந்தாள்.ஏன் அவளைப் பார்த்து நாய் அப்படிப் பாய்ந்தது என்று அதிசயித்தாள். அன்ஷிகா.அவள் ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர முயன்றபோது அந்த கார் திரும்பவும் வந்தது. அதன் பின்னால் ஒரு ஆட்டோவும் வந்தது.கார் கதவை திறந்துகொண்டு இறங்கியவன்,

"ஆட்டோ உங்களுக்கு "என்றான்.

அவனைப் பார்த்த அந்தப் பெண் ஸ்கூட்டரிலிருந்து அவசரமாக இறங்கி புன்னகையுடன் "வணக்கம் ஸார்"என்றாள் சற்று நாணத்துடன்.

"நான் யார் தெரியுமா உங்களுக்கு"என்றான் அவன்.

"உங்களை தெரியாமல் எப்படி ஸார். நீங்கள் அந்தப் மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிபர்தானே? நானே உங்களை பார்த்துப் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.என் பெயர் அமலா" என்று கையை நீட்டினாள்.அவன் அந்த மென்மையான கையைப்பற்றி குலுக்கியபோது மின் தாக்குதலை உணர்ந்தான்.

"ஏன்.என்னவிஷயம் " என்றான் அவன்.அவளுடைய அழகு அவனை என்னவோ செய்தது.

"வேறு என்ன.உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பாக்யம் தேடித்தான்."என்றாள் அவள் ஒரு மோகனைப் புன்னகையுடன்.

"யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்"என்றவன் பாக்கெட்டிலிருந்து விசிட்டிங் கார்டுகளை எடுத்து ஒரு கார்டின் பின்னால் எதோ எழுதி அவளிடம் கொடுத்தான்."ஆபீசில் இதை காட்டினால் நேராக என்னிடமே அனுப்புவார்கள்".

"தாங்ஸ் " என்றாள் அமலா.அவன் அன்ஷிகாவிடம் ஓர் கார்டைக் கொடுத்தான்.அதில் அவன் எதுவும் எழுதவில்லை.காரில் ஏறிக்கொண்டு போய்விட்டான்.


முன்னால் வந்த ஆட்டோ ஓட்டுநர்

"யாருக்காம்மா ஆட்டோ.எங்க போகணும்"என்றான்.அன்ஷிகா எதுவும் சொல்லும் முன்னரே,

"ஆட்டோ வேண்டாம். நீ போகலாம்"என்றாள்" அந்தப் பெண்.

"நீங்கள் சிரமப் பட வேண்டாம் நான் ஆட்டோவிலேயே போகிறேன்".

"வேண்டாம். ஆட்டோ நீ போகலாம்".

"வேண்டாமா, என்னம்மா காலங்கார்த்தால சாவு கிராக்கி "என்று ஆட்டோக்காரன் சொல்லிக் கொண்டே நடந்தான்.

"ஏய் "என்று அந்தப் பெண்ணின் அதட்டலில் நின்று திரும்பிபி பார்த்தான் அவன்.அவனை விழித்துப் பார்த்தவள்,

"பொத்திக்கிட்டு போ "என்று உறுமினாள்.அரண்டு போன ஆட்டோக்காரன் அவசரமாக ஆட்டோவில் ஏறிக் கொண்டு வேகமாகப் போய்விட்டான்.

"வாங்க போகலாம்."என்று ஸ்கூட்டரைக் கிளம்பினாள் அந்தப் பெண்.அன்ஷிகாவுக்கு பயமாக இருந்தது.இந்த மாறுபட்ட பெண்ணுடன் போனால் என்ன ஆகுமோ.வரலை என்று சொன்னால் என்ன செய்வாளோ என்றெல்லாம் பயம். வேறு வழி தோன்றாமல் ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டாள்.

"நீங்கள் எங்கு போகவேண்டும் "என்று கேட்டாள் அந்தப் பெண்.சொன்னாள் அன்ஷிகா.

"அந்த காரில் வந்தவனை உங்களுக்குத் தெரியுமா?"

"அவன் யாரோ தெரியாது.நான் பஸ் ஸ்டாப்பில் நிற்பதை பார்த்து.இன்று பஸ் வராது. எங்கே போகணும். என் காரில் வாருங்கள்.நான் கொண்டு விடுகிறேன் என்றான்.நான் தயங்கினதால், சரி நீங்கள் வர விரும்பவில்லை என்றால் நான் ஒரு ஆட்டோ கூட்டி வருகிறேன் என்று போனான் "என்று அவசரமாக நீண்ட பதிலைச் சொன்னாள் அன்ஷிகா.

"வேஷம்.நடிப்பு . அயோக்கிய ராஸ்கல்"என்று உறுமினாள் அந்தப் பெண்.

"ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்" துணிச்சலை வருவித்துக் கொண்டு கேட்டாள் அன்ஷிகா.

"ஏனா அவன் ஒரு பொம்பளை பொறுக்கி.அவனைப் பற்றி தெரியாதா உங்களுக்கு"..

"தெரியாது ".

"அவன் ஒரு தொலைகாட்சி நிறுவனத்தின் சொந்தக்காரன்.அவனுடைய அப்பன் அரசியல்வாதி. மத்திய மந்திரி. இங்கு அந்த கட்சியின் ஆட்சி.தோலைகாட்சி, சினிமா கவர்ச்சியில் மயங்கி வேலை தேடிவரும் பெண்கள் இவனுக்கும் இவனுடைய சொந்தக்காரர்கள், நண்பர்களுக்கும் விருந்தாகவேண்டும்.இல்லை என்றால் வேலை இல்லை. முரண்டும் அழகான பெண்களை எப்படியாவது வேட்டையாடி அனுபவித்துவிட்டு கொன்றுவிடவும் அஞ்சாத அரக்கர்கள்"என்று பற்களைக் கடித்தாள் அமலா.

அன்ஷிகாவின் அலுவலகம் வந்துவிட்டது.இறங்கி கொண்டவள் , தாங்ஸ் ,என் பெயர் அன்ஷிகா" என்றாள்.

"என் பெயர் அமலா .இதுபோன்ற ஆட்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்" என்றாள் அந்தப் பெண்.

"ஆனால் நீங்கள்".

"அது உனக்கு அனாவசியம்"என்றவள் கிளம்பிப் போய்விட்டாள்.அமலா.

அன்று முழுவதும் அன்ஷிகா அந்த விசித்திர பெண்ணைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தாள்..

கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடந்தது இது.

அமலா , அதுதான் அந்த ஸ்கூட்டர் பெண் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது ஜனநடமாட்டம் அதிகமில்லாத ஒரு இடத்தில் மூன்று ரௌடிகளால் வழி மறிக்கப்பட்டு கடத்திச் செல்லப் பட்டாள்.மரங்கள் அடர்ந்த காடு போன்ற இடத்தில் கொண்டுபோய் அவளைக் கற்பழிக்க முற்பட்டனர்..கத்தி முனையில் அவளை பயமுறுத்தி அங்கு கொண்டுவந்திருந்தனர்.அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணை முன்பே துரத்தி துரத்தி காதலிப்பதாக சொல்லி வந்து அவளால் புறக்கணிக்கப் பட்டவன்.

அவளை பிடித்திழுத்து அவள் உடுப்புக்களை ஒருவன் கிழிக்க முனைந்தபோது அவன்கண்ணத்தில் பலமாக அறைந்து அவனை பிடித்துத் தள்ளினாள் அமலா. ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவன் அவள் கன்னத்த்தில் ஓங்கி அறைந்து அவளை பலமாக கீழே தள்ளினான்.பலத்த அடியாலும் கீழே விழுந்த வேகத்தினாலும் அதிர்ச்சியடைந்தவள் இறந்துவிட்டவளைபோல் கிடந்தாள்.

"டேய், இவ செத்துட்டா போல்ருக்குடா. நாம இங்கேருந்து போயிரலாம்"என்றான் ஒருவன்.

டேய் நில்லுங்கடா. இவளுக்கு என்னைத் தெரியும் . இவள உயிரோட விட்டா நம்மை காட்டிக் கொடுத்துடுவா. அதனால் வேலைய முடிச்சிட்டு கொன்னுடனும்னு நினைச்சேன்.இப்ப அவளாவே செத்துட்டா"என்றான் அவளை வெகு நாட்களாய் துரத்தியவன்.

"இப்ப என்ன செய்யலாம்"என்றான் இன்னொருவன்.

"யார்ரா இவன்?கேக்கறதைப் பாரு. இன்னும் கொஞ்ச நேரம் அந்த உடம்பு சூடாத்தான் இருக்கும்.நமக்கு வேண்டியதெல்லாம் நல்லாத்தான் இருக்கும். வேலையே முடிச்சிட்டு தூக்கிக் கடாசிட்டு போவியா "என்று அவளிடம் குனிந்தான்.

அப்போது அமானுஷ்யமாக அலறிக்கொண்டு நேராக எழுந்து நின்றாள்அமலா , அந்த அலறலையும் அவள் எழுந்த வேகத்தையும் பார்த்த ரௌடிகள் அரண்டுபோய் கை கால்கள் இயங்காமல் நின்றுவிட்டனர்.

பத்ரகாளிபோல் எழுந்த அமலா பக்கத்தில் நின்ற ஒருவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். பேய் அடியாக தாக்கி அவன் சுருண்டு விழுந்தான்.மற்றவர்களை அவள் பார்த்த பார்வை அவர்களை மிரண்டு பின் வாங்க வைத்தது..கீழே விழுந்தவன் சமாளித்துக் கொண்டு எழுந்து, பின்வாங்கும் மற்றவர்களைக் கண்டு,

"டேய் நில்லுங்கடா. ஒரு பொட்டச்சிக்கு பயந்து ஓடுவீங்களாடா?"என்று மடியிலிருந்த கத்தியை உருவிக் கொண்டு அந்த பெண்ணை நெருங்கினான்.மின்னலாக அவள் திரும்பியபோது அவள் பார்வயை சந்தித்தவன் பயத்தில் வேல வெலத்துப் போனான். கத்தியை அவள் தட்டிவிட்டபோது கடப்பாறையால் அடி வாங்கியதைப்போல் அவன் கை வலித்தது.கீழே வீழ்ந்த கத்தியை கையில் எடுத்தவள் ஓடும் அவர்களை துரத்திக் கொண்டு ஓடினாள். ஓடியவர்கள் ரோட்டோரம் நிறுத்தியிருந்த அவர்களின் பைக்கில் ஏறி தப்பி ஓடினர். அவர்களில் ஒருவன் எடுத்து வந்த அமலாவின் ஸ்கூட்டரும் அங்கு இருந்தது.தன் உடைகளையும் கலைந்த தலை முடியையும் சீர் செய்து கொண்டவள் எதுவுமே நடக்காத மாதிரி வேலைக்குச் சென்றாள். அந்த ரௌடிகளிடமிருந்து எப்படித் தப்பித்தோம் என்று நினைத்தபோது அவளுக்கு காரணம் புரியவில்லை.ஒரே ஆச்சரியமாக இருந்தது.அன்று நடந்த சம்பவங்களை அவள் வீட்டில் சொல்லவில்லை."இனி நீ வேலைக்குச் செல்லவேண்டாம்" என்று தடுத்து விடுவார்கள் என்ற பயம்.

இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.

அந்த தனியார் தொலைகாட்சி நிறுவனத்தின் அதிபரும் அவரின் இரு நண்பர்களும் புதிதாகத் தொடங்கவிருக்கும் கதைத் தொடருக்காக லொகேஷன் தேடப்போகலாம் என்று சொல்லிக் கொண்டு,அந்தத் தொடரில் கதாநாயகியாக நடிக்க சான்ஸ் கொடுப்பதாக அவர்கள் சொல்லியிருந்த ஒரு அழகான பெண்ணுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்கள்.காரின் பின்னிருக்கையில் அந்தப் பெண்ணும் ஒரு ஆணும் இருந்தார்கள்.காரில் பொருத்தப் பட்டிருந்த ரேடியோவிலிருந்து ஏதோ சினிமா பாட்டுக்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

அந்த ஆண் பெண்ணிடம் மெதுவான குரலில் பேசிக்கொண்டு வந்தான்.

"இத பாரும்மா உன் பெரு வாசுகிதானே? நான்தான் இந்த சீரியல எடுக்கப் போறேன்.கார் ஓட்டிட்டிருக்காரே அவரு டீவிலதான் நம்ம சீரியல் வரப்போகுது.நிறைய பொண்ணுக மத்தில ஒன்ன கதாநாயகியா தேர்தெடுக்க அவருதான் சிபாரிசு செஞ்சாரு.நீமட்டும் பக்குவமா எல்லார்கிட்டயும் நடந்துக்கிட்டயானா உனக்கு நெறய சான்ஸு கிடைக்கும்.அதுமட்டுமில்ல ஒனக்கு சினிமா சான்ஸுக்கும் அவரு சிபார்ச்சு செய்வாரு.புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டு சீக்கிரமா முன்னேறர வழியபாரு. சொல்லிப்புட்டேன்."என்றான்.

"நாம் இப்படி இவர்களுடன் கிளம்பி வந்தது சரியா தவறா" என்று மனதுக்குள் தவித்துக் கொண்டிருந்த அந்தப்பெண் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையாட்டினாள். கார் ஒரு மலை வாசஸ்தலத்தில் ஓர் பங்களாவின் முன் வந்து நின்றது.

"இவரோட பங்களாத்தான் "என்றான் அந்த ஆள்.

அன்றிரவு அவள் எவ்வளவு மறுத்துப் போராடியும் ,வலுக் கட்டாயமாக அவளை மது அருந்தவைத்து, கதறக் கதற அவளை மூவரும் மாறி மாறி கெடுத்தார்கள்.

"டேய் உங்களை நான் சும்மா விடப் போவதில்லை.பழிக்குப் பழி வாங்குவேன்"கதறல்களுக்கிடையே சபதமிட்டவள் மயக்கமடைந்தாள். களைத்துப் போன அவர்களில் ஒருவன்.

"பொழக்கத் தெரியாதவ.பேசாம ஓத்துக்கிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு பொழப்ப பாப்பாளா? சபதம் போடுறா."என்றவன் "அண்ணே இவளை இப்படியே விட்டா நமக்கு ஆபத்து.என்ன செய்யலாம்." என்றான்.

அந்த கோடை வாசஸ்தலத்தில் உள்ள "சூசையிட் பாயிண்ட்"என்னுமிடத்திலிருந்து,மயக்கமடைந்த அவள் உடல் தூக்கி எறியப்பட்டு அதன் பாதாளத்தை சரணடைதது.அவள் உயிர் பிழைக்க வாய்ப்பேயில்லை.

இன்றும் அதேபோல் ஒரு கார் அந்த நீண்ட நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது. காரை ஒட்டியவன் அந்த டீவி அதிபர். அருகில் அமலா! பின்னிருக்கையில் இரு ஆண்கள்.அமலா அருகில் இருந்தவனிடம் கொஞ்சிக் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தாள்.காருக்கு முன்னால் வெகு தூரத்தில் பெரிய டிரைய்லர் லாரி ஒன்று ஏதோ கனமான பெரிய எந்திரத்தை சுமந்துகொண்டு நட்ட நடு ரோட்டில் போய்க்கொண்டிருந்தது.அதைக் கவனித்த அமலாவின் மனதில் லேசான பரபரப்பு .

"ஸார்,ஓர் சேலஞ்ச்"என்றாள்.

"என்ன"என்றான் அவன்.

"இங்கேருந்து வேகமாபோய் அந்த லாரியை ஓவர்டேக் பண்னணமுடியுமா?" நிச்சயமா உங்களால் முடியாது. ஐ, சேலன்ச்" என்றாள். .

"முடியும்"என்றவன் அதற்கான ஆயத்தங்களை செய்தான். காரின் கதவுகளை இன்டர் 'லாக்'கிலிருந்து 'அன்லாக்'.செய்தான்."அவசரமேற்பட்டால் கதவைத் திறந்துகொண்டு குதிக்க வசதியாக இருக்கும்"என்றான்,காரின் பின்னால் இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்தனர். கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன் ஆக்சிலரேட்டரை அழுத்தினான்.கார் வேகமெடுத்தது.அமாலாவின் இடதுகை காரின் கதவின் கைப்பிடியில் இருந்தது.

"யூ ஆர் கிரேட்" என்றவள் அவன் கன்னத்தைத் தட்டினாள்.அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.கார் வேகமாக லாரியை நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன ஆரன் அடித்தும் லாரி ஒதுங்குவதாகத் தெரியவில்லை.இன்னும் நூறடி தூரந்தான் இருக்கும்.பின்னால் வண்டிகள் எதுவும் வருவதாகத் தெரியவில்லை.

ஐம்பதடி தூரம் இருக்கும்போது அவன் காரின் பிரேக்கை அழுத்தினான்.படுவகத்தில் வந்துகொண்டிட்ருந்த கார் தாறுமாறாகக் தடுமாறி கிரீச்சிட்டது.அப்போது

அமானுஷ்யமாக பேய்க்கூச்சலிட்டுக் கொண்டே ,கதவைத் திறந்துகொண்டு வெளியில் குதித்த அமலா தரையில் விழுந்து உருண்டு உருண்டு இடது பக்க ரோட்டோரத்தில் உருண்டு மயக்கமானாள். காரின் கட்டுக்கடங்காமையாலும்,திடீரென்றெழுந்த பேய்கூச்சலாலும் அரண்டு ஆடிப்போன அவன் பிரேக்கை மேலும் அழுத்துவதற்கு பதில் ஆக்சிலரேட்டரை அழுத்தினான்.

மயக்கத்திலிருந்து கண் விழித்த அமலா கவலையுடன் சுற்றுமுற்றும் பார்த்தாள்.அந்த கார் பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தது. லாரியைக் காணவில்லை

ஆச்சரியமாக அவள் உடலில் சில இடங்களில் சிராய்ப்புகளைத் தவிர பெரிதாக அடியேதுமில்லை.கை கடிகாரம் ஓடிக்கொண்டிருந்தது.பத்தே நிமிடங்கள்தான் ஆகியிருந்தன.இதுவரை யாரும் அவளை பார்த்திருக்கவில்லை.அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டின் பாக்கெட்களில் வைத்திருந்த பொருள்கள் பத்திரமாகவே இருந்தன.

மெயின் ரோட்டில் நடக்காமல் சற்று உள்ளே தள்ளி வளர்ந்திருந்த மரம் செடிகொடிகலில் மறைந்து மறைந்து யார் கண்களிலும் படாமல் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே வந்த வழியை நோக்கி நடந்தாள்.கல்லிலும் முள்ளிலும், மேடுபள்ளங்களிலும் வெகு நேரம் நடந்து அவள் களைத்துப் போகும் சமயம் சற்று தூரத்தில் இருந்த குடிசையை பார்த்ததும் அவளுக்குப் புத்துயிர் வந்ததுபோல் இருந்தது.வேகமாக நடந்து அங்கு சென்றுபார்த்தபோது, இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு அவள் நிறுத்திவைத்த இடத்திலேயே அவள் ஸ்கூட்டர் இருந்தது!

வெளியில் யாருமில்லாததால் குடிசைக்குள் எட்டிப் பார்த்து,

"யாராவது இருக்கீங்களா "என்று கேட்டாள். குடிசையின் பின்புறத்திலிருந்து முன்பு பார்த்த பெண் வந்தாள்.

"வாங்கம்மா. வந்த வேலை முடிஞ்சிச்சா"என்று கேட்டாள்.

"முடிஞ்சுடுதம்மா. குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுக்கிறீங்களா"என்று கேட்டாள் அமலா.

"தரேம்மா. ரொம்ப களைச்சுப்போய் வந்திருக்கீங்களே.இப்படியே பின்னம் பக்கம் போனீங்கன்னா கிணத்தடில தண்ணி இருக்கு.முகம் களுவிக்கலாம்"என்று சொல்லிக்கொண்டே அவள் குடிசைக்குள் போனாள்.அமலா முகம் கழுவிக்கொண்டு வந்தபோது அந்த பெண் கைகளில் ஒரு சீவிய இளனியும் ஒரு கண்ணாடி டம்ளரும் இருந்தது.இளநீரை டம்ளரில் ஊற்றி அமலாவிடம் கொடுத்தாள்.அவள் குடித்து முடித்ததும்,

"ஏதாச்சும் சாப்பிடுறீங்களாம்மா"என்று கேட்டாள்.

" வேண்டாம்மா. சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். ரொம்ப நன்றிம்மா" என்ற அமலா பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாயை நோட்டு ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.

"அய்ய, ரூவால்லாம் வேண்டாம்மா" என்று மறுத்த அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து அதில் ரூபாயை வைத்து அழுத்தி "வச்சுக்குங்க"எனற அமலா.மீண்டும் "நன்றிம்மா. நான் வரேன்"என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரை நகட்டிக்கொண்டு மெயின் ரோடுக்குச் சென்றாள்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அந்தத் டீவிக்காரனை சந்தித்து அவர்கள் 'லொகேஷன்' தேடப்போகும் பாதையை தெரிந்து கொண்டு. ஸ்கூட்டரை இங்கு கொண்டவந்து வைத்தது நல்லதாகப் போயிற்று என்று நினைத்துக் கொண்டே வீட்டை நோக்கி வண்டியைக் கிளம்பினாள்.

வீட்டு வாசலில் வந்து வண்டியை நிறுத்தியபோது திடீரென்று அவள் உடம்பிலிருந்து எதோ ஒன்று கழன்று சென்றது போலவும் பல நாட்களாக அழுத்திய பெறும் சுமை ஒன்று விலகியது போலவும் அவள் உணர்ந்தாள். மகிழ்ச்சியாக "அம்மா "என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளேபோனாள்.

"கொஞ்ச நாளா நீ எப்பட்ட்டியோ இருந்தடி அமலா.கவலையா இருந்தது. இன்னிக்குத்தான் பழழையபடி இருக்க" என்றாள் அம்மா.

அவள் மூலம் பழிதீர்த்துக் கொண்டு அவளைவிட்டு விலகிய வாசுகியின் ஆவியைப் பற்றி அமலாவுக்குத் தெரியாது.!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.