#கத்தியின்றி-இரத்திமின்றி


சிவாவுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் ...கெட்ட பழக்கம் இருந்தால் ஏதாவது குறைப்பாடு ஏற்படும் என்று மது -புகை என்று எந்த பழக்கமும் இல்லாதவனாக இருந்தான் ..கலப்பினம் செய்யப் பட்ட காய்கறி பிராய்லர் சிக்கன் கூட சேர்த்து கொள்ள மாட்டான் ....நல்ல படியாக படித்து முடித்தான் ..

நல்ல வேலையில் சேர்ந்தான் ...வீடு வாசல் என்று எல்லாமும் இருக்கிறது ,குடும்பத்தில் இவனுக்கென்று எந்த கடமையும் இல்லை ,ஒரே பிள்ளை என்பதால் அவன் நினைத்த படியே சரியான வயதில் சிவாவுக்கு பிடிச்ச மாதிரி நல்லா படிச்ச பொண்ணை திருமணம் செய்து வைத்தார்கள் ...இல்லற வாழ்க்கை இனிதாய் சென்றது..

சில மாதங்களுக்கு பிறகு

சிவாவின் மனைவி கிருத்திகா கர்ப்பம் ஆனாள்..அவன் மகிழ்ச்சிக்கு வானமே எல்லை ..துள்ளி குதித்தான்,சந்தோசத்தில் மிதந்தான் ..இதுவரை கனவாய் மட்டும் இருந்த மழலை செல்வம் கூடிய விரைவில் தன் கையில் தவழ போகிறான் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொண்டான் ...

கிருத்திகாவை அவள் தாய் பார்த்து கொண்டதை போல் கண்ணும் -கருத்துமாய் ஒரு குழந்தையை போல் பார்த்து கொண்டான்..சாப்பிட்ட தட்டை கூட எடுக்காதவன் கர்ப்பம் தரித்த மனைவிக்காக வீட்டு வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்தான் ...

பத்தாவது மாதத்தில் .....

ஒரு உயர்தர மருத்துவமனையில் தன் மனைவி கிருத்திகாவை சேர்த்தான் ...

டாக்டர் அந்த கிருத்திகா வலி எடுத்து கத்துறாங்க சுகப் பிரசவம் ஆயிடும்னு நினைக்குறேன் உடனே ICU கொண்டு போகட்டுமா என நர்ஸ் கேட்டாள்...

அடி போடி பைத்தியக்காரி சுகப் பிரசவம் ஆனா என்னுடைய ஹாஸ்பிட்டலோட பத்தாவது மாடியை எப்படி கட்டுறதாம்...வலி நிப்பாட்ட ஒரு ஆண்டி பயாடிக்

இன்ஜக்சன் போடு அப்புறம் குழந்தை தலை சுத்தி கிடக்கு சீரியஸ்னு பொய் சொல்லி சிசேரியன் பண்ண ஏற்பாடு பண்ணு..பொண்ணு வீட்ல முதல்ல ஐம்பதாயிரம் டெபாசிட் பண்ண சொல்லு ...

நர்ஸ் சொன்ன பொய்யால் சிவாவும் -கிருத்திகா குடும்பத்தினரும் நிலைகுலைந்து போயினர் ...அந்த இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி அந்த குடும்பத்தினரிடமிருந்து பணத்தை பெற்று கொண்டு ஆபரேஷன் செய்தனர் ...அந்த ஆபரேஷனில் ஜன்னி வந்து கிருத்திக்காவும்-வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து போயின ...அந்த செய்தி கேட்டு சிவா சித்த பிரம்மை பிடித்தவன் போல் தரையில் சாய்ந்தான்

இந்தியாவில் கத்தியின்றி -இரத்தமின்றி சுகப் பிரசவம் எப்போது ?


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.