“அம்மா நாளைக்கு.. நான் முதல் நாள் வேலைக்கு போறேன் .. என்னைய சரியா 6 மணிக்கு எழுப்பிவிட்று.. முதல் நாளே லேட்டா போகக்கூடாது'னு” - அம்மாகிட்ட சொன்னாலும்.. set பண்ணி வச்சிருந்த 6 மணி அலாரத்தை வெறிக்க பார்த்துட்டு இருந்தான் ஆதி ..

ஆமாங்க என் பெயர் ஆதி .. B .E பட்டதாரி .. இன்னைக்கு முக்கால்வாசி இளைஞர்களோடு கல்வி தகுதி அதுதான்.. B.E முடிக்குறது கஷ்டம்'னா ..அத படிச்சிட்டு.. படிச்ச துறையில வேலை கிடைக்கிறது அதைவிட கஷ்டம்.. வேற வேலைக்கு போகலாம்னா மனசு ஒத்துக்காது .. அதையும் மீறி வேற வேலை தேடுனா over qualification சொல்லி reject பண்ணிடுறாங்க .. எப்படியோ 2 வருஷ போராட்டத்துக்கு அப்புறம் நான் படிச்ச துறையிலேயே வேலை கிடைச்சிருச்சு..

இன்னைக்கு முதல் நாள் வேலை..

மணி 6 ஆச்சு .. வேக வேகமா கிளம்பி .. கொஞ்ச நாளா கும்பிடாத சாமியெல்லாம் கும்பிட்டு .. அம்மா, அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு கிளம்பி போனேன் ..

இரவு 7 மணி ..

ஆதி இன்னைக்கு ஆபீஸ்'ல நடந்ததை அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தான் .. யாரோ calling bell அடிச்சாங்க .. ஆதி அம்மா கதவை திறந்தாங்க .. அது பக்கத்துக்கு வீட்டுக்காரம்மா ..

ஆதி அம்மாகிட்ட அவுங்க..

"என்னம்மா ஆதி'ய நான் சொன்ன மனநல மருத்துவர்கிட்ட காமிச்சீங்களா.. இன்னைக்கு ஆதி பார்க்'ல தனியா உட்கார்ந்து .. ஏதோ புலம்பிகிட்டு இருந்தான்.. பாவம் புள்ள .. படிச்ச படிப்புக்கு வேலைகிடைக்காம இப்படி ஆயிட்டானே ..".

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.