(பொன் குலேன்திரன் கனடா)

.

ஈழத்து போர் 1980 இல் நடந்து கொண்டிருந்த காலம் அது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும். கொழும்பிலும் மனித உரிமை மீறல்களுக்கு உற்படுத்தப் பட்டனர். இலங்கைக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தாலும் சிறுபான்மை இனத்துக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. அடிக்கடி இனக்கலவரங்கள் அரசின் ஆதரவுடன் வெடித்தது. 1983 இல் நடந்த இனக்கலவரத்தை இன்றும் தமிழர்கலால் மறக்க முடியாது. அதன் விளைவே ஈழத்து போர். பல தமிழ் மக்கள் அகதிகளாக அபயம் தேடி பிறநாடுகளுக்குச் சென்றனர்.


பாக்கு நீரணையை 24 மைல்கள் தோணிகளில் அகதிகளாக தமிழ்நாடு சென்றவர்கள் பலர். அதிக பணம் கொடுத்து அகதிகள் பிறநாடுகளுக்குச் செல்வது எல்லோராலும் முடியாத காரியம், குறைந்த செலவில் பொதுகை கப்பலில் கனடா சென்ற அகதிகள் பலரின் கதை இது. முப்பத்தைந்து வருட காலத்தில் கனடாவுக்கு அகதிகலாக சென்ற பலர் இன்று படித்து ஆங்கிலம் சரளமாக பேசுபவர்களாக வாழத் தொடங்கினர். தமது கடுமயன உழைப்பினால் தங்கள் திறமையை பாவித்து நல்ல அந்தஸ்தில் வாழ்கிறார்கள். தாம் கனடாவில் வந்து இறங்கியபோது தங்களுக்கு உதவியவர்களை மறக்காமல், அகதிகளாக வந்த பலர் சென்று, உதவியவர்களை சந்தித்து. பரிசுகள் வழங்கி. பழைய அனுபவத்தைப் பேசி மகிழ்ந்தனர்.

*****

“சமுத்திர இளவரசி” என்ற பழைய பொதிகைக் கப்பலில் அகதிகளாக பயணித்தவர்களில் ஊடக வியலாளர், மின் கருவிகளை திருத்தும் ஒருவர்,. படித்து பட்டம் பெற்று வேலை இல்லாதவர்கள், கார் மெச்கானிக், வைத்திய துறையில் அனுபவம் பெற்ற ஒருவர் , இரு சாரதிகள், இயக்கத்தில் இருந்து வெளியே வந்த போராளிகள். பெண்கள்.. சிறியவர்கள் முதியோர் என்று பலதரப்பட்ட மக்கள் அந்த அகதிகள் கூட்டத்தில் இருந்தனர். ஒவொருவருக்கும் அகதிகளாக அபயம் தேடி பிற நாட்டுக்கு செல்ல முயற்சித்ததில் ஒரு காரணம் இருந்தது. இக் கூட்டத்தில் எமது கதையின் கதாநாயகன் ராஜா என்று அழைக்கபடும் ராஜலிங்கம் கப்பலில் பயணம் செய்த அகதிகள் கூடத்தில் பலரின் மனதை காவர்ந்தவன். கல்வியைத் தொடரமுடியாத திறமை உள்ள வா;லிபர்களில்.. சுயமாக கைத்தொழில் செய்து மேலும் முன்னேற முடியாதவர்களில் ராஜாவும் ஒருவன்.. இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு பயந்த ஆண்களும், பெண்களும். முதியோரும். பல குடும்பங்களும் அபயம் தேடி செல்ல தேந்தது எடுத்த நாடுகளில் அவுஸ்திரேலியா.. இங்கிலாந்து, ஐரோப்பியா, கனடா போன்ற நாடுகளாகும். வசதி படைத்தவர்கள் ஏஜென்சிக்கு அதிக பணம் கொடுத்து விமானம் மூலம் பல நாடுகளில் தங்கிச் செல்லும் வழியைக் கையாண்டார்கள். பணம் வசதி குறைந்தவர்கள் பொதிகைக் கப்பலில் பொதிகைகலோடு பொதிகைகலாய் குறைந்த செலவில் பயணம் செய்யும் வழியைக் கையாண்டவர்களில். கிளிநொச்சியை சேர்ந்த ராஜலிங்கம் என்ற ராஜாவும் ஒருவன்;


இருபது வயதான ராஜா , புத்திசாலியான, அமைதியான மாணவன். சிறு வயதிலேயே மின்சார உபகரணங்களைத் திருத்தும் ஆற்றல் படைத்தவன். தான், ஒரு மின்சார பொறியியலாளனாக தகுதி பெறவேண்டும் என்ற இலட்சியத்துடன் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு காத்திருந்தான். ராஜா தனது கைகளையும் மூளையையும் பாவித்து எந்த ஒரு சிக்கலான மின் கருவியினது பிரச்சனையும் சில நிமடங்களில் தீர்த்து வைக்கும் திறமை வாய்ந்தவன். சிவலிங்கம் குடும்பத்துக்கு ராஜா மூத்த மகனாக இருப்பதால், அவன் ஒரு மின் பொறியியலாலனாவான் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு இருந்தது.. அவனுக்கு தன் சகோதரி செல்வியை ஆதரிக்கும் கடமை வேறு அவனுக்கு இருந்தது செல்வி அவனுக்கு மூன்று வயது இளையள், அவளைத் திருமணம் செய்துவைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அவள் வாழ்வதை உறுதிப்படுத்துவது அவனது நோக்கமாய் இருந்தது. தான் வெளிநாட்டில் குடியேறியவுடன், அவளுக்கு நிதியுதவி அளித்து, அவளை தான் வாழும் நாட்டிற்கு வரவழைப்பது அவன் திட்டம்.. ராஜாவின் பெற்றோர்கள் தங்கள் மகனின் தலைவிதி ஈழத்துப் போருடன் மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.

*****

ராஜாவுக்கு ஆஸ்துமா வியாதி, ஆறு வயது முதல் கொண்டே இருந்து வந்த படியால் சில சமையம் மூச்சு விட கஷ்டப்படுவான். . ராஜா தனது நோக்கை அடைய நோயோடு போராட வேண்டியிருந்தது. மருத்துவ வசதிகள் குறைந்த காலம் அது. ஈழத்து போர் நடந்து கொண்டிருந்த காலமாகையால் விடுதலைப் புலிகளுக்கு அவனது தொழில்நுட்ப திறமை அவர்கள் பாவிக்கும் இயந்திரங்களை திருத்த முக்கியமாகத் தேவைப் பட்டது. அவர்கள் அவனை அணுகி அவன் சேவையை இயக்கத்துக்குத் தரும்படி கேட்டார்கள். தான் ஆரோக்கியமான இளைஞன் அல்ல, ஆஸ்துமா வியாதியால் கஷ்டப் படுபவன் ஆகையால் அவர்களோடு சேர்ந்து சேவை செய்வதற்கு தகுதியற்றவன் என்று அவர்களிடம் ராஜா கூறினான்.


ஒரு முறை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சிக்கலான மின்சார வேலைக்கு அவர்களுக்கு ராஜா உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். அவனால் மறுக்க முடியவில்லை பெற்றோர்களின் அனுமதியோடு அடிக்கடி இயக்கத்தின் மின்சார இயந்திரங்களை அவர்கள் கேட்டபோது பழுதுபார்த்தான்.


ராஜாவின் பெற்றோரின் குடும்பத்தின் பகைவர்கள், ராஜா புலிகள் இயக்கத்துக்கு உதவுவதை இலங்கை இராணுவத்துக்கு சொல்லியதால், புலிகள் இயக்கத்தில் ராஜா உறுப்பினராக இருப்பதாக இராணுவம் சந்தேகித்தது., ராஜா இயக்கத்துக்கு உதவுவதை பற்றி ஒரு இராணுவ மேஜர் அறிந்ததால், , அவனது பெற்றோரை அடிக்கடி சந்தித்து. விசாரணை செய்து துன்புறுத்த தொடங்கினார்.


இராஜலிங்கத்தின் தந்தை சிவலிங்கம் தனது மகன் இலங்கையில் எதிர்கொள்ளும் அபாயத்தை சகித்துக்கொள்ள முடியாது என்பதை உணந்தார், இறுதியாக தனது மகனை பாதுகாப்பு காரணங்களுக்காக கனடாவுக்கு அனுப்பி வைக்க முடிவு எடுத்தார், கனடாவில் உள்ள அவனின் தாய் மாமாவின் உதவியுடன் ராஜா தன திறமைகயையும் அறிவையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிவலிங்கம் முடிவு செய்தார்.


பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த ஒரு அகதிகள் குழு தாய்லாந்தில் இருந்து ஒரு பொதுகைக் கப்பல் மூலம் கனடா செல்லத் திட்டமிட்டது., கனடாவை கப்லில் அடைய பல ஆயிரம் மைல்கள் தூரத்துக்குப் பயணிக்கும் சிரமங்களை எதிர்கொள்ள தயாராக இருந்தனர்.. அவர்கள் பயணிக்கும் “சமுத்திர இளவரசி” பல நாடுகளின் துறைமுகளைத் தழுவிச் செல்வதால் பயணத்தில் ஏற்படும் கஷ்டங்களை அகதிகள் நன்கு அறிந்திருந்தனர்,


சிவலிங்கத்தின் நண்பரான செல்லையா, மாலைதீவு கப்பல் நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர் ஒரு சரக்குக் கப்பலில் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளை அனுப்பும் ஒரு ஏஜென்சியுடன் தொடர்பு கொண்டார். அகதிகளை இலங்கையிலிருந்து கப்பலில் வெளி நாடுகளுக்கு அனுப்புவது கடினமாக உள்ளது, ஏனென்றால் கப்பலில் பயணிப்பதற்கு முன்னர், பயணிகளிடமிருந்து பணம் பெற வேண்டும். கப்பல் இடைநிறுத்தப்பட்ட இடங்களில் தொடர்பு இடங்களுக்கு தேவையான கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.


"சிவா, உங்கள் மகனைக் கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்தீர்களா? வியாபாரத்தின் மூலம் கமிஷனைப் பெறுவதில் செல்லயா மிகவும் ஆர்வமாக இருந்தார்.


"செல்லையா, நான் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய்? பலர் கப்பல் மற்றும் விமானம் மூலம் அகதிகளாக கனடா சென்றிருக்கிறார்கள். என் மகன் ஒரு திறமையான பையன் மற்றும் அவனால் ஆங்கிலத்தில் உரையாட முடியும். ஒரு பொறியாளராக பட்டம் பெறக் கூடிய தகுதி அவனுக்கு இருந்தும், . இந்த நாட்டில் திறமையான மாணவர்களுக்கு இடமில்லை., அவன் தனது இலட்சியத்தை சந்திக்க வேண்டும். கனடாவிலிருந்த அவரது மாமா என்னிடம் பேசினார், என் மகனைப் போன்ற திறமையான இளைஞர்களுக்கு கனடாவில் நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறினார். "


"நான் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று உனக்குத் தெரியுமா? கனடாவில் அகதிகளாக ஒரு தாய்லாந்து சரக்குக் கப்பலில் அகதிகள் குழு செல்கின்றனர். அக் கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவவுக்கு செல்வதாக கேள்விப்பட்டேன். அந்த கப்பலில் வசதிகள் இல்லை. அந்த கப்பலில் சுமார் 400 அகதிகள் பயணம் செய்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு நல்ல உணவு மற்றும் வசதிகளை தியாகம் செய்வதற்கு கப்பலில் பயணம் செயும் அகதிகள் தயாராக இருக்க வேண்டும், மேலும் கபபல் பெரும் அலைகளை எதிர்கொள்ளும். கப்பல் மிகப்பெரியதாக இல்லாததால் மோசமான வானிலை ஏற்படுவதற்கான அபாயத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது. அக் கப்பல். ஒரு புயல் பாதையில். அக் கப்பல் சரக்குகளையும், அகதிகளையும் சுமந்து கொண்டு செல்ல வேண்டும். இது அறைகள் மற்றும் படுக்கைகள் உள்ள ஒரு பயணிகள் கப்பல் அல்ல. சரியான மருத்துவ வசதி இல்லை" செல்லையா சரக்கு கப்ளில் பயணிக்கும் அபாயயத்தையும் வசதிகள் இல்லாமையும் ராஜாவின் தந்தைக்கு விளக்கினர்.


"இந்த அகதிகளின் பொதிகைக் கப்பல் பயணத்தைப் பற்றி நான் கேள்விபட்டிருக்கிறேன். அகதிகள் குறைந்த செலவில் பயணத்தை விரும்பினால், அவர்கள் வசதிகளையும் , பாதுகாப்பையும் தியாகம் செய்ய வேண்டும் தானே. கனடாவில் ராஜாவின் மாமாவோடு இதைப் பற்றிப் பேசினேன். செலவு அதிகம் இல்லையென்றால் பொதிகைக் கப்பலில் போவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர். கனடாவுக்கு ராஜா வந்தபின் அவனது வசகிகளைத் தான் கவனிப்பதாக எனக்கு உறுதி அளித்தார்.. எனது மைத்துனரின் தொழிற்சாலைக்கு மின்சக்தி துறையில் ராஜாவுக்கு வேலை கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது. கனடாவில் திறமையான மின் கருவிகளைத் திருத்தும் வல்லுனர்களின் பற்றாக்குறை உள்ளது " சிவா சொன்னார்.


"அது நல்லது சிவா.. ராஜா] கனடாவை அடைந்ததும் உடனே வேலை செய்து, கனடாவில் வரி செலுத்துவோர் பணத்தை விரயம் செய்யாமால் வாழ உதவும். எங்கள் ஊர் மக்களுடன் அகதிகளாப் போகும் பயணத்தை பற்றி ஒன்றுமே பேச வேண்டாம். அவர்கள் வதந்திகள் கதைத்து அதிகபட்ச சேதத்தை செய்வார்கள். " செல்லையா சொன்னார்.


" செல்லையா அது எனக்குத் தெரியும். நான் உங்களுடன் மட்டுமே இது பற்றி பேசுகிறேன். ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்கு இந்த ஏஜென்சி இரகசியமாக இரண்டு முறை அகதிகளை அனுப்பியுள்ளது. அந்த முறை கப்பலில் போகும் அகதிகள் குழுக்களில் இடம் இருந்ததால் நீங்கள் ராஜாவையும் அனுப்ப முடியுமா?


“ உனக்கு இந்த உதவியை செய்யாமல், நான் வேறு யாருக்கு செய்வது. இன்னும் மூன்று நாட்களில் உனது மகன் ராஜாவை கப்பல் பயணத்துக்கு தயாராகச் சொல்::, என்தரர் செல்லயா.


*****

ராஜா தாய்லாந்துககு பயணமாகி அங்கிருந்து அந் நாட்டுச் பொதிகைக் கப்பலான சமுத்திர இளவரசியில் தன் ஆபத்தான பயணத்தை ஆரம்பித்தான். பயணிக்கும் அகதிகள் கூட்டத்தைக் கண்ணோட்டம் விட்டான். அக் கூட்டத்தில் நான்கு இளைஞர்களையும், ஒரு பெண்மணியையும் மட்டுமே ராஜாவால் அடையாளம் காண முடிந்தது.. அக்கூட்டத்தில் ஒரு டிரக் டிரைவர்; மற்ற பல இளைஞர்கள். பெண்கள்,சிறுவர்கள், நான்கு முதியவர்கள். சமையல்காரர்களும் போராளிகளும் இருந்தனர். அவனுக்கு தெரிந்த அப் பெண்மணி இருபது வயதில் இயக்கத்தில் சேர்ந்த ஒரு பெண்மணியான மாலதி, அவளை ராஜா இயக்கத்துக்கு உதவிய போது கண்டிருந்தான், கப்பலில் அவளோடு இயக்கத்தை விட்டு வெளியே வந்த காரணத்தை கேட்டான்,


:”ராஜா உன்னை இயக்கத்தில் பல தடவை சந்தித்திருக்கிறேன். இயக்கத்தின் கட்டுப்பாட்டினால் உம்மோடு என்னால் பேச முடியவில்லை. நீர் என்னைப் போல் வன்னியில் உள்ள கிளிநோச்சியச் சேர்ந்தவன் எண்டு எனக்குத் tதெரியும். தமிழ் ஈழம் பெற நானும் என் இரு சினேகிதிகளும் இயக்கத்தில் சேர்ந்தோம். நான் அப்போது ஏ லெவல் படித்து கொண்டிருந்தேன். படித்து பட்டம் பெற்று அறிவியல் ஆசிரியையாக வேண்டும் என்பது என் குறிக்கோள். எனது குடும்பத்தில் பெற்றோரோடு சேர்த்து ஐவர்.. நான் மூத்தவள். எனக்கு ஒரு சகோதரி ஒரு சகோதரன். என் அப்பா ஒரு விவசாயி. என் அம்மா பரந்தன் கல்லூரி ஒன்றில் தமிழ் ஆசிரியை. என் விதவை அம்மம்மா எங்களோடு வாழ்கிறாள். எனது கடமையை யோசித்து என் தேக நலத்தை காட்டி இயக்கத்தை விடு வெளியே வந்தேன்’. சிலர் பணம் கொடுத்து உதவியதால் கப்பல் எறினேன்” மாலதி தன் ,நிலலையைச் சொன்னாள்.

“ ஏன் மாலதி உனக்கு என்ன உடல் பிரச்சனை”

“ எனக்கு பெலவீனமான இருதயம்.. இயக்கத்தில் இருக்கும்போது இருமுறை மூர்ச்சித்து விழுந்துவிட்டேன்”

“ அப்போ என்னைப் போல் என்று சொல். எனக்கு சிறு வயது முதல் கொன்டே ஆஸ்துமா வியாதி” ராஜா தன் தேக நலம் பற்றி சொன்னான்.

*****

அந்தக் கூட்டத்தில் இருந்த அதிகமான மக்கள் பலர் இராணுவத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விரும்பியவர்களே. சிலருக்கு கனடாவில் உறவினர்கள் இருந்தார்கள். அந்த கூட்டத்தில் இரு பெண்கள் நேர்சாக யாழ்ப்பாணத்தில் வேலை செய்தவர்கள்.
ராஜா கூட்டத்தில் அறிமுகமானவர்களில் பாலன் என்ற லோரி டிரைவரும் ஒருவர். இயகத்துக்கு ஆயதங்களைத் தன் லொரியில் ஏற்றி சென்றதுக்கு இராணுவம் தன்னை சந்தேகித்து கைது செய்ய தேடியதினால் தன் ஊயிருக்கே ஆபத்து என்பதை உணர்ந்து வெளிநாடு செல்ல தீர்மானித்தாகச் சொன்னார்.

ராஜா கூட்டத்தில் இருந்த சண்முகம் என்ற ஊடகவியலாலரோடு பேசியபோது .தான் புலிகள் இக்கத்தை ஆதரித்து எழுதியதுக்காக இராணுவம் பல தடவை தன்னை குறுக்கு விசாரணை செய்து துன்புருத்தினார்கள். பத்திரிகை சுதந்திரம்.நம் நாட்டில் இல்லை. பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர் என் உயருக்கு ஆபத்து என உணர்ந்தே வெளிநாடு செல்லத் தீர்மானித்தேன். கனடாவில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் ஆயிரக் கணக்கான் ஐரோப்பியார்கள் கனடவுக்கு அகதிகளாக கலிபாக்ஸ் பியர் 21 போய் இறங்கியாதாக கனடாவின் வரலாறு சொல்கிறது” என்றரர் சண்முகம்

கூட்டத்தில் இருந்தவர்களில் ராஜாவோடு நண்பரானவர் தொழில் நுட்பவாதியான கார் மெச்கானிக் செல்வம் என்பவரும் ஒருவர். அவரும் ராஜாவை போல் திறமைசாலி. பல வகையான வாகனங்களைத் திருத்திய அனுபவம் அவருக்கு உண்டு. புலிகள் இயக்கதுக்;கு பல தடவை இயக்கத்தின் வாகனங்களைத் திருத்திக் கொடுத்துள்ளார். அவரோடு பொட்டியாக இன்னொரு கார்கள் திருத்தும் கராஜின் உரிமையாளர் இராணுவத்துக்கு செல்வம் இயக்கத்துக்கு அவர்களின் வாகனங்களை திருத்திக் கொடுப்பதாக செல்வத்தை காட்டிக் கொடுத்ததினால், இரணுவம் செல்வத்தை கைது செய்ய முயன்றது. அதன் காரணமாய் பிற நாடு செல்ல முடிவேடுத்தாக ராஜாவுக்கு சொன்னார்


அப்போதிக்கரியாக முல்லைத்தீவில் வேலை செய்த கணேஷ் என்பவர் ராஜாவுக்கு சொன்ன கதை சற்று வித்தியசமானது. கணேஷ் வன்னி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கைராசிக்காரன். அதனால் அவரைத் தேடி வரும் நோயாளிகள் அனேகர். அதை கண்ட மற்றைய வைத்தியர்களுக்குப் பொறாமை. கணேஷ் அடிகடி போரில் காயமுற்ற போராளிகளுக்கு வைத்தியம் செய்வதுண்டு. விடுதலை புலிகளுக்கு அவர் உதவுகிறதுக்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அவரின் ஒரே மகன் இயக்கத்தில் சேர்ந்து பூநகரி போரில் இறந்ததே அவரை இயகத்துக்கு உதவ செய்தது, கணேஷின் மேல் பொறாமை கொண்டவர்கள் அவர் இயக்கத்துக்கு உதவுவதை பற்றி இராணுவத்துக்கு முறையிட்டனர். இராணுவம் அவரை’ கைது செய்ய தெண்டித்த போது இயகத்தின் உதவியோடு தப்பி மறைமுகமாக வாழ்ந்தார். அவரும் மனைவியும் இருந்த சொத்துகளை விற்று கிடைத்த பணத்தை பாவித்து அகதிகளாக, கப்பலில் கனடா போக முடிவு எடுத்தார்கள். அவருடைய அண்ணன் கனடாவில் இருப்பதினால் அவர் கனடாவுக்கு போக தீர்மானித்தார்.


அவரை போன்று வல்வெட்டித்துறையில் பிரசுரம் நடத்திய நாதன் என்பவரும் இயக்கத்திற்கு செய்தி மடல் தன் பிரசுரத்தில் அச்சடித்ததுககு இராணுவத்தால் தேடப்பட்டார்.


இப்படி அகதிகள் கூடத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பின்னால் அகதியான

ஒரு கதை இருந்தது.


******

பொதிகைக் கப்பல் தாய்லாந்து , மற்றும் சிங்கப்பூர் துறைமுகதை அடைந்தது அகதிகளை தரை இறக் கப்பல் கேப்டன் ஜோன் முய்ற்சித்தபோது துரைமுக அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை கப்பல் தன் பயணத்தைத் தொடர்ந்தது

மடகாஸ்கர். தென் ஆபிரிக்கா , நம்பியா வேனசூலா. பனாமா லொஸ்ஏன்ஜெல்ஸ் ஆகிய துறைமுகங்களை தொட்டு இறுதியாக இந்து சமுத்திரம், அட்லாண்டிக் சமுத்திரம். பசிபிக் சமுத்திரம் வழியே பயனத்தை தொடங்கியது.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ப்ரின்ஸ் ரூபெர்ட் துறைமுகத்தை அடைவதே இலக்கு. இந்த தேசங்களில் கப்பலில் அகதிகளை அனுப்பிய ஏஜென்சியுக்கு தொடர்பாளர்கள் இருந்தனர்.

.

கப்பல் மூன்று மாத பயணத்தின் பின் பசிபிக் சமுத்த்திரத்தை அடைந்தது அமெரிக்க லொஸ்ஏன்ஜெல்ஸ் கரையோரக் காவலர்கள் கப்பல் இறங்குவதற்கு முன்னர் கப்பலை துறைமுகத்திற்கு அனுப்பப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூட்டத்தில் பேசி கொண்டனர்.. கூட்டத்தில் ஆறு மாத கர்ப்பிணி பெண்ஒருத்தி கப்பலின் தள்ளாட்டத்தால் அடிகடி வாந்தி எடுத்தபடியே இருந்தாள். அவளை கணேசம் நேர்சாக வேலை செய்த அனுபவம் உள்ள இரு பெண்கள் மாலதியின் உதவியோடு கவனித்து வந்தனர்..

,

ராஜா அவர்களுக்கு உதவியாளராகவும், மக்களுக்கு அன்பாகவும், அவர்களோடு உணவுகளுடன் தனது உணவுகளை பகிர்ந்தான். ராஜா ஆறு மாதங்களுக்கு போதுமான அளவுக்கு அவனின் குடும்ப மருத்துவர கொடுத்த தேவையான மருத்தை ராஜா திட்டமிட்டு எடுத்துச் சென்றான். அவனது உடல்நிலை அவனுக்குத் தெரியும். ராஜா கனடாவை அடையும்வரை தன் உடல்நலம் பாதிக்கப்படாது என்பதை தன் குடும்ப வைத்தியரிடம் உறுதி செய்யத பின்னரே தனது பயணத்தை ஆரம்பித்தான்.


பொதுகைக் கப்பல் இரு தடவை புயலினை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. பேரலைகள் கப்பலைத் தள்ளாட வைத்தது. ஒரு சமயம் கப்பல் கவிழ்ந்து விடுமோ என்று அகதிகள் பயந்தனர். பயணிகள் எல்லோரும் “ கடவுளே எம்மைக் காப்பாற்று” என ஒலமிட்டனர். சமுத்திர இளவரசி ஒரு பழைய கப்பல்’ என்ற படியால் அதன் என்ஜின் செயல் இழந்தது. கப்பல் மேலும் தன பயணத்தைத் தொடர முடியாது பசிபிக் சமுத்திரத்தில் அமெரிக்க கரையில் இருந்து பல மைல் தூரத்தில் அசையாது நின்றது. கப்பலின் என்ஜினியர் வில்லியம் எவளவோ முயன்றும் என்ஜினின் மோட்டர் வேலை செய்யாயததன் காரணத்தைக் கண்டு பிடித்து திருத்த முடியவில்லை. இன்னும் சில நாட்களில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை அடைந்து விடலாம். அதற்குள் இந்த பிரச்சனையா என கப்பலின் கேப்டன் ஜான் என்ன செய்வது என்று கவலைப்பட்டார். நிலையை பயணிகளுக்கு ஏடுத்து சொல்லி அமைதியாக இருக்கும் படி வேண்டினர்.


கப்பலில் இருந்த மாலதி ராஜாவின் மின் கருவிகளை திருத்தும் திறமை பற்றி நன்கு அறிந்திருந்தாள். அவள் உடனே கேப்டனை பார்த்து

“ சேர் இந்த கூட்டத்தில் மின்சாரக் கருவிகளை திருத்தும் திறமையான டேச்னிசியன் ஒருவர். இருக்கிறார். அவரால் என்ஜினின் மோட்டாரில் உள்ள பிழையை கண்டுபிடித்து திருத்த முடியும் நீங்கள் அனுமதித்தால்” என்றாள்.


“அப்படியா?. யார் அவர்” கேப்டன் கேட்டார்.


“ இதோ என் அருசில் நிற்கும் ராஜா என்ற இவர் தான் சேர்”


“ என்ன ராஜா, உம்மால் பெரியத் திருத்திய அனுபவம் உண்டா” கேப்டன் ராஜாவைப் பார்த்துக் கேட்டர்.


“என்னால் ஓரளவுக்கு முடியும். சேர். எனக்கு மிக முக்கியம் பயணிகள் உயிரோடு கனடா போய் சேர வேண்டும் சேர். அதற்காக என்ன உதவியும்” செய்யத் நான் தயார் சேர்.” ராஜா சொன்னான்.


“அப்படியானால் உமக்கு தேவையான கருவிகளை கப்பலின் என்ஜினியர் வில்லியம் தருவார். உமக்கு உதவியகவும் இருப்பார். என்ன சொல்லுகிறீர்”?


“ சம்மதம் சேர். தாமதிக்காமல் வேலையை ஆரம்பிக்கிறேன்” என்று சொல்லயவாறு கேப்டனோடும், என்ஜினியர் வில்லியத்தோடும்.கருவிகளோடு

என்ஜின் அறைக்கு ராஜா போனான்.


*****

என்ஜினில் உள்ள மோட்டர் இயங்காததுக்கு காரணம் என்ன என்பதை கண்டு பிடிக்க ராஜாவுக்கு கேப்டன் ஜான் அனுமதி அளித்து, சோதனை உபகரணங்களை ராஜாவுக்கு வழங்கினார். அரை மணி நேரத்தில் ராஜாவால் மோட்டார் சரி செய்யப்பட்டு இயங்கத் தொடங்கியது. கப்பலில் இருந்த பயணிகள் கைகளை தட்டி தங்கள் உயிர்களை ராஜா காப்பாற்றி விட்டான் என்று ஆரவாரம் செய்தனர்.. கப்பல் அசையத் தொடங்கியது. ராஜா செய்த மிகச்சிறந்த வேலைக்காக ராஜவை பயணிகளும். கப்பலில் வேலை செய்வோரும் பாராட்டினார்கள் .


ராஜா மோட்டரை பழுதுபார்க்கும் முறையைக் கவனித்த கேப்டன் ஜான் அவனை கப்பலில் வேலைக்கு அமர்த்த விரும்பினார். ஆனால் ராஜன் அதை ஏற்க மறுத்துவிட்டான். ராஜாவின் முக்கிய நோக்கம் கனடாவை பாதுகாப்பாக அடைந்து தன் மாமாவைச் சந்திப்பதாகும்.


ராஜா இயக்கத்தில் இருந்தபோது, ராஜாவின் திறமை மாலதிக்கு நன்கு தெரியும். அவர்கள் இருவரும் இயக்கத்தில் இருந்த அனுபவத்தை பரிமாறிக் கொண்டனர். மாலதி ராஜாவை காதலிக்கத் தொடங்கினார், அது கப்பலில் ஒரு காதல் விவகாரமாக மாறியது. மாலதி கனடாவில் ராஜா தங்கப்போகும் விவரங்களை அறிந்து கொள்ள விரும்பினாள், கனடா அடைத்தும் அவரை சந்திப்பதற்கும், அவர்களது நட்பு தொடருவதற்கும், மற்றும் ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் அவள் விரும்பினாள்.


திடீரென ஒரு நாள், ராஜாவுக்கு மூச்சுத்திணறல் காய்ச்சலுடன் ஏற்பட்டது. ராஜனின் உடல்நிலை மோசமாவதை கண்ட அபோத்திகரி கணேஷ் கப்பலின் கேப்டன் ஜோனுக்கு ராஜாவின் உடல் நிலையை எடுத்துச் சொன்னார் கேப்டன் பதற்றமடைந்தார். கப்பல் பாதுகாப்பாக அகதிகளைப் பாதுகாப்பாக கனடா சேர்க்கும் வரை ராஜாவின் உயிரை சொத்தாகக் கருதினார்.


கப்பல் ஊழியர்களை தேக நலத்தை கண்காணிக்கும் மருத்துவர் ராஜாவின் நோயுற்றிருப்பதைக் கணேஷ் மூலம் கேட்டறிந்தார். ராஜா தான் ஒரு ஆஸ்துமா நோயாளியென சொன்னபோது அது ஒரு சிக்கலானதாக பிரச்சனை என்பதை மருதுவர் அறிந்தார்.. . மாலதி ராசாவை ஒரு பெண் சினேகிதியாக இருந்து கவனித்து வந்தார்.. கப்பல் அவரை நேசித்த பல அகதி பயணிகளும் அவரது உடல்நிலை குறித்து கவலைப் பட்டனர். ராஜாவுக்காக பிராதித்தனர். எல்லா முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை . ராஜ திடீரென ஒரு நாள் ராஜா மூச்சுத்திணறினார். எல்லோரும் பயந்தனர் ராஜாவின் உயிருக்கு எதாவது நடந்து விடுமோ என்று கவலை பட்டனர். .

கேப்டன் ஜான் அருகில் உள்ள துறைமுகத்தோடு தொடர்பு கொண்டார்.. நடுக் கடலில் ராஜாவின் உயர் பிரிந்தது. ராஜாவின் உடலை கப்பலில் வைத்திருக்க கேப்டன் விரும்பவில்லை,காரணம் உடலை பதனிடும் வசதிகள் கப்பலில் இருக்கவில்லை. அதோடு கப்பலில் உள்ள மற்றவர்களின் தேகநலத்தைப் பாதிக்கும. ராஜாவை கப்பலில் அனுப்பிய ஏஜென்சியோடு தொடர்புகொண்டு ராஜாவின் பெற்றோருக்கு ராஜாவின் மரணத்தை பற்றி செய்தி அனுப்பினர். அவர்களின் அனுமதி பெற்று ராஜாவின் உடலை ஒரு பொலித்தீன் பாலித்தீன் பையில் போட்டு, தேவையான மதக் கிரிகைகள் செய்து, தேவாரம் படித்து. .பசிபிக் சமுத்திரத்தில் புதைத்தார்கள் ராஜாவின் உடல், கடல் உயிரினங்களுக்கு உணவு ஆனது. ராஜாவை கனடாவில் சந்திக்க காத்திருக்கும் ராஜாவின் மாமாவின் ஒப்படைக்கப்படுவதற்கு ராஜாவின் உடமை பொருட்களை கேப்டன் பாதுகாப்பாக வைத்தார்.


ராஜாவின் உடல் பசிபிக் சமுத்திரத்தில் சங்கமமாகும்’ முன், அகதிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்காக ராஜா செய்த சேவையையும், அகதிகள் கூட்டத்தில் இருந்த சிலரும் கப்பலில் கேப்டனும் ஒரு மாலுமியும் மாலதியும், ராஜாவின் திறமையை சேவையையும் பாராட்டிப் பேசினார்கள். அனேக அகதிகளிடம், ராஜாவின் தந்தையாருக்கு அவரது மகன் சேவைக்காக கொடுப்பதற்கு 10,000 டாலர்கள் அனேக அகதிகளிமிருந்து சேர்த்து கேப்டனிடம் கொடுத்தனர். .ஒரு நண்பரை இழந்த மாலதி கண்ணீர் விட்டு அழுதார்,. அவள் அவனை நேசித்தாள். சிலர் அதே நிலைமை அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறினர்.


பல நாட்கள் பயணத்தின் பின் ப்ரின்ஸ் ரூபெர்ட் துறைமுகத்தைக் கப்பல் அடைந்தது.அகதிகள் அனைவரையும் குடி வரவு அதிகாரிகள் குறுக்கு விசாரணை செய்து சர்வதேச பயங்கரவாதிகளோடு அகதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்று உர்ஜிதம் செய்த பின்னரே கனடாவில் வாழ அனுமதித்தனர்.


ஆண்டுகள் பல உருண்டோடின.. அகதிகளாக கப்பலில் வந்தவர்கள் பலர் ஆங்கிலம் படித்து, பல துறைகளில் வேலை செய்ய ஆரம்பித்தனர். கனடாவின் பொருளாதாரம் வளரத் துணை போனார்கள்.


(இது உண்மையும் கற்பனையும் கலந்த கதை),*****

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.