ஆண் என்பவன்

ஆண் பலத்திற்க்கு முதல்வன்
பாசத்திற்கு பதிவு அவன்
காதலிக்காக ஓய்வில்லாமல்
ஓடும் அலை அவன்..

காதலில் பல மடங்கு அன்பை வீசும்
மழை அவன்
சமூக அவலங்களை எதிர்க்கும்
தீ அவன்..

இதயத்தையும் உயிரையும் காதலிக்கு கொடுத்தவன்
பல யுகங்களுக்கு முன்பபே
பத்திர பதிவு செய்தவன்
ஒலைசுவடி முதல் எலக்ட்ரானிக் மெயில் வரை..

குடும்பத்திற்காக தன் உடலை
ஒய்வில்லாமல் கொடுத்தவன்
குழந்தைகளுக்கு முழு அன்பு அவன்
பெற்றவர்களுக்கு கடமை அவன்.

அன்பில் வான் அளவு உயர்ந்தவன்
உழைப்பில் தேய்ந்தவன்
உண்மையில் நல்லவன்
பெண்களுக்கு பிடித்தவன்..

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.