அந்தரங்கம் புனிதமானது ...

அப்பா ...அப்பா ..வேகமாக கத்தி கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர் ..கட்டிலில் படுத்திருந்தார் வேத நாயகம் ...

நாற்பது வயசுலேயே பக்கவாதம் வந்திருச்சு ..அவர் பார்த்த பேங்க் கிளார்க் வேலையை இப்ப அவரு சம்சாரம் ரேணுகா தான் பார்த்துகிட்டு இருக்காங்க ..அவங்களுக்கு ஒரே பையன் தான் ...காலேஜ் படிப்பை முடிச்சிட்டு ஒரு எம் .என் .சி கம்பெனியில் நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறான் ..கதிருக்கு பொண்ணு வேற பார்த்துகிட்டு வர்றாங்க..எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு வருசத்துல அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க ...

வேதநாயகத்தாலே மத்தவங்களை போல ஒரு பாத்ரூம் கூட தானா போயிட்டு வர முடியாது ..சமையல் வேலை ,வீட்டு வேலை மற்றும் வேத நாயகத்துக்கு எல்லாம் வேலையையும் செய்யுறது எல்லாமே அவர் சம்சாரம் ரேணுகா தான் ..எல்லாம் வேலையையும் சரியான நேரத்துல முடிச்சிட்டு பேங்க்ல போய் கிளார்க் வேலையையும் சரி வர செய்ய கூடிய சின்சியரான குடும்ப தலைவி ரேணுகா தான் ...இப்படி பட்ட அம்மாவால் தான் கதிர் இப்ப கத்தி கொண்டே வீட்டிற்கு வந்தான் ...

அப்பா ..அப்பா ...அம்மா இன்னைக்கு மதியானம் என்ன செஞ்சாங்க தெரியுமா ?

சொல்லவே நாக்கு கூசுதப்பா ....என் வயசு இருக்கும் அந்த பையனுக்கு..அவனோட சிரிச்சு சிரிச்சு பேசுனது மட்டுமில்லாம அவனுக்கு அவங்க கையாலேயே பப்லிக்கா வெட்கமே இல்லாம ஊட்டி விடுறாங்கப்பா ..என்னை பார்த்தும் கண்டுக்காமே போய்ட்டாங்கப்பா ...மனசே கஷ்டமா இருக்குப்பா ...அதான் உங்ககிட்டே சொல்றேன் என சொல்லிட்டு வேதநாயகம் மடியில் படுத்து அழுதான் ..உங்களுக்கு இந்த நிலைமை இல்லாம இருந்தா அம்மா இப்படி செஞ்சு இருப்பாங்களா அப்பா ?

நீங்க எவ்வளவு நல்லவர் ...நல்லா இருந்த காலத்துலேயே எந்த பெண்ணையும் திரும்பி பார்க்காதவர் ..பக்திமான் ...இந்த விஷயம் ஊர் உலகத்துக்கு தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கு தானப்பா அசிங்கம் ..கல்யாண வயசுல நான் இருந்தும் அம்மா ஏன்ப்பா இப்படி நடந்துங்கிறாங்க ....??

கதிர் கண்ணாலே பார்த்ததை வச்சு தப்பா பேசாதப்பா...அம்மா நல்லவங்க ...நீ போய் சாப்பிட்டிட்டு தூங்கு ..என்கிட்டே சொன்ன மாதிரி யார்கிட்டயும் சொல்லி அழாதே ...கதிர் நான் சொல்றதை மனசுல வச்சுக்கோ ...நான் வேணா கெட்டவனா இருக்கலாம் ஆனா உங்க அம்மா உத்தமிப்பா...அவளை பத்தி தப்பா பேசாதே ...உங்க அம்மா உன்னை பெற்றெடுக்க பாட்டி வீட்டுக்கு போய்ட்டாங்கப்பா ..அப்ப அப்பா வயசு கோளாறுல வீட்ல வேலை செஞ்ச 20 வயசு பெண்ணிடம் தவறா நடந்துக்கிட்டேன்ப்பா என்னாலே அவள் வயித்துல குழந்தை உண்டாச்சு ...பிரசவத்துல அந்த பொண்ணு இறந்திடுச்சுப்பா ..நான்செஞ்ச தப்புக்கு அந்த குழந்தைய அம்மா தான் ஊருக்கு தெரியாம பெற்றெடுத்த பிள்ளை போல தனி வீடு எடுத்து கண்ணும் கருத்துமா வளர்கிறப்பா ..அவனுக்கு உன்னை விட ஒரு வயசு கம்மி அவ்வளவு தான் ...அந்த குழந்தைக்கு நான் அப்பன்னாலும் உங்க அம்மா பெற்றெடுத்த தாய் இல்லை ...இருந்தாலும் நான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரமா அவ வளர்கிறா..இங்கேயே அந்த பையனை வளர்த்தா ஊரு உலகம் என்னை தப்பா பேசும்னு இப்படி செய்றாப்பா ... நான் செஞ்ச பாவத்துக்கு தான் அந்த ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்திட்டான் ..என்னாலே உங்க அம்மா கஷ்டப் படுறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா …நான் ராமன் இல்லைனாலும் உங்க அம்மா சீதைப்பா ....எங்க அந்தரங்கம் இத்தனை வருசமா புனிதமா இரகசியமா இருக்குறதுக்கு காரணம் உங்க அம்மாப்பா ..உங்க அம்மாவையே தப்பா சொன்னதால் தானப்பா இத்தனை வருசமா மனசுக்குள் பூட்டி வச்ச ரகசியத்தை சொல்ல வேண்டியதாயிற்று ...

அம்மா ரேணுகா வந்ததும் அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் கதிர் !!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.