தீராகாத‌ல்..!!

க‌ருப்பு வெள்ளை புகைப்ப‌டத்தில்...

நீ வான‌வில்.!
-----------------------------------------------------
ம‌திய‌ உண‌வுக்கு பிற‌கு வ‌ரும் தூக்க‌ம் போலவே..
உன் நினைவுக‌ள்..!

க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ போதை..!
-------------------------------------------------------------
தின‌ம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ந‌ல்ல‌தாம்.

உன‌க்கு இருப்ப‌தோ இர‌ண்டு க‌ன்ன‌‌ங்க‌ள்..!
------------------------------------------------------------
உன் புன்ன‌கை முடிவில் தோன்றும் வ‌ளைவும்.. 
அத‌ற்கு அடுத்த‌ க‌ன்ன‌க்குழியும்..!

ம்...அத்த‌னை சுல‌ப‌மில்லை 
உன் மேல் கொண்ட‌ தீரா காத‌ல்..!
------------------------------------------------------------
இன்னும் அழ‌காய் ஒளி வீசிய
பௌர்ண‌மி நிலா..
உன் நிழ‌ல் பார்த்து..!!
------------------------------------------------------------
கொடி போல் உன் மேல் ப‌ட‌ர்ந்து..
இடை(வெளி) இல்லா இட‌ங்க‌ளில் என்னை சுற்றிக் கொள்கிறேன்..

மீண்டு வ‌ருதல் முடியாது..
ஏன் என‌வும் தெரியாது..

அப்ப‌டியே இருக்க‌வும்..இற‌க்க‌வும்..ப‌ழ‌கிய‌ நெஞ்ச‌ம்..!!
------------------------------------------------------------
 தூக்க‌த்தில் உள‌றுவ‌து நோயாம்..

உன் பெய‌ர் சொல்வ‌து வ‌ர‌ம்தானே..!!
நீ சொல்.
------------------------------------------------------------
 ம‌ற‌ந்த‌ க‌ட‌வுளின் த‌ரிச‌னம்   
உன் க‌ண்க‌ளில்..!
துரோகி.
------------------------------------------------------------
இம்மையோ..!மறுமையோ..!
உன் இமையினின்று
இமைப்பொழுதும் பிரியா வ‌ர‌ம் வேண்டும்..!!
------------------------------------------------------------
அன்பின் ஆல‌ம‌ர‌ம் நீ..!
இளைப்பாற‌வா..!
ஊஞ்ச‌லாட‌வா..!
----------------------------------------------------------
என் நிஜ‌ங்க‌ளை திருடிக்கொள்
க‌ன‌வுக‌ளில் வாழ‌ விடு..!

க‌ற்று ம‌ற‌க்க‌ க‌ள‌வு போல் இல்லை..!
ஊறுணி கிண‌று போல் என்னில் நீ..!

முடிவிலி நினைவுக‌ளில் நெடுக‌வே
உன் முக‌ம்..!

ச‌ற்று முன் நிக‌ழ்ந்த‌ விப‌த்து போல் ப‌ர‌ப‌ர‌ப்பாய் 
உன் வ‌ருகையில் என் உல‌க‌ம்.
----------------------------------------------------------
முத்திப்போன‌ பைத்திய‌ம் போல‌ 
உன்ன‌ நென‌ச்சு சுத்துறேன்..

கழுத்து அறுப‌ட்ட‌ சேவ‌ல் போல‌
உன் பெய‌‌ர் சொல்லி துடிக்கிறேன்

காச‌ நோய்க்கு ம‌ருந்து க‌ண்ட‌ உல‌கம்..
உன் மேல் கொண்ட‌ ஆசை நோய்க்கு
என்ன‌ செய்யும்..

மோச‌க்காரி
ஆசை நெஞ்ச‌...! 
நீ என்ன‌ செஞ்ச‌..!

பரிவ‌ட்ட‌ம் க‌ட்டி..ப‌ல்ல‌க்கில் ஏற்றி
தின‌ம் தின‌ம் உன்ன‌ கொண்டாடுதே...!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     
எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.