“எதுக்கும்மா இதெல்லாம் எனக்கு இதெல்லாம் உபயோகப்படவே போறதில்லை.மாப்பிள்ளை வீட்டில் கட்டில்பீரோல்லாம் இருக்காதா?வெள்ளிப்பாத்திரம் வேற வாங்கி குவிச்சிருக்கே. நானோ வேலைக்கு போகப்போறேன்இதெல்லாம் பரண்ல தூங்கதான் போகுது. பத்திரமா இருக்குமான்னு டெய்லி கவலை வேறபடனும். எதுக்கு வேஸ்ட்டாபணம் செலவுபண்றே?” கல்யாணப்பெண் ஆனந்தி ஆதங்கப்பட்டாள்
“இதோ பார்!!”சபையில் சில விஷயங்கள் வைத்தால்தான் கெளவரமாக இருக்கும். நீ யூஸ் பண்றயோ இல்லையோஅதப்பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை. நான் கொடுக்கறத கொடுத்துட்றேன். நீ அதை என்ன வேணும்னாலும்செய்துக்கோ!!”.கல்யாண பரபரப்பில் படபடத்தாள் அம்மா விசாலாட்சி.
மாப்பிள்ளை வீட்டில் 50 பவுன் தான் கேட்டாங்க. நான் கூடுதலா 10பவுன் போட்றேன்னு சொல்லிட்டேன். நம்மளை மட்டமாநினைக்க கூடாதில்லையா?

”அம்மா எனக்கு நகையெல்லாமே பிடிக்காது”

“மாப்பிள்ளைக்கும் செயின் மோதிரம் ப்ரேஸ்லெட் எல்லாம் வாங்கிருக்கேண்டி”

“அவர் கழுத்தில் ஆஃபீஸ் ஐடி கார்டுதான் தொங்கவிட்டுக்கொண்டு போகப்போறார்.எதுக்கு இதெல்லாம்”

“உனக்கு மட்டுமே விதவிதமா கலர்கலரா 5 பட்டுப்புடவை எடுத்திருக்கேன்.ஒவ்வொன்னும் இருபதாயிரம்ரூபாய்.அப்பத்தான் வீடியோ போட்டோலல்லாம் நல்லா அழகா இருக்கும்”

“இந்தப்புடவையெல்லாம் வேஸ்ட்டா கப்போர்ட்லதான் தூங்கப்போகுது.ஒரு நாள் விஷேஷத்திற்காக இப்படிதேவையில்லாம பணம்,எனர்ஜி,டைம் எல்லாத்தையும் வேஸ்ட் பண்றியேம்மா”

”இதெல்லாம் சரி!!வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு எதுக்கு பைக் வாங்கி சீர்ல வச்சிருக்கே” கேலியாககேட்டாள் ஆனந்தியின் சித்தி சித்ரா.

”வெளிநாட்டு மாப்பிள்ளையாச்சே அவங்களுக்கு தகுந்தா போல நாம கொஞ்சம் காஸ்ட்லியா எல்லாம் பண்ணனுமா?இல்லையா?அப்போதானே எங்களுக்கு மதிப்பு மரியாதை”

“அம்மா!! மஹேஷ் அதெல்லாம் எதிர்பார்க்கறவர் இல்லை.நீ தேவையில்லாம அலட்டிக்காத”
ஆனந்தியோட பெரியப்பா சாதாரண மேனேஜர்தான் தான் சித்ரா ,அவர் தன் பொண்ணோட கல்யாணத்தை எவ்வளவுக்ராண்டா பண்ணினார் பார்த்தியா?

“ஆமா க்ராண்ட்தான் ஆனா எதுவுமே நல்லாஇல்ல.ஊர்லயே பெரிய மேரேஜ் ஆர்கனைசராம் அவர்கிட்டபொறுப்பையெல்லாம் கொடுத்துட்டார்.எல்லாமே அவங்களே பார்த்துப்பாங்களாம். கல்யாண மண்டபம்பார்க்கறது, வாசல்ல நின்னு கல்யாணத்துக்கு வர்றவங்களை வரவேற்கறதுல இருந்து,அலங்காரம்,பூக்கள்,தாம்பூலப்பை,சமையல்,கட்டுசாதம் வரைக்கும் எல்லாமே அவங்கதானாம்.ஆனா ஈவண்ட் எதுவுமே அட்ராக்டிவா இல்லதெரியுமா? மாப்பிள்ளை ஊர்வலத்தில புகைமூட்டம் போட்ட மாதிரி வெடி வெடிச்சு அட்டகாசம் ஒரேமருந்துநெடி,கல்யாண மண்டபத்தில ஆர்க்கெஸ்ட்ராங்கற பேர்ல ஒரே குத்துப்பாட்டும் டான்சும் சகிக்கல.பஃபே சிஸ்டம்சாப்பாடு எதுவுமே சொல்லிக்கறமாதிரி டேஸ்ட்டா இல்ல.வரிசையா விதவிதமா சாப்பாடு அடுக்கி வச்சுருக்காங்க ஆனாஎன்ன பேரு என்ன வெரைட்டி எதுவுமே தெரியல. எல்லாத்திலயும் ஒரு கரண்டி எடுத்து போட்டுகிட்டு எதைசாப்பிடறதுன்னே தெரியாம, பிடிக்காம கடைசியில கொண்டுபோய் கொட்டிட்டுதான் வந்தேன்.என்ன இருந்தாலும்வாய்க்கு ருசியா ஒருத்தர் பரிமாறி அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்றமாதிரி வருமா!!சொல்லு”

வரிசையாக விமர்சனங்களை அடுக்கினாள் சித்தி சித்ரா.

”நானும் அதே மேரேஜ் ஆர்கனைசரத்தான் ஆனந்தி கல்யாணத்தையும் நடத்தி தரச்சொல்லி கேட்ருக்கேன்.அவர்லன்ச்சுக்கு பெரிய மெனு கொடுத்திருக்கார்.

வட இந்திய உணவு,தென்னிந்திய வகைகள்,சைனீஸ் வெரைட்டீஸ்,பீட்சா,பாஸ்தா,சாட் ஐட்டம்ஸ்,தோசாவெரைட்டிஸ்க்கு தனி கவுண்ட்டர்,ஸ்வீட்ஸ்,ஐஸ்கிரீம்,பீடாஸ்டால் இவ்ளோ சொல்லிருக்கார்.எல்லாத்துக்கும் ஓகேசொல்லிட்டோம் நானும் ஆனந்திஅப்பாவும்”

“இந்தமாதிரி சாப்பிடனும்னா ஹோட்டலுக்கு போலாமே?கல்யாணத்திற்கு எதற்கு இத்தனை சாப்பாட்டு வகைகள்” கோபம் அதிகமாகியது ஆனந்திக்கு.

”என்னடி இதுக்கே இப்படி சொல்லிட்டே!!மேரேஜ் ஆர்கனைசர் டெஸ்டினேஷன் வெட்டிங்,கேண்டிட் போட்டோக்ராபின்னுஅடுக்கிட்டே போறார்.கல்யாணத்தை பீச் ரிசார்ட்,வாட்டர்ஃபால்ஸ் பார்க் அந்த மாதிரி இடத்தில ஓப்பன் ப்ளேஸ்லநடத்துவாங்களாம் ரொம்ப ட்ரெண்டியா ரிச்சா இருக்குமாம். கல்யாண பத்திரிக்கைக்கே இப்போல்லாம் டீசர்போட்றாங்களாம்.கல்யாண இன்விடேஷனே இப்போ வீடியோல வர்றதாம்டி.இதெல்லாம் வாழ்க்கையில ஒருமுறைதான் எங்களுக்கு நீ ஒரே பொண்ணு நாங்க நிறைவா க்ராண்டா செய்து பாக்கணும்னு ஆசைப்பட்றோம் தப்பா?”

“எனக்கு இந்த நவீன ட்ரெண்டிங் கல்யாணம்லாம் வேண்டாம்மா.எளிமையா செய்தா போதும்.நம்ம பாரம்பரியமுறைப்படிதான் கல்யாணமும்,கல்யாண விருந்தும் இருக்கணும்.நிறைய செலவு பண்ணி கல்யாண இன்விடேஷன்லாம்அடிக்காதே!!.சாதாரண பத்திரிக்கை போதும்.டெஸ்டினேஷன் வெட்டிங்க்,லட்சங்கள்ல வாடகை வாங்கற பெரிய திருமணமண்டபம்லாம் வேண்டாம்.ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்தாகூட பரவாயில்லை.சாதாரண மண்டபத்தில் கல்யாணம்நடந்தா போதும் அதுவும் இல்லன்னா கோயில்லயே கல்யாணத்தை முடிச்சிடலாம்’”

“நடுத்தர குடும்பத்தில இருக்கறவங்க கூட இப்பல்லாம் ஆடம்பரமாத்தான் கல்யாணம் பண்றாங்க.இதுதான் நம்ம வீட்டிலமுதல் பெரிய விசேஷம்.க்ராண்டா பண்ணாதான் எங்களுக்கு சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கும்.இப்படிஎல்லாத்தையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்றியேம்மா”

விசாலாட்சி அம்மா கவலையோடு கேட்டாள்.

’’தேவைக்கு அதிகமா பணம் இருக்குன்னு நீங்கல்லாம் இது மாதிரியெல்லாம் ஆடம்பரமா கல்யாணம்வைத்துசெய்து ஒருட்ரெண்ட் செட் பண்ணி வச்சிடறீங்க.இதைப்பார்த்துட்டு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவங்களுக்கும் இதே மாதிரிகல்யாணத்தை தன் பெண்ணுக்கும் செய்யணும்னு ஆசைப்பட்டு தகுதிக்கு மீறி கடன்வாங்கி அந்த கடன்லயே மூழ்கிவாழ்நாள் முழுவதும் தத்தளிக்கிறாங்க.செய்யறதெல்லாம் செய்துட்டு கடைசியில் பெண்குழந்தை என்றாலே செலவுஅப்டீன்னு பேச நினைக்க ஆரம்பிச்சிட்றாங்க.இதுக்கு காரணம் அப்பர்க்ளாஸ் பேமிலிகள் செய்கிற படோடோபம்தான்அவர்களிடம் வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்துது.

கல்யாணத்தில சாப்பாட்டுக்குத்தான் அதிகமா பணம் செலவாகுது.எல்லோரும் வியந்து பாராட்டணும்னுதான் பஃபேசிஸ்டம் சாப்பாடு அரேஞ்ஜ் பண்றாங்க.அதிலயும் வகைவகையா உணவு பரிமார்றாங்க.கல்யாணத்துக்கு வர்றவங்க அங்கபோட்ற எல்லா சாப்பாடையுமா சாப்பிட்றாங்க?.நிறைய சாப்பாடு வீணாப்போகுது.இந்த மாதிரி சாப்பாட்டைவீணடிக்கறதுக்கு பதிலா பணத்தை மிச்சம் செய்து ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்றவங்களுக்கு வயிராற சாப்பாடுபோடலாம்.அது நமக்கு புண்ணியமும் கூட”

தன் பெண் ஆனந்தி பேசுவதிலும் நியாயமும் உண்மையும் இருப்பதை உணர்ந்தாள் அம்மா விசாலாட்சி.வெட்டிஆடம்பரமும் படோடோபமும் நிச்சயமும் ஆத்ம திருப்தியை தராது என்பதை புரிந்துகொண்டாள்.

“சரிம்மா இன்விடேஷன்ல இருந்து கல்யாண மண்டபம் வரைக்கும் எல்லாத்தையும் முடிஞ்ச அளவு சிக்கனமாசெய்யபாக்கறேன்.

கல்யாணத்தன்னைக்கு “காக்கும் கரங்கள்” ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் 1500 குழந்தைகளுக்கு ஸ்பெஷல் லன்ச்ஏற்பாடு பண்ணிருக்கேன்ம்மா.இப்போ சந்தோஷமா உனக்கு”

“இப்பத்தான் நீ என் செல்ல அம்மா”

சந்தோஷமாக அம்மாவைக்கட்டிக்கொண்டாள் ஆனந்தி.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.