பெண்ணின் நிறம் சிவப்பு ....

ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்து தான் வச்சிருக்கான் ஓய் ....இவளுக என்ன தான் வாய் கிழிய சரிக்கு நிகரா பேசினாலும் ,ஆம்பளை போடுற மாதிரி பேண்டு சட்டை போட்டாலும் ஆம்பளைக்கு ஈடு இணை ஆக முடியாது ...

என்ன தான் அறிவியல் வளர்ந்தாலும் ஆம்பளை துணை இல்லாம குழந்தை பெத்துக்க முடியாது ...இவளுக அகங்காரத்துக்கு தான் ஆண்டவன் மாசத்துக்கு மூணு நாள் தீட்டு படுற மாதிரி வாழ்க்கையை கொடுத்திருக்கான் ஓய் ...சங்கர மாமா பக்கத்து வீட்டு ரவி சாஸ்திரியிடம் கேலியும் கிண்டலுமாக பெண்களை பற்றி மிகவும் கேவலமாக பேசி கொண்டிருந்தார் ..இதை ஜன்னல் வழியே சங்கர் மாமாவின் மனைவி கிரிஜா கேட்டு கொண்டிருந்தார் ....

வீட்டுக்கு வந்ததும் சங்கரனிடம் கடு கடுவென நடந்து கொண்டாள் கிரிஜா ..

என்னடி ஆச்சு உனக்கு ....பத்ர காளியாட்டம் இந்த கோபம் காட்டுற ??

இங்க பாருங்கோ பொண்ணுங்க இல்லைனா இந்த ஆம்பளைங்க எல்லாரும் காம வெறி பிடிச்சு நாய் மாதிரி அலையனும் ..இப்ப இருக்கிற மருத்துவ உலகில் ஆண்கள் இல்லாமலே வெறும் விந்தணு மூலமா குழந்தை பெத்துக்க முடியும் ..ஆனா ஒரு பெண்ணாலே மட்டும் தான் ஒரு ஆணுக்கு அன்போடு சேர்த்து இல்லற சுகத்தை தர முடியும் ....எங்களுக்கு மாத விடாய் வரலைன்னா உங்களுக்கு வம்ச விருத்தி எப்படிங்க கிடைக்கும் ...ஆணை விட உடல் உபாதைகள் இயற்கையின் படைப்பால் அதிகமிருந்தும் மன வைராக்கியத்தில் முன்னேறி வர்றோமே அதான் உண்மையான பெண்களின் படைப்பின் வெற்றி ...கடவுளே பெரும்பாலும் பெண்ணின் சொரூபமே ...நதி கூட பெண்ணின் பெயராலே தான் ஓடுது ...இந்த உலகத்துல ஜீவராசி முதல் மனுஷன் வரை குடும்பமா ஒற்றுமையா இருக்கானா அதற்க்கு பெண் படைப்பு தான் காரணம்...பொம்னாட்டிய இவ்வளவு நேரம் அசிங்கமா பேசுனேலே உங்களை பெத்தது கூட ஒரு பெண் தான் ...உங்களை எனக்கு பிறகும் கடைசி காலத்துல பார்த்துக்க போறது நம்ம பொண்ணு தான் ...ஒரு ஆம்பளைக்கு மதிப்பே பெண்ணாலே தான் .....என கோப பட பேசி முடித்தாள் கிரிஜா ...

என்னை மன்னிச்சிடு கிரிஜா என தன் மனைவியின் கையை பிடித்தார் சங்கர மாமா ....கிரிஜாவின் கைகளை சங்கரனின் கண்ணீர் நனைத்தது ...


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.