குன்றென நிமிர்ந்து நில்

பாரின் சுழற்சியில்

பாதங்கள் சென்றிடவா

பதக்கங்கள் பெற்றாய்?

பரிகாசப் பேச்சுகள்

பக்குவப்படுத்திடவே!

பாதைதோறும் பாறைகள்

பண்படுத்திடவே!

பகலவனாய் இருக்குமிடத்தில்

ஒளிவீச...

அகிலமே உன்னிடத்தில்

ஒளி பெறும்.

எண்ணத்தைச் செம்மையாக்கிட;

உள்ளத்தை வன்மையைக்கிட;

அறிவை வளமையாக்கிகிட;

‘குன்றென நிமிர்ந்து நில்’

ஓர் நெஞ்சுறுதி கொண்டு..

ஈரடி எடுத்து வை

முக்காலமும் நானிலமும்

ஐந்தெழுத்து மந்திரமாய்

உன் பெயர் சொல்லிடும்..

குன்றென நிமிர்ந்து நின்றிடு;

குறையில்லை என்பதை உள்ளத்தில் நிறுத்திடு;

குணநலன் பல கொண்டிடு;

குலமகனாய் திகழ்ந்திடு - எட்டயபுர

கவிஞனின் மொழியை மெய்மையாக்கிடு...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.