முத்தம் ...

அம்மா -மனைவி -ஆறு வயது பெண் குழந்தை என குடும்பத்தில் கஷ்டம் இல்லையென்றாலும் ஒரு சிறிய வீட்டில் வாழ்க்கை நல்ல படியாய் சென்று கொண்டிருந்தது ...ஒரு ரூம், ஒரு ஹால், ஒரு கிச்சன் பொதுவில் ஒரு டாய்லெட் -பாத்ரூம் என சகல வசதிகளும் வீட்டில் இருந்தன ..என்ன ஒன்று யாராவது விருந்தாளி வந்து விட்டால் தான் கொஞ்சம் கஷ்டம் ..நான் வாங்கும் சம்பளத்துக்கு இந்த வீட்டையே கட்டி முடிப்பதற்கு ரொம்ப கஷ்டப்பட்டேன் ...முப்பது வயசுக்கு மேலே தான் கல்யாணமே பண்ணேன் ...

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அவள் கற்பமுற்றாள் ...ஒரு வருடத்திற்குள் குழந்தையும் பிறந்தது ...என்னை மாதிரி உள்ள நடுத்தர வர்க்கத்திற்கு கிடைக்கும் ஒரே சந்தோசம் மனைவியிடமிருந்து கிடைக்கும் தாம்பத்திய சுகம் தான் ...அம்மா தனம் ஹாலில் படுத்து கொள்வாள்...

குழந்தை மீனா -மனைவி காயத்திரி -கணவனான கண்ணன் அதாங்க நான் தான் நாங்க மூணு பேரும் ரூமில் தூங்குவோம் ..குழந்தை மூணு வயசு இருக்குற வரைக்கும் எங்க தாம்பத்திய வாழ்க்கை நல்லாத்தான் போச்சு ...குழந்தை மற்ற குழந்தையை விட நல்லா உயரமா வளர ஆரம்பித்தாள் ..அவள் வயசுக்கு மீறிய அறிவு பெற்றிருந்தாள்..இரவில் தூங்க மாட்டாள் ..பாட்டியோடும் தூங்க மாட்டாள் ..

எங்களோடுதான் உறங்குவாள் ..இரவில் அடிக்கடி விழித்தெழுவாள் ..இதனாலேயே குழந்தைக்கு பயந்து கொண்டு கடந்த மூணு வருசமா தாம்பத்திய உறவு இல்லாம இருக்கோம் ..பொண்ண அஞ்சு வயசுல ஸ்கூல்லயும் சேர்த்து விட்டோம் ...பகல்ல சந்தோசமா இருக்கலாம்னா வேலை இருக்கு ... சண்டே லீவுல பொண்டாட்டியோட சந்தோசமா இருக்கலாம்னா சண்டே பொண்ணுக்கு லீவு ....நான் என்னத்த செய்வேன் ..பொண்டாட்டிய நினைச்சுகிட்டு தலைகாணிய கட்டிபுடிச்சிட்டு தூங்க வேண்டியதுதான் ...

அன்னைக்கு பிப்ரவரி 4 பொண்டாட்டியோட பிறந்தநாள் ..பட்டுப்புடவை கட்டி தலை நிறைய மல்லிகை பூ வச்சு சும்மா பார்க்கிறதுக்கு கும்முன்னு இருந்தா ..இது பத்தாதுன்னு சன் டிவி ல பாக்கியராஜ் -ஷோபனா நடிச்ச இது நம்ம ஆளு படத்தை வேற போட்டு விட்டுட்டானுங்க ..நான் என்ன செய்வேன் ... பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க முடியலைனாலும் அட்லீஸ்ட் ஒரு கிஸ்-யாவது கொடுத்து ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன் ..

அடுப்பங்கரைக்கு போனா அவளுக்கு உதவியா அம்மா நிக்குறாங்க ...ரூம்ல பாப்பா விளையாடிகிட்டு இருக்கு ..ஹால்ல பட்ட பகல்ல கிஸ் அடிக்கிறது கஷ்டம் தான் ...வெளியே கொண்டு போய் தான் கிஸ் அடிக்கணும்னு முடிவு பண்ணேன் ...நானும் -அவளும் வெளியே கிளம்புவதை பார்த்து பாப்பா அழ ஆரம்பித்துவிட்டாள் ..வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்து கொண்டு சென்றோம் ...கோயில் -கடைத்தெரு -கடற்கரை என்று சுற்றினோம் ..கடைசியாய் வெறுத்து போய் கடற்கரை ஒட்டியுள்ள ஒரு பார்க்கில் உட்கார்ந்தோம் ..

என் முக வாட்டத்தை அவள் புரிந்து கொண்டாள்...பாப்பாவின் கண்களை பொத்தி ஐஸ் பாய் விளையாடலாம் என்றாள் ..குழந்தையும் சரி என்றது ...கண் பொத்திய அந்த சில வினாடிகளில் கன்னம் மாறி மாறி சிவக்க சிவக்க உச்சி குளிர முத்தம் தந்தாள்..கடைசியாய் அவள் தந்த உதட்டு முரட்டு முத்தம் இன்னும் சில வருடங்களுக்கு தாங்கும் ..அதன் பிறகு குழந்தையுடன் சந்தோசமாய் விளையாடி விட்டு பர்ஸ்ட் ஷோ பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் படத்துக்கும் சென்றோம் ... அந்த இரவு மகிழ்ச்சியில் உறக்கமே வர வில்லை ...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.