காதலுக்கு மரியாதை....!

கண்ணும், கண்ணும் பேசியதில்..

காதல் வந்து இணைந்தாய் ..!

ஆண் :

இளங்காற்றாய் என்னை வந்து வருடினாய்..

ஏய் ! உனக்கென்ன என்மேல் ஆசையா?

உன் விழியில் எனைப் பார்த்து தலை குனிந்தேன்...

ஆஹா ! உன் கால் விரலால் கோலம் இட்டாய் பார்த்துவிட்டேன்....


பெண் :

ஆண் அழகா...! உன்னைத்தான் விரும்புகின்றேன்..

சொல்லத்தான் வேண்டுமோ இதை நான் உனக்கு?

உன் பார்வையாலே என்னை மயக்கிச் செல்கின்றாய்

கள்ளழகா! கண்ணெதிரே வந்துவிடு...

ஆண் :

கள்ளமிலா உன் காதல் என்னை இழுக்க

உண்ணாமல் நானும்தான் தவித்திருக்க

சொல்லாமல் என் பக்கம் நீ வந்து நிற்க

ஏதும் புரியாமல் என் மேனி நிலைத்திருக்க...!

பெண் :

வா ! வா ! நீ தலைவா என்னுடனே...

போயிடுவோம் சுகம் காண பல இடமே

எட்டாத வானமதை தொட்டிடவே

என் ஆசையது நிறைவேறும் நிச்சயமே...!

ஆண் :

நீ மட்டும் போதுமடி எனக்கு இனி

விண்ணையும் தொட்டிடுவேன் புறப்படு நீ

வீணாக்க வேண்டாம் நேரமதை

சொர்கம் அது தூரத்தில் இல்லை இனி...!

மைதிலி ராம்ஜி

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.