பூக்கவிடு கண்களையல்ல பூக்களை

விருந்தோ இல்லை மருந்தோ
காத்திருக்கிறது போல்
பார்க்கிற
பார்வையில் தெரிகிறது
நிஜம்தானே

மனமோ பார்க்கச் சொல்கிறது
எதையோ கேட்கச் சொல்கிறது

உதடுகளோ பேசிவிடத் துடிக்கிறது
மனமோ அதை ஏனோ தடுக்கிறது

மயக்கமும் தெரிகிறது அதிலேயே
தயக்கமும் இருப்பது புரிகிறது

இன்பமானாலும்
துன்பமாயானாலும்
சிறப்பதுவே காதல்

எண்ணியது என்ன
எண்ணுகிறது என்ன
எண்ணப்போவது என்ன
மூன்றையும் கூறலாமே

படைத்தவன் கடவுளே
பிரம்மிக்கிறவன் நானே
ஏன் படைத்தவனே கூட பிரம்மித்திருக்கலாமே

தென்றல் காற்று மலரில் வீசினால் தான் மலருக்கு மகிழ்ச்சிச்ப்  பொங்கும்

மூச்சுக்காற்று மங்கையில் வீசினால் தான் மங்கைக்கு மகிழ்ச்சிச்ப்  பொங்கும்

புரிந்ததென்றால் அருகில்
பறந்து வா விரைந்து வா
விருப்பத்தை கூறினேன்

பூக்கவிடு கண்களையல்ல காதல் பூக்களை
காக்கவிடு காதலையல்ல
காதல் கண்களை

மறுப்பென்றால் தூரம் போ
விரைந்துபோ மறைந்துபோ
நகர்கிறேன் சிறப்பென்றே

காதலில் கசப்பு கலந்திருப்பினும்
கலந்தாலோசிக்காமல்  அருந்தும் மருந்தே காதல்

தாலியாக அணிந்திட்டால்
வேலியாக அமைந்திடும் பின்னேஉனக்கு வேலியாக இருந்தோர் எல்லாம்
வாழ்த்தி மகிழ்வாரே

இத்தனை காலம்வரை
எத்தனையோ காமக் கொடூர மிருகங்களின் கண்களில் சிக்கியிருந்தால்

காதல் வேஷம் கலைந்து
இருக்கும்  அத்தனை
யினிடத்தும் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு  இத்தனைக்கும் என் எதிரில். நிற்கிற மான்  நீயல்லவா

நானுனைச் சேர்ந்திடவோ
நீயெனைச் சார்ந்திடவோ
கடவுள் நினைத்துவிட்டான்
உன் காதலன் நடத்துகிறான்
கடவுளுக்கு நன்றியை
சமர்பணம் செய்கிறேன்
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.