கொண்டாடப்படாத காதல்

****************************************************

பூஞ்சோலையூரில் ஆன்ந்தின் வீடுதான் பெரிது நான்கு புறமும் அரைகள் அமைத்து வீட்டின் நடுவே சூரியனின் உரசல் விழும் சுற்றுகட்டு வீடு அத்தனை பசுமையும் அழகும் நிறைந்த சிறிய கிராமம்.

செல்லையாவிற்கும் சாரதாவிற்கும் ஆனந்த் ஒரே மகன் அத்தனை செல்லம் தன் மகன் ஊர் மெச்ச வாழவேண்டுமென்பதில் அத்தனை ஆசை செல்லையாவிற்கு. சாரதா அவனை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்வாள் அத்தனை பாசம். தூங்குவதும் எழுவதும் படிப்பதும் பொழுதுபோக்காய் ஊர் சுற்றுவதும் ஆனந்தின் வேலை. கண்ணுக்கெட்டிய தூரம் இவர்களின் வயல்வெளிதான் ஊரில் பாதிபேரின் வீட்டில் அடுப்பெரிவதே இவர்கள் கொடுக்கும் சம்பளத்தில்தான்.

அந்த கிராமத்தில் பள்ளிபடிப்பு வரைதான் இருந்தது படித்துமுடித்த ஆனந்த் மேற்படிப்பிற்கு பக்கத்திலுள்ள பட்டணம் போகவேண்டும் என்றான். சாரதாவிற்கு அவனை அனுப்புவதில் விருப்பமில்லை நம்மகிட்ட இருக்கிற சொத்தயே தலைமுறைக்கும் உக்காந்து சாப்பிடலாம் நீயேயா ஊரவிட்டு போய் படிச்சி என்னய்யா செய்யபோர வெணாம்யா என்றவளை மறிந்து பேசினான் ஆனந்த் பெரிய படிப்பை முடித்து நல்ல வேலையில் சேருவதே என் லட்சியம் என்றான். ஒரு வழியாய் செல்லையா சாரதாவை சமாதானப்படுத்தினார். ஆனந்த் பட்டணம் சென்று அங்கேயே தங்கி படிக்க ஆரம்பித்தான்.

மூன்று வருடங்களுக்கு பிறகு ஆனந்த அந்த கல்லூரியில் சிறந்த மூன்று மாணவர்களில் அவனும் ஒருவனாய் தேர்வானான். பட்டம் வாங்கி நேரே கிராமத்திற்கு சென்று பூரிப்புடன் அவன் சொல்வதை கேட்டு செல்லையாவும் சாரதாவும் மகிழ்சியில் திலைத்துபோயினர். ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டு நாள் கூட  நிலைக்கவில்லை.

பட்டம் பெற்ற ஆனந்த் தான் வேலை தேடி சென்னை செல்வதாய் சொன்னான் இடி விழுந்தார்போல் அதிர்ந்துபோனால் சாரதா மீண்டும் அதே புலம்பல் நான் படித்த படிப்புக்கு அங்கேதான் வேலை கிடைக்கும் நான் போய்தான் ஆகவேண்டுமென அவன் அடம்புடிக்க செல்லையா மீண்டும் சமாதானப்படுத்தினார் சாரதாவை. ஒருவழியாய் ஆனந்த் நண்பர் ஒருவரின் உதவியுடன் சென்னையில் ஒரு மேன்ஷனில் தங்கி வேலைதேட ஆரம்பித்தான்.

அவனின்  திறமைக்கு வெகு சீக்கிரத்திலேயே ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் பொறுப்புள்ள பதவியில் அமர்ந்தான் மகிழ்ச்சியின் உச்சியை தொட்டுவந்த்தாய் ஓர் உணர்வு அவனை தீண்டிச்சென்றது. மாதம் ஒருமுறை விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாய் கொண்டிருந்தான் அது சாரதாவிற்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்த்து.

பணியின் பொறுப்புணர்வு அதிகரிக்கவே ஆனந்தால் சில மாதங்களாய் ஊருக்கு செல்லமுடியவில்லை மகனை பிரிந்து சாரதாவால் நிம்மதியாய் ஓர் இரவைக்கூட கழிக்கயியலவில்லை என்பது நிதர்சன உண்மை. அவனின் பிரிவு சாரதாவை மரணபடுக்கைக்கே கொண்டு சென்றுவிட்ட்து. அம்மாவின் மரணசெய்திகேட்டு அழுதுகொண்டே வந்த ஆனந்த் அம்மாவின் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு சென்னை திரும்புகையில் அப்பாவையும் தன்னுடனே வந்துவிடும்படி கேட்டான் ஆனால் செல்லையா அதற்கு ஒப்புதல் தராத்தால் காச்சமுத்து என்பவரை அப்பாவிற்கு துணையாய் பணிகளை செய்யும்படி பணித்துவிட்டு சென்னை திரும்பினான்.

காச்சமுத்து காலை 5 மணிக்கு வந்து எல்லா வேளைகளையும் முடித்து மாலை 7 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். இப்படியே சில மாதங்கள் உருண்டோடின.

அன்று காச்சமுத்துவின் பேத்திக்கு சடங்கு வைத்திருப்பதாய் சொல்லி வழக்கத்தைவிட கொஞ்சம் சீக்கிரமே கிளம்பிவிட்டார். வழக்கத்துக்கு மாறாக அன்று ஏனோ செல்லையாவிற்கு பதட்டமும் மன பாரமும் அதிகமாய் இருந்தது. அவரின் நிம்மதியான தூக்கத்தை சாரத இறந்த அன்றே இழந்துவிட்டார் அவர் மகன் தன்னுடன் இல்லை என்ற ஏக்கமும் அவரை விடாமல் துறத்தியது. அன்று இரவு செல்லையா சாப்பிடக்கூட இல்லை அப்படியே கட்டிலில் படுத்துவிட்டார்.

எப்போதும்போல் காச்சமுத்து காலை 5 மணிக்கு வேலைக்கு வந்தார் செல்லையாவிற்கு வெண்ணீர் போட்டுவிட்டு எழுப்பினார். திடீரென ஒரு அலரல் சத்தம் ஐயா எங்கள விட்டுட்டு போய்டிங்களா, ஆம் செல்லையா படிக்கையிலேயே மாரடைப்பால் இறந்துகிடந்தார். ஊர் பொதுமக்கள் கூடி ஆனந்திற்கு தகவல் சொல்ல முயன்றனர்.

பணியின் காரணமாய் ஆனந்த் வெளிநாடு சென்றிருப்பதாகவும் திரும்ப 3 நாட்கள் ஆகுமெனவும் அவரை தொடர்புகொள்வது சாத்தியமல்ல என்பதே அடுத்தமுனையில் கிடைத்த தகவல். வேறு வழியின்றி ஊர் மக்களே செல்லையாவின் ஈமச்சடங்குகளை செய்து முடித்தனர்.

நாடு திரும்பிய ஆனந்த் செய்தி அறிந்து அலறி அடித்து கண்ணீர் மல்க ஓடி வந்தான். மிஞ்சியதென்னமோ அப்பாவின் ஒருபிடி சாம்பல்மட்டுமே. கதறி அழுதுகொண்டிருந்தான் மனம் ஏனோ அவனை பல கேள்விகள் கேட்டு கொண்றுகொண்டிருந்த்து. அந்நேரம் சென்னையிலிருந்து அழைப்பு வந்தது உடனடியாய் வரவேண்டுமென ஆனந்த் மறுத்தான். தான் இரண்டு நாட்கள் கழித்துவருதாய் சொன்னான். மனிதர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாய் குத்தகைக்கு எடுத்துவிட்டு இயந்திரங்களாய் மாற்றிகொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு வேதனையும் வலியும்தான புரிந்துவிடப்போகிறதா என்ன. கட்டாயம் வந்துதான் ஆகவேண்டுமென உரத்த குரலில் பேசி இணைப்பு துண்டிக்கபட்டது.

வேறு வழியின்றி ஆனந்த் புறப்பட்டான் இரண்டு நாட்கள்கூட அவனால் நிம்மதியாய் வேலை செய்ய இயலவில்லை அம்மாவின் பாசமும் அப்பாவின் அரவணைப்பும் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதையே அவன் மனம் நினைத்து நினைத்து கலங்கியது. தீர்கமாய் ஓர் முடிவெடுத்தான் நேரே மேலதிகாரியை சென்று சந்தித்தான் தனது ராஜினமா கடித்த்தை கொடுத்துவிட்டு ஊர் திரும்பினான்.

வீடு வெறுச்சோடி கிடந்தது அப்பாவின் பாசம் கலந்த அதட்டலும் அம்மாவின் அரவணைப்பும் அவனை சுற்றிவருவதாகவே உணர்ந்தான். அம்மா உயிரோடு இருக்கும்போது நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும் எண்ணம் வந்தது அவனுக்கு. மாமாவின் மகளை மணம்முடித்து கிராமத்தில் விவசாயத்தை கவனித்துக்கொண்டு அம்மாவின் ஆசியோடும் அப்பாவின் நிம்மதியோடும் அந்த வீட்டில் வாழ்ந்துவருகிறான் தலைமுறை தழைத்து.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.