இது என்ன விதியோ? 2

அது ஒரு கிராமம். பத்து, பதினைந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அது வரை நகரத்தில் வசித்து வந்து இருந்தாலும், குழந்தைகளுக்கு எந்த ஊரும் ஒரே மாதிரி தான் மகிழ்ச்சி அளிக்கிறது. பணம், வசதிகள் பெரிதல்ல அவர்களுக்கு. விளையாட தன் வயதொத்த ஆட்கள் மட்டுமே போதும் சந்தோஷம் தர. மகாவுக்கும் மகிழ்ச்சி தான். வரிசை வீடுகளில் ஒன்றில் வாடகைக்கு வந்திருக்கிறது அவள் குடும்பம். அவர்கள் வயதொத்தவர்கள் நிறைந்திருந்த அந்த இடம் அவளுக்கு பிடித்தது.

           புதிதாக சேர்ந்திருந்த பள்ளியில், டவுன் பிள்ளையான அவள், நன்றாக படிப்பாள் என நம்பியதை காப்பாற்ற வேண்டி, இப்போது நன்றாக படிக்கவும் செய்தாள். பள்ளி, நண்பர்கள், விளையாட்டு என நன்றாக ஓடியது. ஐந்தாம் வகுப்பு ஆரம்பித்தது. அது வரை சிறுவர்களாக திரிந்தவர்கள், அது தான் அந்த பள்ளியில் கடைசி வருடம் என்றதும், தங்களை தாங்களே பெரியவர்களாக உணர்ந்தனர். வகுப்பில் உருவத்தில் பெரியவனாக இருந்த ராமராஜன், ஏதோ பெரிய வில்லன் என்று பெண் பிள்ளைகள் பயந்தனர். அவன் தங்களுக்கு பின்னால் சும்மா நடந்து வந்தாலே பயந்து ஓடுவது, விடுமுறை நாட்களில் எங்காவது அவன் தலை தெரிந்தாலே ஓடி ஒழிவது, அவனைப் பற்றிய கட்டுக்கதைகள் என கொஞ்சம் பெரிய பிள்ளைகளாகினர்.

         மாடு மேய்க்க செல்லும் பெரிய அக்காகளுடன், விடுமுறை நாட்களில் சிறுவர் கூட்டமும் சேர்த்து சென்றனர். வீட்டுக்கு பின்னே பச்சை பசேல் வயல்வெளி ஆரம்பித்து விடும். அதன்  வரப்பு வழியே வெகு தூரம் செல்வர். வரப்பு வழுக்கிவிட்டால், சிரிப்பு... வழியில் காக்கா முள் குத்தினால், ஒரு கவனம் என ஏதோ ஒரு ஆர்வத்துடன் செல்வர். மாடு மேய வேண்டிய இடம் வந்ததும், மாடுகளை விட்டு விட்டு, வரப்போரம் இருக்கும் பெரிய மரத்தின் அடியில் அமருவர். அங்கு  மண்ணை நோண்டி பல்லாங்குழி விளையாட்டு விளையாட ஏற்கனவே ஏற்பாடுகள் பண்ணியிருப்பர். அங்கே விளையாடுவர். மரக்கிளையில் ஊஞ்சல் ஆடுவர். மாடுகளையும் கண்காணிப்பர். சாயந்திரம் திரும்பி விடுவர்.

          வெகு தூரம் நடந்து சென்று டியூசன் சென்றனர். வரும் வழியில், ரோட்டை ஒட்டியிருந்த நீரில்லாமல் இருந்த குளத்தில் இறங்கி அது வழியே வர நினைத்து மகா அதில் இறங்கினாள். கரையை ஒட்டிய இடத்தில் பிளவு பட்டுக் கிடந்த மண்ணில், பிளவுக்குள் கால் படாது, சின்ன சின்ன மேட்டில் கால் வைத்து நடக்க ஆரம்பித்தாள். முதலில் கெட்டியாக இருந்த மண், சிறிது கடந்ததும், கொஞ்சம் சேறாக இருந்தது. அந்த சேற்றில் கால் வைத்ததும், அது காலின் அடியில் ஒட்டிகொண்டு, கனமானது. அதை கண்டதும், "நான் பூட்ஸ் போட்டுருக்கேன். அது வெயிட்டா இருக்கு" என கரையோரம் ரோட்டில் வந்தவர்களைப் பார்த்து உற்சாகமாக கத்தினாள். சேறு அதிகமாக அதிகமாக அது காலில் ஒட்டி, கால் உள்ளே அமுங்கி, கால் எடுத்து வைப்பதே கஷ்டமானது. கிட்டத்தட்ட குளத்தின் மையப்பகுதியில் வந்த போது, தீடீரென தொடை வரை அவள் உடம்பு சேற்றில் உள்ளே புதைய ஆரம்பித்தது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.