மிருகம்

பறந்து கொண்டிருந்த பேருந்து இறக்கைகளை மடித்ததும் எதிர்திசையில் தலைதெறிக்கும் வேகத்துடன் ஒடிக் கொண்டிருந்த மரங்கள் தளர்வாக நடக்க ஆரம்பித்தன.

சற்றுத் தொலைவில் சாலை நடுவில் ஒரு பேருந்து நின்று கொண்டிருக்க ஆட்கள் நின்று கொண்டிருந்தனர்.

எல்லோரும் எழுந்து நின்றோம்.

இவனுகளுக்கு இதே பொழப்பா போச்சு. இந்த ருட்ல தினமும் ரெண்டு பேர் செத்துட்டிருக்காங்க. இருந்தாலும் வேகத்தைக் குறைச்சு தொலைய மாட்டேங்கறாங்க.

எல்லா ஸ்டாப்லயும் டிக்கெட் ஏத்தறதுக்காக பத்து நிமிஷம் நிக்க வேண்டியது.அப்புறம் டைம் எடுக்கணும்னு வெறித்தனமா ஓட்டி நம்மைக் கொல்ல வேண்டியது.

அய்யோ பாவம் எத்தனை பேர் செத்தாங்களோ.

பேருந்தினுள் வெடித்தன குரல்கள்.

பேருந்து அருகில் சென்றதும் பலர் பாய்ந்து ஏறினார்கள்.

என்னாச்சுங்க?

பஸ் ப்ரேக் டவுன்.அரை மணி நேரமா நிற்கிறோம்.

சலசலப்புகள் அடங்கி எல்லோரும் அமர்ந்ததும் பேருந்து வேகமெடுத்தது.

“வெறும் ப்ரேக் டவுன்தான்.ஆக்சிடென்ட் ஏதுமில்லை” என்று பக்கத்திலிருந்தவரிடம் சொல்லும் போது என்னுள் பரவிய ஏமாற்றத்தைக் கண்டு அதிர்ந்து போனேன் நான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.