பள்ளி விட்டு வீடுத்திரும்பியப் பேரன்.

பள்ளி வாகனத்தை விட்டு இறங்கி ஓட்டமும், நடையுமாக வீடு வந்து சேர்ந்தான்;

அப்பா, அம்மா இருவரும் வந்துவிட்டார்களா எனப் பாட்டியிடம் கேட்டான்.

பாட்டிக் கூறிய பதிலால் திருப்தியடையாது, அலைபேசியில் பேச தாத்தாவிடம் வாங்கித் தந்தைக்கு அழைப்பு விடுத்தான்.

தாத்தா பாட்டிக்கு எதுவும் புரியவில்லை. கேட்டாலும் காதில் வாங்குவதாக இல்லை பாலன்.

பாலனின் தந்தை அலைபேசியில் பேச ஆரம்பிக்க உடன் பாலனின் குரல்தான் வேகமாக ஒலித்தது; தான்

ஓட்டப்பந்தயத்தில் அரையிறுதிக்குத் தகுதியானதுக் குறித்து மகிழ்ச்சி துள்ளலில் பேசி முடித்தான்;

தாத்தா, பாட்டிக்கு அப்போதுதான் பாலனின் பதட்டத்தின் காரணம் விளங்கியது.

சீக்கிரமாக வீட்டுப் பாடம் முடித்தான்.

அம்மாவிற்கு அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். எடுக்கவில்லை; வெளியில் விளையாடச் சென்றான்.

நண்பர்கள் அனைவரிடமும் தான் ஓட்டப்பந்தயத்தில் அரையிறுதிக்குத் தகுதியானதுக் குறித்து மகிழ்ச்சி துள்ளலில் கூறினான் பாலன்.

விளையாடி முடித்து ஓடோடி வந்து பாட்டியிடம் அப்பா, அம்மா வந்துவிட்டார்களா? எப்போது வருவார்கள்? எனக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தான்.

ஒரு வழியாக இருவரும் ஏழரை மணி அளவில் வீடு வந்து சேர்ந்தனர்.

பாலன் ஓடோடி வந்து இருவரையும் அணைத்துக் கொண்டு தான் ஓட்டப்பந்தயத்தில் அரையிறுதிக்குத் தகுதியானதுக் குறித்து மகிழ்ச்சியுடன்

கூறினான். இருவரும் வாரி அணைத்து முத்தமிட்டு தங்களது வாழ்த்தைத் தெரிவித்தனர்.

இறுதிப்போட்டிக்கு நன்கு பாலனைத் தயார்படுத்திக் கொள்ளும்படிக் கூறி ஊக்கப்படுத்தினர். தாத்தா பாட்டிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

அனைவரும் சாப்பிட்டு உறங்கச் சென்றனர்.

நேற்று இவையெல்லாம் முடிந்தது.

இன்று பள்ளிச் சென்று ஓடோடி வந்துப் பாட்டியைக் கட்டிக் கொண்டு தான் 'கண்ணன்' வேடத்தில் பள்ளி ஆண்டு விழாவிற்கு ஆட உள்ளதாகவும், தன்னைத் தேர்வு செய்துள்ளதைக் கூறி முடித்தான்.

பாலனுக்கு மகிழ்ச்சிபமகிழ்ச்சிப் பிடிபடவில்லை;

'நேற்று ஒன்று!!

இன்று ஒன்று!!'

அப்பா, அம்மா வரும்வரைக் காத்திருந்து, தெரு முனையில் கார் வரும்போது ஓடோடிக் கூறினான்;

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்;

தன்னை ஆசிரியை நன்கு ஆடுவதைப் பாராட்டிக் கூறியதை எடுத்துக் கூறினான். முகத்தில் மகிழ்ச்சித் தாங்கவில்லை பாலனுக்கு.

குழந்தைகள் மகிழ்ச்சிப் பெற்றோர்கள் கையில்;

முகமலர்ச்சிக் குழந்தைகளை நோயின்றிக் காக்கும்;

"சில நேரம் மற்றவர்களுக்காக நாம் எடுக்கும் முடிவு கூட மகிழ்வைக் கொடுக்கும்."

"இயல்பாக மனநிறைவோடு இருப்பதுக் கூடுதல் மகிழ்வைக் கொடுக்கும்".

குழந்தைகள் சிறு வயது முதல் பெற்றோர்கள் நன்கு வளர்த்து நல்லபழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுத்தால் நல்லநிலையை அடைவர் வளர வளர நாளடைவில்;

சின்னச்சின்ன சந்தோஷங்களேக் கைத்தூக்கிவிடும் குழந்தைகளை;

பாலனும் அதற்கு விதிவிலக்கல்ல;

குழந்தைகளுக்குப் படிப்பு மட்டுமல்ல,

எல்லாவிதமானத் துறையிலும் ஆர்வத்தை ஏற்படுத்துதல் பெற்றோர்கள் கடமை;

"மகிழ்ச்சியானக் குழந்தை மகிழ்ச்சியானக் குடும்பத்திற்கு வித்திடும்".

" பெற்றோர்கள் ஊக்குவிப்புக் குழந்தைகளைப் புகழின் உச்சியை அடையச் செய்யும்".

'நல்லக் குழந்தைப் பல்கலைக்கழகம்'

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.