பேருந்து நிறுத்தத்தில்
வாகனங்கள் பல
தவிர்த்துக் காத்திருப்பேன்....
உன் வருகையின்
சிலநொடிப் பார்வைக்காக...

விரையும் வாகனங்களில்
கரையும் காலம் மறந்து
உறைந்திருப்பேன் - உன்
ஒற்றைச்சொல் வரத்திற்காக..

இதழ் படித்து....
கரம் பிடித்து....
விரல் சொடுக்கி ...
உலவும் பொழுதுகளில்
கால்கள் தரை
மேவியதில்லை...
பூக்களின் மேல் மிதந்த
நினைவுகளே மிஞ்சும்!

காதலாய் மனம் உருக...
விட்டுப்பிரிய மனமின்றி
கட்டிக்கொண்டிருப்போம்.
தொலைவிலிருந்தும்
நெருங்கிய மனங்களால்...

--- கவிஞர் செல்லம் ரகு.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.