உயிர் ...

டாக்டர் எப்படியாவது இந்த கருவை கலைச்சிடுங்க ...ப்ளீஸ் எங்க ரெண்டு பேரோட வருங்காலமும் இதுல தான் அடங்கி இருக்கு ..எனக்கு எங்கேஜ்மெண்ட் வேற பிக்ஸ் ஆயிடிச்சு ..இன்னும் மூணு மாசத்துல எனக்கு கல்யாணம் வேற நடக்க இருக்கு .என் பாய் பிரண்ட்-டும் இன்னும் ரெண்டு மாசத்துல வேலைக்கு அமெரிக்கா போக போறான்

நானும் என் பாய் பிரெண்ட்-டும் தெரியாம ஒரு திரில்க்காக தப்பு பண்ணிட்டோம் எவ்வளவு சொல்லியும் கிக்குக்காக காண்டம் போடாம என்னோட ரிலேஷன்சிப் வச்சுக்கிட்டான் அதோட விளைவு நான் இப்ப கன்சீவ்வா இருக்கேன்னு நினைக்குறேன் டாக்டர் ஏன்னா எனக்கு ரெண்டு மாசமா பிரீயட்ஸ்-ஸே வரலை கண்டிப்பா நான் கன்சீவ்வா தான் இருக்கேன்

ப்ளீஸ் எப்படியாவது இந்த கருவை கலைச்சிடுங்க ... உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றோம் என்றனர் அந்த இருவரும் ....

பணத்திற்கு ஆசைப்பட்ட அந்த டாக்டரும் அபார்சன் செய்தார்..அதன் பின் அந்த பெண்ணும் -அந்த ஆணும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர் .இனிமேல் அவரவர் வாழ்க்கையில் மீண்டும் ஒருவரையொருவர் சந்தித்து கொள்ள கூடாது என்றும் அவர்களது வருங்கால வாழ்க்கையில் ஒருத்தருக்கு ஒருத்தர் இனிமேல் தலையிட கூடாது என்றும் நட்புடன் பரஸ்பரமாய் உடன்படிக்கை செய்து கொண்டு பிரிந்தனர் ....

ஒரு சில மாதங்களுக்கு பிறகு

ஒரு அறுவை சிகிக்சையின் போது மத்த சக மருத்துவர்களின் முன்னிலையில் தன் கைகளின் நரம்புகளை தானே வெட்டி கொண்டார் அந்த அபார்சன் செய்த டாக்டர் ...அந்த சம்பவத்தில் இருந்து அந்த மருத்துவரின் இரு கைகள் செயலிழந்து போனது ...

டே ...மச்சான் நாளைக்கு நான் அமெரிக்கா போறேன் வேலைக்கான அப்பாயின்மென்ட் லெட்டர் எல்லாம் வந்தாச்சு ,இனிமே ஜாலி தான் என்று சந்தோசமாக அவன் நண்பனிடத்தில் பேசி கொண்டிருந்தான் அப்போது அருகே உள்ள ஜன்னல் கம்பி உடைந்து நேரே அவன் ஆண்குறியில் வந்து சொருகியது அந்த விபத்தில் அவன் ஆண் என்ற தகுதியையே இழந்தான் ...

ஒரு நாள் அவள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாள் ஏனென்றால் விடிந்தால் கல்யாணம் ,பையன் மிக பெரிய இடம் தன்னுடைய பிரச்சனையெல்லாம் தீர்ந்து விட்டது இனிமேல் எல்லாமே நல்லாத்தான் நடக்கும் என்று பல கனவுகளில் மூழ்கி இருந்தாள் ..அப்போது அவளுடைய அறைக்கதவு தானே மூடிக்கொண்டது ..அடுத்த நொடி அறையில் கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து முகத்தில் வைத்து தன்னை தானே அழுத்தி கொண்டாள்..சில நிமிடங்களில் அவள் உயிர் அந்த அற்ப உடலை விட்டு போய் இருந்தது ..அருகே இருந்த கண்ணாடியில் ஐ லவ் யூ அம்மா என்று இறந்து போனவளின் யோனியின் இரத்தத்தில் எழுதப் பட்டிருந்தது..

உலகை பார்க்காத உயிர் தான் உலகை பார்க்க முடியாத நிலைக்கு காரணமானவர்களை பழி தீர்த்து கொண்டது ...உங்கள் உடல் சுகத்துக்காக உயிர் பலி வேண்டாமே ...


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.