ஒரே ஒரு...

ஒரே ஒரு .....
நினைவுத் துளிபட்டு -
கனவு மழைதனில்
முழுதாய் நனைந்து போக
முடியுமானால் ....

ஒரே ஒரு ....
செயற்புயலில் துரும்பாய்
மனமிலகி - விண்முட்டிப்
பறக்க முடியுமானால் ....

ஒரே ஒரு ....
ஓசை மட்டும் என் வாழ்வை ஓராயிரம் கனவுகளுக்குள்
அமிழ்த்திட முடியுமானால்....

அந்த ஒரே ஒரு
யுக மாற்றம் - உந்தன்
முதல் முத்தம் தவிர...
வேறேது.....?

கவிஞர் செல்லம் ரகு...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.