ஆன்மீகமும் மனிதநேயமும்
கவிதை by : பூ.சுப்ரமணியன்
உலகில்
ஆன்மிக மக்கள்
கூட்டம் கூடும் –அங்கு
மனிதநேயம் வளர முடியாமல்
தள்ளாடுகின்றன !
உலகில்
ஆன்மிகம் மனிதநேயம்
இரண்டு கண்கள்
எண்ணிப்பார்த்தால்
எல்லாமே சுயநலம்தான்’ !
உலகில்
ஆன்மீகத்திற்கும்
ஆரவாரமான
ஆர்ப்பாட்டக்கூட்டம் !
ஆன்மீகம் அறிய
தெளிவுரைக் கேட்டால்
கலங்கிய குட்டைபோல்
உள்ளத்தைக் குழப்பி
தள்ளாட வைக்கிறது !
தற்போது
கோவில் குளம்
ஆன்மிகமென
ஒரு கூட்டம் கூடுகிறது !
ஆடு கோழி பலியிட்டு
உயிரிரக்கம் தலையிலும்
ஒரு பெருங்கூட்டம்
மண்ணைப் போடுகின்றது !
ஆன்மீக நதிகள்
பலவழிகளில்
சில்லிட்டு ஓடினாலும்
அன்பு என்னும்
பெருங்கடலை
அடையவே ஓடுகிறது !
மனிதநேயம் எல்லை
விரிவானவை
முடிவில்லாதவை
மனிதநேயம்
தன்னை வெளிப்படுத்த
ஆன்மீகத்துடன்
கை கோர்ப்பவை
ஆன்மீகம்
வெளிப்படையானவை
மனிதநேயம்
அமைதியானவை !