சுடச்சுட ரத்தம்

சுடச் சுட ரத்தம்.....

பேஸ் புக் தொடர்பான கதை..

**********************

அந்த எக்ஸ்பிரஸ் பஸ் புழுதியை கிளப்பியபடி விக்கிரவாண்டி பயணவழி உணவகத்தில் நுழைந்தவுடன்...

பஸ்ஸில் விளக்குகள் ஒளிர்ந்தது...மரிக்கொழுந்தே மல்லிக பூவே பாடல் அதிக சத்தத்துடன் ஒலிக்க...

நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் சத்தத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் எரிச்சலுடன் கண் விழித்தனர்சிலர் தம்மடிக்கவும்,

பலர் டாய்லட் செல்லவும் பஸ்ஸிலிருந்து இறங்க ஃபுட் போர்ட் நோக்கி நடந்தனர்...

புட் போடை நெருங்கிய அந்த இளம்பெண் அய்யய்யோ என அலறிய அலறலில் பஸ்ஸில் இன்னமும் தூங்கிய சிலரும்.. கீழே நின்றிருந்த பயணிகளும் திடுக்கிட்டனர்...

பஸ்ஸின் கடைசி சீட்டுக்கு முன் உள்ள சீட்டில் நாக்கு வெளியே தள்ளி, மூக்கில் ரத்தம் வழிய வழிய ஒருக்களித்த நிலையில் ஒரு இளைஞன் கண் திறந்த நிலையில் இறந்த நிலையில்...

சில வினாடிகளில் மற்ற பஸ் பயணிகளும் இந்த பஸ் முன் குவிந்தனர்...

ஹோட்டல் நிர்வாகம் விக்கிரவாண்டி போலிஸ் ஸ்டேஷன் நம்பரை டயலியது...

இதற்கிடையே மற்ற பஸ்கள் ஹாரன் அடித்தபடி புறப்பட. இறந்தவனை வேடிக்கை பார்த்த பயணிகள் தமது பஸ் நோக்கி ஓடி தொற்றிக் கொண்டனர்.

மரிக்கொழுந்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்டு ஹோட்டலின் பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட. தோசைகல் சூடு தணிய துவங்க...வந்து நின்ற போலிஸ் ஜீப்பிலிருந்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் குதித்திறங்கினார்...

பஸ்ஸுக்குள் நுழைந்து இறந்தவன் உடலை பார்வையால் அளந்தார். கழுத்து நெரிக்கப்பட்டதால் காற்றுக்காக நாக்கி வெளியே தள்ளி... இறந்தது அப்பட்டமாய் தெரிந்ததுஇன்னமும் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது...

அப்போது மீடியாக்காரர்கள் ஒவ்வொருவராய் வந்து குவிய கேமரா ப்ளாஷித்தது...பஸ்ஸில் பயணித்த பயணிகளிடம் டிவி நிருபர்கள் மைக்கை நீட்டி கருத்து கேட்க...

டிவியில் விழுப்புரம் அருகே ஓடும் பஸ்ஸில் இளைஞர் கழுத்தை நெரித்து கொலை என நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது...

அப்போதுதான் வந்த அந்த செய்தியாளர் இறந்துகிடந்தவனின் முகத்தை உற்று பார்த்துவிட்டு...

கீழே எஸ்பியிடம் மொபைலில் சீன் ஆஃப் க்ரைம்மை விளக்கிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் இவர் எனக்கு தெரியும் என்றார்...

சுற்றி நின்றவர்கள் ஆர்வமாக திரும்ப...ஆமா சார் இவர் பேஸ்புக்ல இருக்கார். பேரு பேரு ம்ம்சுரே சுரேந்தர் என்றார்...”என்ன சொன்னிங்க ஸார்...?” என்றார் இன்ஸ்பெக்டர் ரமேஷ்

”ஆமா ஸார் இவர் சுரேந்தர்...பேஸ்புக்கில் என் ஃப்ரண்ட்ஸ் லிஸ்டில் இருக்கார் .”என்றபடி தன் மொபைலில் பேஸ்புக்கை லாகின் செய்தார் அந்த செய்தியாளர்

.”நீங்க எந்த பேர்ல இருக்கீங்க...?’”நானா...? ஆல்வேஸ் அப்பாடக்கர் என்ற பேர்ல

இருக்கேன்...””

என்னது...?’”

ஆமா ஸார் பேக் ஐடி..””

அது நீங்கதானா...?

’”ஸார் நீங்களும் இருக்கிங்களா...?’”

ஆமா..? எந்த பேர்ன்னு கேக்காதிங்க...”

அதற்க்குள் சுரேந்தரின் பேஜ் ஓப்பன் செய்த அவர் ரமேஷிடன் காட்டினார்.ஸ்விப்ட் பெனட்டில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு அட்டகாசமான போஸில் சுரேந்தர்.ப்ரம் பொள்ளாச்சி..நவ் சென்னை...என்ற விவரங்கள் இருந்தது

.”சரி அப்புறம் பார்க்கிறேன்” என்றவர் . அந்த செய்தியாளரை அனுப்பிவிட்ட்டுபஸ்சிலிருந்து இறக்கப்பட்ட சுரேந்தரின் உடலை மார்ச்சுவரிக்கு அனுப்ப சொல்லிவிட்டு

... ஓரமாய் சலிப்புடன் நின்றிருந்த பயணிகளை தனிதனியே அட்ரஸ் வாங்க அடையாள அட்டை காட்ட சொல்லி போட்டோ எடுக்க சொல்லிவிட்டு,

கண்டக்டரிடம் மொத்தம் எத்தனை பாசஞ்சர் என்றார்.”கெப்பாசிட்டி 57 , ஆனா 32 பேர்தான் இப்ப ஜர்னி செய்தவர்கள்...””எல்லோரும் இங்கதான் இருக்காங்களா...?””

ஆமா ஸார் ...”ஓரமாய் தூக்க கலக்கத்துடன் நின்றிருந்த பயணிகளை எண்ணிய கண்டக்டர் சார் சேலத்தில கிளம்பும்போது 43 பேர், அப்புறம் கள்ளகுறிச்சி, விழுப்புரம் கடைசியா புக் பண்ணியபோது இந்த ஆள் தூங்கிக்கொண்டிருந்தார் அப்ப 32 பேர். இப்ப ஒரு ஆள் கொறையுது சார்... என்று கத்தினார்

.”ஆணா,,,? பெண்ணா...?

தூங்கிக் கொண்டுதான் இருந்தாரா..?”

”தெரியலை சார்...? ”

பயணிகளை திரும்ப அதே கேள்வியை கேட்க.... அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மீண்டும் கண்டக்டரிடம் ரமேஷ் ”அந்த ஆள் தூங்கிக்கொண்டிருந்தாரா...? ”

”அப்படித்தான் நெனைக்கிறேன் சார்.”தாடையை சொறிந்து கொண்ட ரமேஷ் ”சரி சரி ஏதாவது பஸ்ல இவங்களை ஏத்திவிடுங்க.... ”என்றபடி...

”அந்த ஆளை பற்றி தகவல் தெரிந்தால் என் நம்பருக்கு கூப்பிடுங்க” என்றவாறு பயணிகளிடமும், கண்டக்டரிடம் நம்பர் கொடுக்க....குறித்துக்கொண்ட பயணிகள் விட்டால் போதும் என்று ரோடை நோக்கி நடந்து சென்னை செல்லும் பஸ்ஸுக்காக காத்திருக்க

...சுரேந்தரின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புறப்பட்டது.

மறுநாள் காலை பத்துமணி...தன் பேஜிலிருந்து சுரேந்தரின் பேஜிக்கு போன இன்ஸ்பெக்டர் ரமேஷ்...

பதிந்திருந்த ஸ்டேடஸுகளை பார்த்தவர் ...

டேக் செய்யப்பட்ட ஒரு படம் போஸ்ட் செய்யப்பட்டு அதன் கீழே அகால மரணம் அடைந்த நமது நண்பர் செல்வா ஜெயந்த் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் உடலடக்கம் இன்று மாலை சேலத்தில் நடைபெறும்...

முகவரி என ஒரு முகவரி...அப்ப இந்த சுரேந்தர் சேலம் சென்று திரும்பும்போது இந்த கொலையா...? அப்ப செல்வா ஜயந்த் எப்படி இறந்தான்...

சேலத்தில் பணிபுரியும் தன் நண்பரை தொடர்புகொண்டு விவரங்களை சொல்லி அழைக்குமாறு கேட்டுக்கொண்டு...

தன் பேஜில் ஒரு மொக்கை கவிதை எழுத முயற்சிக்கும் போது மொபைல் அழைத்தது.

”ரமேஷ் நீங்க கேட்டகேஸ் கிளின் மர்டர்...”அதிர்ந்து...

மீண்டும் சுரேந்தர் பேஜிக்குள் நுழைந்தார்

ரமேஷ்...”ரமேஷ் நீங்க கேட்டகேஸ் கிளின் மர்டர்...”அதிர்ந்து...

மீண்டும் சுரேந்தர் பேஜிக்குள் நுழைந்தார்

ரமேஷ்...சேலம், தொடர்ந்து விக்கிரவண்டி... அப்ப சேலத்திற்கு முன்...? கேள்வி கண்முன் நிழலாடியது...

எஸ் பி இன்ஸ்பெக்டரை மொபைலில் தொடர்புகொண்ட ரமேஷ்....

”ஐயா(எஸ்பி) ப்ரியா இருக்காரா...? ஒரு கேஸ் விஷயமா இப்ப கால் செய்யலாமா...?” என கேட்டார்

.”ம் பேசுங்க ரமேஷ்...”

’சரிங்க சார்...”எஸ்பி நம்பரை டயலினார்.”

ஐயா நான் ரமேஷ் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர்.”

’சொல்லுங்க சார்.

’விக்கிரவாண்டி கேஸ் பற்றி விவரித்து சேலம் கொலை பற்றி விளக்கி... ”சைபர் கிரைம் போலீஸ் உதவியோடுதான் இந்த கேஸை புரொஸிட் செய்ய முடியும். அதான் சார் உங்ககிட்ட....நானே இந்த கேஸை இன்வெஸ்டிகேட் செய்யட்டுமா ஐயா...?”

”ம் செய்யுங்க... சைபர் கிரைம்லருந்து உங்ககிட்ட பேச சொல்றேன்”

”சரிங்கய்யா...வச்சிடட்டுமாய்யா...?”மொபைலை வைத்துவிட்டு மீண்டும் சுரேந்தர் பேஜிக்குள் நுழைந்தார்..

பெரும்பாலும் அரசியல் பதிவுகள்..சில கவிதைகள்குளோஸ் பிரண்ட்ஸ் லிஸ்டை பார்த்தார்.

அதில்...

செல்வா ஜயந்த்

ராம்கி ராமசந்திரன்.

பூக்காரி பூக்காரி

அழகம்மை

மது மதி...

இவர்களின் ஸ்டேடஸ்களுக்கு அதிக லைக், கமெண்ட் மாறி மாறி போடப்பட்டிருந்தது.

அதில் எல்லோருமே இன்பாஸுக்கு வா சொல்றேன் என உரையாடல் முடிந்தது

.இந்த 4 பேரை விசாரித்தால் ஏதாவது நூல் கிடைக்குமா...?

இந்த 4 பேருக்கும் முதலில் ப்ரண்ட்ஸ் ரெகுவஸ்ட் அனுப்ப முடிவெடுத்து அதேபோல் ஒவ்வொருவருக்காக அனுப்பினார்.

ஆனால் மது மதி மட்டும் பிரண்ட்ஸ் லிஸ்ட் ரீச் செய்ததால் ஃபாலோ செய்யுங்கள் என பதில் வந்தது.

பாலோ செய்ய தொடங்கினார்.

ராம்கி ராமசந்திரன் பேஜில் மறக்க முடியலை.... என்ற வாசகத்திற்கு பலர்

டாஸ்மாக் பற்றியும், சிலர் சினிமா நடிகையை மறக்கமுடியலையா என கமெண்ட் போட்டிருந்தனர்.

அதில் சுரேந்தர். செல்வா ஜயந்த், பூக்காரி, பூக்காரி மட்டும் எதையா குறிப்பிட்டு சமாதானமாக பேசுவதுபோல கமெண்ட் போட...

அநியாயம் நாம் செய்த்தது.

இப்ப என்ன நடந்தது பார்த்திர்களா..?என கேள்வி கேட்க வா இன்பாக்ஸில் என கட்டளை இட்டது

செல்வா ஜயந்த்..இவர்களில் எத்தனை பேர் ஆண், எத்தனை பேர் பெண்...?

இந்த குழப்பமும் மேலோங்கியது.ஒரு தம் அடித்தால் தேவலை என தோன்றியது...

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்.இந்த கேஸ் பிடிபடவேஇல்லையே...

என்ன நடக்கிறது... ?

குழப்பத்தின் உச்சிக்கு சென்றார் ரமேஷ்..

மீண்டும் சுரேந்தர் பேஜிக்குள் நுழைந்தார்.2 நிமிடத்திற்கு முன் பதியப்பட்ட ஸ்டேடஸில்..”

’இன்று காலை திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் வைகை எக்ஸ்பிரசிலிருந்து தவறி விழுந்து இறந்த தோழர் பூக்காரி பூக்காரிக்கு ஆழ்ந்த இரங்கல்”’ என்ற ஸ்டேடஸை பார்த்தவுடன் பதவி பறிபோன மந்திரிபோல அதிர்ச்சியின் எல்லைக்குபோனார் ரமேஷ்.

இறந்தது ஆணா... பெண்ணா...?

அதேநேரம் மொபைல் ஒலிக்க இன்ஸ்பெக்டர் என்றார் ரமேஷ்..

”சார் சைபர் கிரைம் கந்தசாமி சார்.

ஐயா உங்ககிட்ட பேச சொன்னார்”என்றது மறுமுனை...

”ஸார் நான் சைபர் கிரைம் கந்தசாமி பேசறேன்.ஐயா உஙகிட்ட பேசசொன்னார் ”என்றது

மறுமுனை.”சொல்லுங்க ஸார்.

இப்ப உங்க ஆபீஸ் வரவா...? ஒரு கேஸ் விஷயமா பேசணும். உங்க உதவி வேணும்...”ரமேஷ்

”வாங்க ஸார் காத்திருக்கேன். ””அரை மணி நேரத்துல உங்க முன்னாடி இருப்பேன்.”என்ற ரமேஷ் தன் பைக்கை ஸ்டார்ட்டினார்.

ரமேஷ் கந்தசாமியுடன் பேசி

சுரேந்தர்,

செல்வா ஜெயந்த்,

பூக்காரி பூக்காரி,

ராம்கி ராமகிருஷ்ணன்,

அழகம்மை

,மது மதி பேஜ்களுக்கு போய் வரட்டும்.

அதற்குள் நாம் ஒரு ப்ளாஷ் போய் வரலாம்.பிறகு இன்ஸ்பெக்டர் ரமேஷ் நம்முடன் இணைந்துகொள்வார்.

******* ******* ******** ********* **********

சரியாக 128 நாட்களுக்கு முன்பு அந்த நகரில் (குறிப்பிட்டு ஒரு இடத்தை குறிப்பிடாத்தற்கு காரணம் போக போக புரியும்)

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை பேஸ் புக் நண்பர்கள் ஓரிடத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

முகப்பில் அச்சந்திப்புக்கு வரும் நண்பர்களுக்கு அந்த ஊரின் சிறப்பை உணர்த்தும் உணவு வகை பார்சல் வழங்கப்பட்டது.

ஆங்காங்கு சாபாரி தொடங்கி வேட்டிவரையும், தாவணி தொடங்கி லெக்கின்ஸ் வரை நண்பர்கள் தனி தனி குழுக்களாக பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பை ஏற்பாடு செய்தவர் தங்களை மேடையில் வந்து அறிமுகம் செய்துகொள்ளச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார்.

ஆனால் பாதிக்கும் மேற்பட்டோர் அதை பொருட்படுத்தவில்லை.

அப்போதுதான் அந்த ஸ்விப்ட் வேகமாக வந்து டயர் மார்க் பதிய பிரேக்கிட்டு நின்றது.

அதிலிருந்து சுரேந்தர், செல்வா ஜெயந்த், பூக்காரி பூக்காரி என்கிற பூவரசன்,ராம்கி ராமகிருஷ்னன் ஆகியோர் லேசான தள்ளாட்டத்துடன் இறங்கினர்

.இறங்கியவுடன் மொபைலில் பூவரசன் ஒரு நம்பரை டயலி ”அழகி வந்துட்டியா” என்றான்.”

ம் வந்துட்டேன் ..நீங்க எங்க இருக்கிங்க...?”

மறுமுனை.”எண்ட்ரன்ஸ் பக்கத்துல கார் பார்க்கிங்ல...நீ....?”

”அங்கியே இருங்க வறேன்” என்றாள் அழகிசற்று நேரத்தில் அழகி என்ற அழகம்மை அங்கு பிங்க் நிற தாவணில் வந்தாள்.

அனைவரும் அங்கிருந்த குழுக்களில் ஐக்கியமான ஒவ்வொருவரையும்தேடி பிடித்து அறிமுகபடுத்திக்கொண்டனர்.

அழகி ஒரு தனியார் மெட்ரி பள்ளியில் ஆசிரியை,

சுரேந்தர் சென்னயில் மெடிக்கல் ரெப்செல்வா

ஜெயந்த் பி இ முடித்துவிட்டு அப்பாவின் பைனான்ஸ் கம்பனியை கவனிக்கிறான்.கார் இவனுடையது. எல்லா செலவும் இவன்தான் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பூவரசன் அரசு பள்ளி ஆசிரியர்.

ராம்கி ராமகிருஷ்ணன் தீவிர விவசாயி.

இன்னமும் இந்த சந்திப்புக்கு வராத மதுமதி இல்லத்தரசி

.இவர்கள் ஒரு செட்...ஆமா பெரிய ஷேவிங் செட் என நீங்கள் பொருமுவது கேட்குது.

சற்று நேரத்தில் மதுமதி தவிர 5 பேரும் ஓரம் கட்டி பேசிக்கொண்டிருந்தனர்.

நடுவில் சிலர் வந்து பேசிவிட்டு போய்விட இவர்கள் அனைவரும் பிரியாமல் இருந்தனர்.

இதன் நடுவே காருக்குள் சென்று அழகி வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் ஆளுக்கு தகுந்தாற்போல் ஸ்மாலில் தொடங்கி லார்ஜ்வரை போட்டு வந்தனர்.

வார்த்தை குழற குழற அழகி கொஞ்சம் கொஞ்சமாக ச்சே என்ன இப்படி இருக்கிறார்கள் என மனம் வெறுத்து விலகத் தொடங்கி..... ”

இதோ வறேன்” என சொல்லி ”எங்கே ”என கேட்ட சுரேந்தரிடம் ஒரு விரலை கட்டி பெண்களுடன் இணைந்து கொண்டாள்..

மதியம் கொடுக்கப்பட்ட பிரியாணியுடன் சரக்கடித்து போதை தெளியாமல் பார்த்துக்கொண்டனர்.

அந்த நேரத்தில் சற்று லேட்டாக வந்த மதுமது இவர்களின் நிலையை அழகியிடம் கேட்டு அந்த பக்கமே போகாமல் மேடையில் நடந்துகொண்டிருந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் லயித்தனர்.

பிற்பகல் 3 மணிக்குமேல் ஒவ்வொருவராய் கிளம்ப.... கிளம்ப...

அழகியும், மதுமதியும் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டேண்ட் சென்று அவரவர் ஊருக்கான பஸ்ஸில் பயணித்தனர்.

ஓரளவுக்கு நிதானமான ராம்கி காரை இயக்க ,

முன் சீட்டில் சுரேந்தரும்,

பின் சீட்டில் மற்றவர்கள்...கார் சேலம் நோக்கி விரைந்துகொண்டிருந்தது.

சேலத்தில் இரவு நடக்கும் ஸ்பெஷல் பார்ட்டியில் கலந்து கொண்டு அவரவர் வீடு திரும்ப திட்டம்.

சுமார் ஒரு மணி நேர பயணத்திற்க்கு பின் ரோட்டோரம் நடந்து செல்லும் அழகம்மையை பார்த்து காரை நிறுத்தினான் ராம்கி.

பூளு டூத் ஹெட்போனில் யாரிடமோ பேசிக்கொண்டே போன அழகி அருகில் கார் நிற்பதையும் அதிலிருந்து ராம்கி இறங்குவதையும் கண்ட அழகி லேசாக புன்னகைத்தாள்.”

அழகி வா கார்லயே உன்னை இறக்கி விட்டுடறேன் இப்பவே மணி 7 ஆகிடுச்சி” என்றான் ராம்கி.

”இல்ல என்னோட ஊர் இங்கிருந்து பக்கம்தான் நான் போய்க்கிறேன்” என்றாள் அழகி..

லைனில் இருந்த மறுமுனை ”யார்” என கேட்க நம்ம ராம்கி என்றாள்.

அதை ராம்கி கவனிக்காமல் அழகியை அழைக்க...

வேறு வழி இல்லாமல் அழகி காரை நோக்கி நடக்கஹெட்போனில்லைனில் இருந்த மறுமுனை ”யார் யார் இருக்காங்க” என கேட்க,பெயரை சொன்னாள்.

”நான் லைனில் இருக்கேன் நீ அவங்ககிட்ட பேசிக்கொண்டே வா” என்றது மறுமுனை.”

ம்” என்ற அழகி கார் முன் சீட்டில் உட்கார்ந்தாள்.

முன் சீட்டில் இருந்த சுரேந்தர் ட்ரைவர் சீட்டில் இருப்பதை பார்த்த ராம்கி... ”டேய் பொருமையா ஓட்டு” என்றவாறு காரின் பின் கதவை திறந்து தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் நகர சொல்லிவிட்டு உட்கார்ந்தான்.

கார் கிளம்பிய 4வது நிமிடம் ஸ்பீடாப் மீட்டர் முள் 100ஐ எட்டியது.

அழகி போகவேண்டிய ஸ்டாப்பிங்கை கடந்து செல்லும்போது ”ஹேய்” என்றபோது லேசாய் இளித்த சுரேந்தர் ”போலாம் இரு” என்றான்.

ராம்கி ”டேய் சுரே என்னடா...?”

”மூ..........வாடா” என்ற சுரேந்தர் தன் பாக்கெட்டில் இருந்த ஸ்பேயரை எடுத்து அழகியின் முகத்தில் அடித்தான்...

அழகி மயக்க நிலைக்கு செல்ல....

மறுமுனை விபரீத்தை உணர்ந்தது.... ”அழகி என்னாச்சி என்னாச்சி என கேட்க கேட்க” அதற்கு பதில் சொல்ல அழகி சுய நினைவில் இல்லை...

கார் ஏதோ ஒரு ஒற்றையடி பாதையில் நிற்க காரை நிறுத்திய சுரேந்தர் . ராமிகி தடுக்க தடுக்க அழகியை அள்ளிக்கொண்டு மறைவிடம் நோக்கி போக...

போதை மயக்கத்திலிருந்த பூவரசனும், செல்வா ஜெயந்தும் விழித்து நடப்பதை உணர்ந்து ஆர்வத்துடன் சுரேந்தர் செல்லும் திசையை பார்த்தனர்.

ராம்கி தலையில் அடித்துக்கொண்டு அழ அரம்பித்தான்.

அழகியின் காதில் இருந்த ஹெட்செட்டில் மறுமுனை கதற கதற...

பிளவுசுக்குள் இருந்த மொபைல் உயிருடன் இருந்தது.

இங்கு அழகியை......

சுப்பிரமனியபுரம் பட க்ளைமாக்ஸில் சசிகுமாரை ஒரு கும்பல் வெட்ட ...

காமிரா க்ளோசப்பிலிருந்து விலகி விலகி.....

அதே நிலையில் இந்த ப்ளாஷ் பேக் நிறைவு பெறுகிறது

.********* ********* ******** **********

கந்த சாமியின் பக்கதில் இருந்த ரமேஷ் "இப்ப உயிரோட இருப்பது மதுமதி,

அழகி,

ராம்கி...

முதலில் மதுமதி பேஜ்க்கு போங்க..."என்றார்

அதேநாள் நள்ளிரவு மதிமதி ஸ்டேடஸில்.......

அதேநாள் நள்ளிரவு மதிமதி ஸ்டேடஸில்...”உயிர் கொடுப்பான் தோழன் என்பார்கள்... ஆனால் இன்று நடந்தது...? விவரிக்க வார்த்தை இல்லை ”என முடிதிருந்தது.மதுமதி,

அழகி, ராம்கி பேஜில் நுழைந்து, அவர்களின் ச்சாட் பாக்ஸில் நீங்கள் ப்ளாஷ் பேக்கில் படித்ததை கந்தசாமி உதவியுடன் படித்து முடித்தார்.

பின் மூவரின் மெயில் ஐடி மூலம் அவர்கள் மூவரின் மொபைல் நம்பரை வாங்குவது சிரமாமாக இல்லை.

முதலில் மதுமதி எண்ணுக்கு டயலினார்.ரிங் போனது.”

மதுமதிங்களா..?”

”ஆமாங்க.””நான் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரம் விழுப்புரம்.”

”சொ...சொல்லுங்க சார்.”

”ஒரு கேஸ் விஷயமா உங்களை என்கொயரி செய்யெனுமே... எங்க இருக்கிங்க...?”

”என்ன கேஸ் ஸார்...?”

”நேர்லதான் சொல்லமுடியும். நீங்க எங்க இருக்கிங்க....?”

”கரூர் பக்கத்துல மல்லிகை பந்தல் கிராமம் சார்..”

”அங்கியே இருங்க...4 மணி நேரத்துல அங்க இருப்பேன்.”

”சரிங்க ஸார்.”

அருகில் இருந்த கந்த சாமியிடம் திரும்பி ”ரொம்ப தேங்க்ஸ் சார். நான் கரூர் போறேன்

நீங்களும்வரிங்களா...?’

”இல்ல ஸார் போயிட்டு வாங்க...”

உடனே ட்ராவல்ஸில் ஒரு கார் வரவழைக்க ஏற்பாடு செய்துவிட்டு,

எஸ்பியிடம் அனுமதி பெற்று கரூர் புறப்பட்டார் ரமேஷ்.

அதேநேரம்.மதிமதி கான்பிரன்ஸ் காலில் அழகியிடமும், ராம்கியிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.

கரூர் அருகே இருந்த மதிமதி சொன்ன மல்லிகை பந்தலை ரமேஷ் அடைந்த போது மாலை 4.18

மொபைலில் தொடர்புகொண்டு மதிமதியின் வீட்டுக்கு சென்றபோது

வீட்டில் இருந்த டிவியில் ஊதா கலர் ரிப்பன் என சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவை கலாய்ச்சிக் கொண்டிருந்தார்.

காலிங் பெல்லுக்கு வேலை கொடுக்கும் முன்பே அங்கிருந்த மணியோ கருப்பனோ ஏதோ ஒரு பெயர் கொண்ட நாய் லொள்ளியது.

கதவை திறந்த அந்த பெண் ”யார் ”என கேட்டவுடன்”ரமேஷ் விழுப்புரத்திலிருந்து வரேன் .

மதுமதி...? ”என்றார்.

வீட்டுக்கு வெளியே வந்த அப்பெண் ”சார் என் பின்னாலே வாங்க ”என்றவாறு ஸ்கூட்டியை கிளப்பினாள்.

.ஊருக்கு வெளியே உள்ள ஐய்யனாரப்பன் கோவிலில் நின்ற ஸ்கூட்டி பின்னால் ரமேஷின் கார் நின்றது.

அங்கிருந்த வேப்ப மரத்தின் கீழே இருந்த கல் பலகையில் அந்த பெண்ணும், ராம்கி பேஜில் ப்ரோபைல் பிக்சரில் பார்த்த இளைஞன் வேட்டி சட்டையில் இருந்தான்.

சற்று தள்ளி டிவிஎஸ் எக்ஸ் எல் மொபட்டும், பல்சரும் இருந்தது

.ஷுவை கழட்டிவிட்டு சாக்ஸ் காலுடன் அவர்கள் அருகே மதுமதியும் ரமேஷும் சென்றனர்.”இப்ப சொல்லுங்க சார்” என்றாள் மதுமதி.

”சுரேந்தர், செல்வா ஜெயந்த், பூவரசனை திட்டமிட்டு கொன்றதற்காக உங்க மூணு பேரையும் சந்தேகத்தின் பேரில் இப்பவே அரஸ்ட் பண்றேன்” என ராமேஷ் சொன்னவுடன் சட்டென மதுமதி ரமேஷின் காலில் விழ... பதறி சற்று பின்வாங்கினார் .

அப்போது முதன்முதலில் பேசத் தொடங்கினான் ராம்கி,

கர்ச்சீப்பை வாய்க்குள் திணித்து அழ ஆரம்பித்தாள்

அழகி.”அன்னிக்கு நாங்க நாலு பேரும் கார்ல போகும்போது நாந்தான் காரை நிறுத்தி அழகியை கட்டாயப்படுத்தி காரில் ஏறச்சொன்னேன்.

ஆனால் ஏதேதோ நடந்துவிட்டது. அப்ப நான் எதிர்ப்பு தெரிவிச்சி போராடி இருந்தா என்னை கொன்றே இருப்பார்கள்.

போதை மயக்கத்தில் அழகியை அந்த மூணு பேரும்...எல்லாம் முடிந்து மயக்கம் தெளியாத நிலையில் புறப்பட்ட அவர்களுடன் நான் போகாமல் அங்கியே இருந்து அழகியின் மயக்கத்தை தெளிய வச்சி. அதுவரை மொபைலில் லைனில் இருந்த மதுமதியிடம் தகவல் சொல்லி அவர் கொடுத்த தைரியத்தின் பேரில் அழகியை சமாதானப் படுத்தி எந்த தப்பான முடிவுக்கும் போகக்கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிய பின் அழகியை அவள் வீட்டில் விட்டுவிட்டு நான் கருரில் தங்கி மறுநாள் இதே கோவிலில் மூவரும் சந்தித்தோம்” என்று கட கடவென பேசி மூச்சி வாங்கினான்.பின் தொடர்ந்தான்.

”நான் அடிப்படையில் விவசாயி, வச்ச பயிர் வாடினாலே மனசு கேட்காது. பயிருக்கே கவலைபடும் என்னால அழகி நிலைமை யோசிக்க வச்சது. அழகியின் இந்த நிலைக்கு ஒரு விதத்தில் நானும் காரணம். அதனால நானே அழகியை கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தேன்.

அதை அழகியிடம் சொன்னபோது ஏற்க மறுத்தாள்..

ஆனா மதுமதி சமாதானப் படுத்தி அழகியை சம்மதிக்க வச்சாங்க..”.

”அதன்பிறகு இப்படிபட்ட அயோக்கியன்கள் இச்சமுகத்தில் வாழ கூடாதுன்னு முடிவெடுத்தேன்.

பயிரில் உள்ள களைகளை பிடுங்குவதுபோல முதலில் சினிமா தியேட்டரில் வைத்து நைலான் கயிற்றால் செல்வா ஜெயந்தை முடித்தேன்.

அந்த சாவுக்கு வந்த சுரேந்தரை பஸ்ஸில் வச்சி அதே நைலான் கயிற்றால் கொன்றேன்.

அடுத்தநாள் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் மதுரைக்கு போகலாம்ன்னு கூட்டிவந்து பூவரசனை வைகையில் தள்ளி கொன்றேன்.

இப்ப எனக்கு தெரிந்த மூன்று களைகளை பிடுங்கிவிட்டேன்.இது எல்லாமே அழகிக்கும் மதுமதிக்கும் கொஞ்சம் லேட்டா தெரியும்.

வருகின்ற பொங்கலுக்கு பிறகு அழகியை கல்யாணம் செய்ய முடிவெடுத்தேன்.

இதை போலீஸ் கண்டுபுடிக்கும்ன்னு தெரியும். ஆனா இவ்ளோ சீக்கிரம் கண்டுபுடிக்கும்ன்னு எனக்கு தெரியாது.

மூணு பேரையும் கொன்றது நாந்தான் .ஆனா மோடிவ் அழகிக்கு நடந்த கொடுமைதான் என்று எப் ஐ ஆர் ல காமிக்காம வேற காரணத்தை காமிங்க..

.ப்ளீஸ்இல்லாட்டி இன்னிக்கு மீடியா டாக் ஷோ நடத்தி அவளை வச்சி வியாபாரம் செய்வாங்க...

இதைமட்டும் மனிதாபிமான அடிப்படையில் செய்யுங்க சார் அதுபோதும்” என்று ராம்கி சொன்னவுடன் தூரத்தில் விம்மி கொண்டிருந்த அழகி ரமேஷின் காலில் விழுந்து கதறினாள்...

எப்படி இந்த கேஸை அழகியை சம்மந்தபடுத்தாமல் முடிப்பது என ரமேஷ் யோசிக்க ஆரம்பித்தார்.

சிலையாய் குதிரைமேல் உட்கார்ந்திருந்த ஐய்யாரின் முகத்தில் புன்னகை இழையோடியது.ர

மேஷூக்கு உங்களின் யோசனையை நீங்களும் தெரிவிக்கலாம்...

நிறைவு பெற்றது.

உங்களின் மேலான விமர்சனங்களை எதிர்நோக்கும்..நீலா நீலவண்ணன்...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.