எனை சுற்றிச்சுழலும்
துன்பங்களில் துவழாது
பற்றிப்படரும் ஆசைகளில்
அமிழாது - தலைநிமிர்ந்து
சிரிக்கிறேனெனில் ....
அதற்கு - வேராய் இருப்பது
என் கவிதைகள்....

நஞ்சு கலக்காது -
கொஞ்சமும் புறம் பேசாத நண்பர்களுக்கு
நான் - நல்லவனெனில்
காரணமாவது
என் எழுத்துக்கள்.

அவ்வப்போது அகம் விட்டு
சிறகு விரித்துப்
பறவையாய் வானம் அளக்கிறேனெனில்
உந்துதலாய் இருப்பது
இச் ஜெகம் மேல்
எனது காதல்.!

அனுபவ உளி பட்டு
சிற்பமாகும் தருணங்களில்
இழப்பின் வலிகள் எனை
தீண்டாது அரணாகக்
காக்குமொன்று உண்டெனில்
அது - நட்பெனும் நீங்கள்
தான் அன்பரே....

-- கவிஞர் செல்லம் ரகு...


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.