குழந்தைகளோட படிப்பு எப்படி இருக்கணும் ? அவர்களை எப்படி கண்காணிக்கனும், எதைச் சொல்லி வளர்கணும், எப்படி வேலை பழக்கணும், எப்படி மற்றவர்களோடு பழக விடணும், சமூகத்துல செய்யற நல்ல செயல்களில் எப்படி அவர்களை ஈடுபடுத்தணும், எல்லாமே நம்ம கையில் தானே இருக்கு.

குழந்தைங்க கொஞ்சம் வளர்கிற வரை நம்ம உதவி தேவை. 3ம் வகுப்பு வரை, பின் அவர்களை அவர்களாகவே படிக்க விட வேண்டும். என்ன மார்க் வருது, எது தெரியல, எது புரியல , எப்படி plan செய்யணும் அவர்களாகவே படிக்கட்டும், 2 வருடம் குறைவான மதிப்பெண்கள் வரும். வரட்டுமே என்ை ஆயிடப் போகுது.

அது அவனே உழைத்து வாங்கிய மதிப்பெண், எத்தனை நாள் கை பிடித்தே அழைத்துச் செல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை பின் கையை விட்டு, கண்காணிக்க வேண்டும், பின் அவனே தனியாகப் போவான்.

மதிப்பெண்கள் மட்டுமே ஒருவனின் தரத்தை நிர்ணயிக்குமா? இல்லை பிரபல Chef ஆக இருக்கும் வெங்கடேஷ் பட் கூட ஆரம்ப பள்ளி வகுப்புகளில் தோல்வி அடைந்தவர் தான். பில்கேட்ஸ் முழுசா கல்லூரி படிப்பை முடிக்கல, அம்பானி என்ன படிச்சார்? காமராஜர், சச்சின் டெண்டுல்கர், ஓபராய் சாதாரண க்ளீனரா இருந்தவர், இப்படி மதிப்பெண் பின்னாடி போகாமல் இருந்தவர்களாலும் சாதிக்க முடிந்தது. காரணம் உழைப்பு. அது இருந்தால் போதும்ங்கற விஷயம் முதல்ல பெற்றோருக்குத் தெரியும். மார்க் வாங்கும் மிஷின்கள் அல்ல குழந்தைகள்.

வெளியூர் அழைத்துச் செல்லுங்கள், ெசலவுகளை நோட்டு போட்டு எழுதட்டும், பட்ஜெட் தீர்மானிக்கட்டும், நிதித் தலைமை தானாக வரும்.

படிப்பு என்பது வகுப்புச் செல்லச் செல்லச் கூடுமே ஒழிய குறையாது. பத்து, பனிரெண்டில் ஏகப்பட்டது படிக்க இருக்கு, 6ம் வகுப்பிலே எதற்கு IlT கோச்சிங் . திங்கள் - வெள்ளி வரை பள்ளி, சனி, ஞாயிறுல கோச்சிங் க்ளாஸ் அந்தக் குழந்தை எப்பத் தான் விளையாடும், எப்போ சிரிக்கும், எப்போ தன் குழந்தை oருவத்தை அனுபவிக்கும், யோசிக்க வேண்டியது யார், திணிக்கக் கூடாது கல்வியை, தானா விரும்பி வரச் செய்யணும்.

அதற்காக முழுவதும் அப்படியே விடணுமா, காசு செலவழிக்கற நாம சொல்ல உரிமையில்லையா இருக்கு தாரளமா ஆனா மிரட்டக் கூடாது, படிச்சா இப்படி இருக்கலாம்னு ஒரு மனிதரையும், படிக்காட்டா கஷ்டமும் உண்டுன்னு இன்னொரு மனிதரையும் காட்டணும், அவனுக்குப் புரிய வைக்கணும். எது தேவை தேர்ந்தெ டுக்கட்டும்.

முடியாத ஒருவருக்கு காசு போடணுமா அவனிடம் கொடுங்கள், இவர்களால் முடியாது ஆதலால் உதவி செய்து பணத்தை அவனிடம் தந்து போடச் சொல்லணும். சோம்பேறிகளுக்குப் போடக்கூடாதுன்னு உழைப்பின் உயர்வை ெசால்லி வளர்க்கணும்

குடிசைப் பகுதிக்கு கூட்டிப் போகணும், அவர்களின் இருப்பிடத்தை பார்த்து அவர்களாகவே புரிந்து கொள்வார்கள், அச்சோ அவர்கள் பாவம் என.

ஒரு பொருள் தேவையா 4 தர யோசி, கண்டிப்பா வேணுமா வாங்கு, இப்ப வேணாமா தூக்கிப் போடணும் அந்த எண்ணத்தை நாம தான் கத்துக் தரணும். அடம் பிடிக்கிறாங்க கறதுக்காக கண்டிப்பா ஒரு பொருளை வாங்கித் தரவே கூடாது. புரிய வைக்கணும் அந்த விஷயம் தலை முறை தாண்டி வளரும்.

பெரியவர்கள் இருந்தால் குழந்தைகளை பழக விடணும், சின்னச் சின்ன வேலைகளை அவர்களுக்குச் செய்யப் பழக்கணும். தாத்தா, பாட்டியின் பெருமைகளை பிள்ளைகள் முன் பேசுங்கள், அன்பை விதைத்து விட்டால் முதியோர் இல்லம் என்ற பேச்சே இல்லை.

என்ன பிடிக்கும் குழந்தைகளுக்கு தெரிந்து கொண்டு அதைச் செய்யும் போது அந்த வேலையில் அவர்களை ஈடுபடுத்துங்கள், சொதப்பினாலும் பாராட்டுங்கள், செய்த வேலைக்கு 5, 10 என கூலி கொடுக்கலாம். தப்பிலை, அந்கப் oணத்தை உறுப்படியாக செலவு செய்ய வேண்டும் என கண்டிப்பாகக் கூறி விடுங்கள். நிச்சயம் செய் வார்கள்.

எந்த உணவு உடல் நலத்துக்கு நல்லது, எது கெட்டது போன்ற விஷயங்களை சின்ன வயதில் பழக்க வேண்டும். எலுமிச்சை ஜீஸின் நன்மையைக் கூறி கோக், பெப்சியின் தீமையை விளக்க வேண்டும். பாரம்பரிய உணவுகளை வீட்டிலேயே செய்து தர வேண்டும். காய்கறிகளின் அவசியத்தை உணர்த்த வேண்டும். கிவி போன்ற வெளிநாட்டுப் பழங்களை விட நம்மூர் கொய்யா நல்லது என வலியுறுத்தணும் .

குழந்தைகள் செய்யும் தவறுகளை திருத்த வேண்டிய அதே சமயத்தில் தவறில்லை என்றால் சப்போர்ட் செய்யணும் அதிக மார்க் வந்தால் பாராட்டுகிற நாம், குறைந்த மார்க் விந்தால் எனக்கு இது போதும், நான் happy, இன்னும் கொஞ்சம் மெனக்கிடு நிச்சயம் நல்ல உயரம் தொடுவாய்னு பாஸிடிவ் அப்ரோஜ் தரணும்.

முக்கியமா விதைக்க வேண்டியது அன்பு ஒன்றைத் தான், எவ்வளவு தருகிறோமோ அது அப்படியே திரும்ப வரும்.

கடைசியாக ஒன்று நம் எதிர் பார்பை பிள்ளைகள் மேல் திணிக்க வேண்டாம், அவர்கள் நமக்காக, நம்மை மகிழ்விக்க வந்தவர்கள்.சொத்து சேர்த்து வைப்பதை விட நல்ல சொந்தங்களையும், நல்ல பழக்க வழக்கங்களையும் சேர்த்து வைத்துத் உருவோம். நாட்டிற்கு நல்ல குழந்தைகளை விட்டுச் செல்வோம்.


- உமா தரணி

ஓவியம் : நங்கை(என் மகள் வரைந்தது)

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.