முதல் காதல் யாராலயும் மறக்க முடியாது. இந்த கதையோட ஹீரோக்கு கூட முதல் காதல் புஷ்வானம் தான். One side லவ். ரெண்டு பேரும் ஒரு தடவ கூட பேசுனதே கிடையாது. அந்த பொண்ணு, வீட்ல சொல்றவங்கள தான் கல்யாணம் பண்ணிப்பேனு ஒரு உயர்ந்த் குறிக்கோள். அதனால அவ, தன்ன சுத்தி சுத்தி வந்த ஹீரோவ avoid பண்ணீட்டே இருந்தாள். போதாக்குறைக்கு, அப்பா அம்மாவ சுத்தி வந்து மாம்பழத்த வாங்குனாரே பிள்ளையார், அவரையும் ஹீரோ சுத்தி பாத்துட்டான். இப்போ வர எந்த பழமும் கிடைக்கல. அப்படித்தான் ஒரு நாள் காதல் தோல்வில காதலியவே நினைச்சுட்டு நடந்து போய்ட்டு இருந்தான். அந்த இரவு நேரத்துல சில்லுனு ஒரு சாரல். போகாதீங்கனு ஒரு தேவதையோட குரல் slow motion-ல கேக்க, திரும்பி பாத்தா, அட உண்மையாவே தேவதை தான். ஹீரோக்கு இவ யாருன்னே தெரியாது. ஆனா மெரசலாயிட்டான். அந்த பக்கம் கரண்டு கம்பி அறுந்து போய் கிடக்குனு அவ சொல்ல, ஹீரோவுக்குள்ள ஒரு ஷாக் அடிச்சிருச்சு. சொல்லிட்டு வேற ஒரு பாதையில்ல போயிட்டா. அப்போ ஹீரோ யோசிச்சான் பாருங்க. முதல் காதல் தோல்வியடைஞ்சவன்லாம் ஞானி மாதிரி வாழ்க்கையோட தத்துவத்த புரிஞ்சி வச்சுருப்பாங்கல்ல. ஹீரோக்கும் இப்போ ஞான உதயம் வந்துருச்சு.

அந்த தேவதை போன பாதைய பாத்துட்டே சொல்றான், நான் ஏன் என்னோட பாதைய மாத்திக்கக் கூடாது, வாழ்க்கையோட பாதையையும் சேத்து தான். எவ்வளவோ தடவ (முதல்) காதல சொல்லி பாத்தாச்சு, ஆனா கொஞ்சம் கூட மதிக்காம, கரண்டு கம்பிய என் வாழ்க்கையோட பாதைல போட்டு என்ன முன்னாடி போக விடாம தடுக்குற அந்த முதல் காதல் இனியும் தேவையா? வேற பொண்ணோட சந்தோசமா வாழ்ந்து காட்டனும்னு ஹீரோவுக்கு தோனுது. திடீருனு, அந்த தேவதை திரும்பி ஹீரோவப் பாக்குறா. இப்போ மூளை சொல்லுது முதல் காதல் வேண்டாம்னு, மறுபடியும் அந்த தேவதை திரும்பி பாக்குறா. அதுக்கு இதயம் சொல்லுது, எனக்கும் double OK னு. அப்புறம் என்ன தேவதைய following தான். தேவதை பிள்ளையார் கோவில்குள்ள போக, ஹீரோ உள்ள போகாம அவ செருப்பு பக்கத்துல இவன் செருப்ப போட்டு அழகு பாக்குறான். (ரொம்ப old scene தான்) அவ வெளில வரும் போது ஹீரோ தைரியமா தேவதைகிட்ட, ”உலகத்துல எத்தனையோ பசங்க இருந்தும் ஏன் என் கிட்ட மட்டும் கரண்டு கம்பி அறுந்து கிடக்குனு சொன்ன”னு ரொமாண்டிக்கா கேக்க, அதுக்கு தேவதை ஒரு பதில் சொல்றா, ஹீரோவோட கால் செவ்வாய் கிரகத்துல மிதக்குது. ச்சீ ச்சீ நீங்க நினைக்குற மாதிரி I Love U னு சப்பையா சொல்லல. கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே, ஏன்னா அந்த இடத்துல நீ மட்டும் தான் இருந்தனு சொல்லிட்டு ஓடிப் போய்ட்டா. மொக்க பதில் தான். ஆனா, தேவதை பேசிறிச்சுல அதான் செவ்வாய் கிரகத்துல கால் மிதந்துச்சு.

இவளோட வீடு, நம்பர் (போன் நம்பர்) கண்டுபுடிச்சு, அவ பின்னாடி நரி மாதிரி சுத்தி, ரெண்டு பேரும் காதல் duet-ஏ பாடிட்டாங்க. ஹீரோ இவ்ளோ நாள் பிள்ளையார சுத்துனதுக்கு, இப்போ தான் மாம்பழம் கைக்கு கிடச்சது.

இப்போ தான் எல்லாம் சரியா போய்க்கிட்டு இருக்குனு நினைச்ச ஹீரோ வாழ்க்கைல மறுபடியும் முதல் காதல் விளையாடுது. என்ன கொஞ்சம் வித்தியாசமா விளையாடிருச்சு. முதல் காதல் முடி மாதிரி, என்னதான் வெட்டி வெட்டி விட்டாலும் வழுக்கை விழுற வர வளந்துக்கிட்டே தான் இருக்கும்.

ஒரு நாள் ஹீரோவும், தேவதையும் ஒன்னா கோவிலுக்கு உள்ள போக, அங்க ஹீரோவோட முதல் காதலியும் இருக்குறா. ரெண்டுபேரும் பாத்துகிட்டாங்க. முதல் காதலி ஹீரோவையும், தேவதையையும் பாத்து, மனசுக்குள்ள அடக்கி வச்ச சோகத்த மறைக்குற மாதிரி ஒரு சின்ன சிரிப்பு. ஆனா இந்த ஹீரோ இருக்குறானே, மனசுல யோசிக்கிறான், நாய் மாதிரி சுத்துனேன் ஆனா திரும்பிக் கூட பாக்கல. இப்போ வலிக்கும்டி உனக்கு. ஹீரோவுக்கு முதல் காதலிய ப(லி)ழி வாங்குன மாதிரி ஒரு சந்தோஷம்.

முதல் காதலி ஹீரோ பக்கத்துல வர்றா, தேவதைய உள்ள போக சொல்லிட்டான் ஹீரோ.

முதல் காதலி கண்ணுல கொஞ்சம் கண்ணீர் துளி. ஆனா அழல. ஹீரோவ பாத்து நல்லா இருக்கியானு கேக்குறா. ஹீரோவுக்கு ஒன்னும் புரியாம தலைய ஆட்டுறான். ஏன்னா லவ் பண்ணி பின்னாடி சுத்தும் போது, திரும்பி பாக்கக் கூட மாட்டா. ஆனா இப்போ அவ பேசுறது ஆச்சரியம். சாப்டியானு விசாரிக்குறா. இப்போ படிக்குறியா இல்ல வேல பாக்குறியானு அழுற குரல்ல கேக்குறா. ஆனா அழல. ஹீரோக்கு என்ன நடக்குனே புரியல ஆனா light-ஆ இதயம் வலிக்குற மாதிரி இருக்கு. ஹீரோ கண்ணும் கொஞ்சம் கலங்கிருச்சு. ஏன்னா அவ்வளோ அமைதியா, பாவமா அவ பேச்சு இருக்கு. முதல் காதலி சொல்றா, “பொண்ணு சூப்பரா இருக்கா, உனக்கு ஏத்த ஜோடினு” சொல்லிட்டு ஒரு துளி கண்ணீர அடக்க முடியாம வெளில விட்டுருரா. ஹீரோ ஏன் அழுறனு கேட்க, ஹீரோ கண்ணுலயும் கண்ணீர் வந்துருச்சு. என்ன இருந்தாலும் ஹீரோவோட முதல் காதல்ல. Power அதிகம். உடனே அவ சொல்றா, ”உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனா எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க, அதான் நான் கடவுள்ட அடிக்கடி வேண்டிக்குவேன், உனக்கு என்ன விட நல்ல பொண்ணு கிடைக்கனும்னு, இப்போ கிடச்சுட்டா உனக்கான தேவதை, அவள miss பண்ணிறாதனு சொல்லி அழுவுறா”.

அவ்வளோ தான், முதல் காதலி தன்ன மதிக்கலனு, கோவத்துல இன்னோரு பொண்ண லவ் பண்ணி, ஆணவத்துல இருந்த ஹீரோக்கு செருப்பால அடிச்ச மாதிரி ஆகிருச்சு. அதுக்கு ஹீரோ, “எனக்கு நல்ல பொண்ணு கிடைக்கனும்னு வேண்டுனதுக்கு பதிலா, நீயே கிடைக்கனும்னு வேண்டிருக்கலாம்லனு சொல்லி அழ” முதல் காதலி அமைதியா அழறத நிப்பாட்டிட்டு ஹீரோ கண்ண பாத்து, கொஞ்சம் குழ்ந்தைதனமா, “ ஐயோ, மறந்துட்டேன்”னு சொல்லும் போது, இரண்டு பேருக்குமே அழறத நிப்பாட்ட முடியல.

நான் இப்போவும் உன்ன தான் லவ் பண்றேனு ஹீரோ சொல்ல, இல்ல நான் கடவுள்ட வேண்டி, அனுப்பி வச்ச பொண்ணு தான் உனக்கு ஏத்தவனு, மறுபடியும் குழந்தைத்தனமா முதல் காதலி பேச, இங்கதான் முதல் காதலோட வலி, வலிமை என்னனு இரண்டு பேருக்குமே புரியுது.

நான் இனி உன்ன மட்டும் தான் லவ் பண்ணுவேன், உனக்காக காத்துருப்பேனு ஹீரோ சொல்லி முதல் காதலியோட கண்ணீர துடச்சு விடுறான். இத தேவதையும் கேட்டுடா. தேவதை ஹீரோட்ட சொல்றா,”நான் இப்போ கோவப்பட்டு போனா, நீ போனு என்ன விட்ருவல்ல, நான் போக மாட்டேன், எனக்கு நீ வேணும்னு” சொல்ல, ஹீரோ வேண்டானு சொல்ல, ஆக மொத்தம் ஹீரோ முதல் காதலிக்காகவும், முதல் காதலி ஹீரோவுக்காகவும், தேவதை தன்னோட முதல் காதலன் ஹீரோவுக்காகவும் காத்துட்டு இருப்பாங்க. ஹீரோவும், தேவதையும் தன்னோட முதல் காதல விட்டு குடுக்கமாட்டேனு வெளிப்படையா சொல்லிட்டாங்க. ஆனா இன்னொரு பொண்ணுக்கு மனசுல இருக்கு, சொல்ல முடியல. இனி வேற யார் கூட கல்யாணம் நடந்தாலும் சரி, அந்த முதல் காதல் அசைக்க முடியாதது. அது ஒரு பாறமா நெஞ்சுக்குள்ள வாழ்ந்துட்டே இருக்கும். ஆக, "சிலர் முதல் காதல நினைக்குறாங்க, பலர் அத மறைக்குறாங்க. ஆனா யாரும் மறக்குறது இல்ல". இதான் உண்மை. கண்ணாடி முன்னாடி நின்னு உங்க கண்ணப் பாத்து, உங்கள நீங்களே கேட்டுப் பாருங்க. அந்த முதல் காதலோட முகம், அந்த வலியுற கண்ணீர்ல தெரியும்.சாகுற வரை. யாரும் எந்த ஒரு நிலைமைலயும் முதல் காதல விட்டுக் கொடுக்க தயாரா இல்லை. எல்லாம் சூழ்நிலை. விதியின் சதி…!

தேவதைகளும் தோற்றுப்போகும் காதலி முன்…! முதல் காதலி முன்...!

#Champ
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.