கடுகு சிறிதானாலும் காரம் பெரிது

கனடாவில் ஹொட் டோக் ( HotDog) என்று அழைக்கப்படும் உணவு நடைபாதை ஒரங்களில் கோடைக்காலங்களில் தள்ளு வண்டிகளில் விற்பனையாவதை காணலாம். அவ்வணடிகளில் உணவுடன் சேர்த்து காரமாக உண்பதற்கென மஞ்சள் நிறக் கடுகுக் கூட்டு வைத்திருப்பார்கள். அதை கனேடியர் பலர் சுவைத்து உண்பதைக் கண்டவுடன் என் மனதில் பல வருடங்களுக்கு முன் கேள்விப்பட்ட ஒரு கதை தான் ஞாபகத்துக்கு வந்தது.

இரு குதிரை வியாபாரிகள் தங்கள் வியாபாரத்ததை முடித்து கைநிறைய பணத்துடன் ஒரு உணவுச் சாலைக்கு தம் வியாபாரத்தின் வெற்றியைக் கொண்டாடச் சென்றார்கள். அவர்களுக்கு அருகே அவ்வூர்வாசிகள் மூவர் மஞ்சள் நிறமானதொன்றை ஒரு குவளையொன்றில் இருந்து சிறுதளவு எடுத்து மாமிசத் துண்டுகளுக்கிடையே வைத்து இரசித்து உண்பதைக் கண்டார்கள். சிறிதளவு எடுத்தபடியால் அது விலை உயர்ந்ததாகயிருக்கு வேண்டும் என குதிரை வியாபாரிகள் தமக்குள்ளே பேசிக் கொண்டனர்.

“எங்களிடம் போதியளவு பணம் இருக்கிறது. என்ன விலையானாலும் நாங்கள் அதை வாங்கி சுவைக்க வேண்டும் “ எனத் தீர்மானித்தார்கள்.

உணவு பரிமாறுபவர் அவர்களிடம் வந்து என்ன உணவு வேண்டும் எனக் கேட்ட போது அவர்கள் பக்கத்து மேசையில் இருந்து குவலையைக்காட்டி:

“அதோ பார் அந்தச் சிறுகுவளைக்குள் உள்ள மஞ்கள் நிற பொருள் என்ன விலையானாலும் எங்களுக்கு உண்ண வேண்டும். சின்ன குவைளை போதாது பெரிய குவளை நிறம்ப வேண்டும். விலையைப் பற்றிக் கவலைப்படாதே. எங்களிடம் நிறைய பணம் இருக்கிறது“ என்றார்கள்.

சிறிது நேரத்தில் குவளையில் உள்ளதை பேரவாவுடன் அள்ளி உண்ணத் தொடங்கினர். சிறிது நேரத்தில் கண்கணிலிருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது. நாக்கு காரத்தினால் எரியத்தொடங்கியது. செய்வது அறியாது துடிதுடித்தனர். தண்ணீரை மெண்டனர். காரம் போகவில்லை. இந்த தரம் கூடிய விலை உயர்ந்த உணவு எம்போன்றவர்களுக்கு எற்றதில்லை எனத் தமக்குள் பேசிக்கொண்டனர். இது எஸ்டோனியா என்ற ஊரில் இருந்து வந்த கட்டுக்கதையாயினும் அதில் ஒரளவுக்கு உண்மையிருந்தது. மையத்தரைசார் (Mediterranean)கலாச்சாரத்தில் மஞ்கள் நிறத்தில் அவர்கள் உண்ட Mustard எனப்படும் கடுகுக்கு பெரு மதிப்பிருந்தது. கடுகு உருவத்தில் சிறிதானாலும் காரத்தில் பெரிது என்ற பழமொழி உருவத்தில் சிறியவர்களானாலும் செயலிலும், அறிவிலும் , கோபத்திலும் பெரியவர்கள் என்பதை அப்பழிமொழி எடுத்துக்காட்டுகிறது.

வாசனைத்திரவியங்களுள் கடுகும் ஒன்று. கடுகு மரம் அமெரிக்கா, கனடா, டென்மார்க் , ஜெர்மனி , ஹொலண்ட் . பிரான்ஸ் பிரித்தானியா சீனா ஜப்பான் போன்ற நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. அம்மரத்தின் இலை சலாட் என்ற பச்சடிக்கு பாவிக்கப்படும். கி.மு 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க விஞ்ஞானியான பைத்தகரஸ் Pythagoras) தேள்கடிக்கு கடுகு ஒரு உகந்த மருந்தென குறிப்பிட்டுள்ளார். “தீயது தீயதைப் போக்கும்” என்ற நெறிமுறைக்கிணங்க அவர் அதை எடுத்துச் சொல்லியிருக்கலாம். கடுகு தோல் எரிச்சலைக் கொடுக்கக் கூடியது. பைத்தகரஸ் வாழ்ந்து கிட்டத்தட்ட 100 வருடங்களுக்குப் பின் ஹிப்போகிரேட்டஸ் என்ற மருத்துவத்துறையில் பாண்டித்தியம் பெற்ற கிரேக்கர் கடுகினால் செய்யப்பட்ட பல மருத்துவ குடி நீர்களை வறையரைச்செய்தார். ரோமில் வாழ்ந்த பிலினி (Pடலெ) என்பவர் சோம்பேரியாக உள்ள பெணகள் கடுகு அருந்தினால் சுறுசுறுப்புள்ள குடும்பப் பெண்ணாக மாறுவாள் எனச் சொன்னார். அக்காலங்கலில் உரோமர்கள் போசனங்களுடன் கடுகையும் சேர்த்து உண்டார்கள். கி.பி 9ம் நூற்றாண்டில் கடுகு கலாச்சாரம் கிரேக்கம் ரோம் ஆகிய இடங்களிலிருந்து பிரான்சுக்கும் 12ம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஜெர்மனிக்கும் பரவியது. வஸ்கோடிகாமா தன் பயணத்தின் போது இந்தியாவுக்கு ஒரு பீப்பாய் நிறம்ப கடுகு எடுத்துச்சென்றார்.

கடுகுக்கு Mustard என்ற ஆங்கிலப்பெயர் பிரான்ஸ் மொழியில் அழைக்கப்பட்ட பெயரான Moutarde என்பதிலிருந்து மறுவியதாகும். ஜெர்மனி இத்தாலி . சுவீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் Snaps எனக் கடுகை அழைப்பர். இப்பெயர் எகிப்து நாட்டிலிருந்து கிரேக்கத்தினூடக பரவியிருக்கலாம்.

1234 ம் ஆண்டு நோர்வே நாட்டைச் சேர்ந்த வைக்கிங் என்ற இனத்தவர்கள் ழுசமநெல என்ற தீவின் மீது கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்தனர். அவர்கள் அத்தீவுக்கு போய் சேரமுன்னர் Erl of Conway என்பவர் அங்கு சென்று அவர்களை சிறைபிடித்து கடுகு நிறைக்கப்பட்ட பீப்பாக்குள் அவர்களை தலை கீழாகத் தொங்கவிட்டு கொன்றான். இவ்வழி மரணதண்டனை அதன்பின் ஒரு போதும் நடத்தப்படவில்லை.

டென்மார்க்கிலும் இந்தியாவிலும் வீட்டைச் சுற்றி கடுகை சிதறினால் பேய் பிசாசுகள் வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம் என்பது நம்பிக்கை. டென்மார்க்கில் கடுகுடன் இஞ்ஞியையும் பாவிப்பார்கள். Faeroe தீவுகளில் கன்னத்தில் கடுகுப் பசையைத் தடவுவதன் மூலம் பற்கொத்pயைபோக்கலாம் என அத்தீவுமக்கள் நம்பினர். திருமண ஆடைகளில் கடுகை வைத்து தைப்பது ஜெர்மனிய மரபாகும். கடுகளில் கறுப்பு நிறக் கடுகு வெள்ளை நிறக் கடுகு என இரு வகையுண்டு. கறுப்பு நிறக்கடுகு காரம் கூடியது. இதன் பிறப்பிடம் மத்திய கிழக்கு பகுதினெய பலர் கூற்று. கடுகின் ருசியானது, விதையை நொறுக்கி தண்ணிருடன் கலந்தவுடன் தோன்றும். கிட்டத்தட்ட 10 முதல் 15 நிமிடங்கலில் கடுகின் வாசனை மூக்கைத் துளைக்கும்.

தோட்டங்களில் கடுகுச் செடியை வளர்பதன் முலம் கரையான் மற்றும் மரம் செடிகளை பாதிக்கும் பூச்சி வகைகளிலிருந்து மரங்களை காப்பாற்ற முடியம். வயிற்றுவலி ஜலதோஷம் வாதம் மூச்சுப்பிடிப்பு போன்ற வியாதிகளுக்கு மருந்தாக சீனாவில் கடுகைப் பாவிப்பார்கள். கடுகு எண்ணையை டரடிசஉயவெ எனப்படும் உயவுடும் எண்ணையாகவும் பாவிப்பதுண்டு. பசியை தரவும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் கடுகு உதவும். காலணி உறையில் கடுகுத் தூள் தூவினால் காலை உறைபனிகட்டியில் இருந்து காப்பாற்றும். கடுகு மரத்தின் இலையில் கலசியம் , பொஸ்பரஸ் , மக்னீசியம் போன்ற உலொக்சசத்துக்களும் விட்டமின் டீ யும் உண்டு.

1917ல் ஜெர்மனிய இராணுவம் கடுகு வாயுவை ( Mustard gas) போரில் பாவித்தார்கள். அதுவே அப்போது பாவிக்கப்பட்ட நச்சுத்தனமையுள்னு இராசயன வாயுக்களுள் சக்தி வாய்ந்தது. சிறிதளவு கடுகு வாயுவை குண்டுக்குள் புகுத்தினால் போதுமானது. மணமில்லாத கடுகு வாயு 12 மணித்தியாலத்துக்குள் தன் சக்தயைக் காட்டத் தொடங்கும். மண்ணில் அதன் பாதிப்பு பல கிழமைகளுக்கு நிற்கக் கூடியது.

ஜாதிக கதைகளில் கடுகைப்பற்றி குறிப்பிடப்படடுள்ளது. தன் ஒரே மகனை இழந்த கீசா கோதமி என்ற தாய் புத்தரிடம் போய் தன் மகனின் உயிரை மீட்டுத் தரும்படி வேண்டினாள். “நல்லது எனக்கு நீ ஒரு பிடி கடுகை மரணம் சம்பவிக்காத எதாவது ஒரு வீட்டில் இருந்து கொண்டு வந்து தா, அதன்பின் உன் மகனுக்கு உயிர் கொடுக்கிறேன் ” என்றார் புத்தர். கோதமியால் அவர் கேட்டபடி செய்யமுடியவில்லை. கடுகின் மூலம் பிறப்பும் இறப்பும் உலகில் எல்லோருக்கும் பொது என்ற தத்துவத்தை கோதமிக்கு விளக்கினார் புத்தர். கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்னரே கடுகைப் பற்றி இந்தியாவில் தெரிந்த வைத்திருந்தனர் என்பதையும் இக்கதை எடுத்துக்காட்டுகிறது.

♣♣♣♣

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.