எல்லாம் உன்னாலே....

என்
தேவ தேவதையே...
என்
உயிரையும்
உணர்வையும்
உனதாக்கிக் கொண்டு
என் அசைவுகளுக்கெல்லாம்
அகராதியிலேயே இல்லாத
காரணங்களை முன்வைக்கிறாய்...

என்னை
அசைப்பவளும் நீ
இசைப்பவளும் நீயாகவே இருக்கும்போது
என் சுயம் என்பது
எங்கே இருக்கிறது...

கற்பனையான
உன் கண்டு பிடிப்பால்
விலகிச் செல்கிறாய்...

உடலை விட்டு
உயிர் விலகுதல் போல்..

என்
சக்தியும் புத்தியும்
நீயேயான நிலையில்
உன் முடிவுகள்
என் மீது
அணுகுண்டாகத்தான் விழுகிறது...

என் யாவும் நீயான பிறகு
என் வலியை
உன்னால் உணர முடியாமலா போகும்...

உன் இதயமே
என் சிம்மாசமான பிறகு
அதை விட்டு
நான் இறக்கப்பட்டாலும்...
அங்கேயே வைத்து
நான் ஆராதிக்கப் பட்டாலும்
என்
தேவ தேவதையே....
எல்லாம் உன்னாலே...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.