குறுக்கீடுகள்

 

பெர்சனல் செகஷன் புஷ்பா பரபரப்பாக பஞ்சமியின் சீட்டுக்கு அருகில் வந்தாள்.'''ஏய் ,பஞ்சமி, உனக்குப்போன்வந்திருக்கு, கால் மணி நேரத்திலே மூணு கால் ஆச்சு ஆபீஸ் பூராவும்தேடறோம். எங்குமே அகப்படாத நீ எப்படி சீட்டிலே, இப்ப ..குவிக் போ போ "என்று அவசரப்படுத்தினாள். 

"காண்டீனுக்கு போயிட்டு வரேன் புஷ்பா ,அதுசரி போனிலே யாருன்னு கேட்கலையா நீ?'

"யாரோ செல்வரத்தினம்னு சொன்னார் ".

ஒ....எதற்காக என்னை அழைக்கிறார் ,ஒரு வேளை அவர் மகனை பற்றி பேசவோ "சிந்தித்தபடியே போனை எடுத்தாள்." ஹலோ நான் பஞ்சமி பேசறேன் ".

"என்னம்மா சௌக்கியமா இருக்கியா ?நான் உன்கிட்டே முக்கியமான விஷயம் பேசணும் ,சாயந்திரம் ஆறு மணிக்கு பெரிய கோவிலில் காத்திருக்கேன் ,உன்னால வரமுடியுமா ?".

"ஷ்யூரா வரேன் சார் ,வேற ஒன்னும் இல்லையே ,வைச்சுடட்டுமா ".

"மறந்துடாதே முக்கியமான விஷயம் '.

மாலை பரபரப்புடன் ஆபீஸ் விட்டு பெரிய கோவிலை நோக்கி நடந்தாள். குழப்பத்தோடு  கோவில் வாசலிலேயே எதிர்கொண்டார் செல்வரத்தினம் '.

"என்னசிர் என்ன விஷயம் ?'பதற்றத்தோடு கேட்டாள் ." பஞ்சமி ..

'அம்மா பஞ்சமிநீ என் மகன் ரவியை காதலிக்கிற விஷயம் எனக்குச்சிலநாட்களுக்குமுன்புதான் தெரியும் உன் அப்பா என்னோட நண்பர் ,நண்பனோட மகளை நான் மருமகளா அடையிறதிலேஎனக்கும் சந்தோஷம்தான். ஆனால் ...:"

"ஆனால் என்ன சார்?'

"நீயோ ஆசாரமான குடும்பத்திலே பிறந்தவள் ,என் மகனோ கடவுளை நம்பாதவன் ,நாத்திகம் பேசறவன் ,நீ எதையெல்லாம் பெரிசா கருதுகிராயோ அதையெல்லாம் அவன் மூட நம்பிக்கைன்னு பேசுவான் ,ஒத்துப்போகுமா வாழ்க்கை?இதையெல்லாம் நீ யோசிக்கவில்லையா ?நீ சின்னஞ்ச்சிரியவள் நல்லது கேட்டதை நான் எடுத்துச்சொல்வது என் கடமையில்லையா ?கட்சி ,கட்சின்னும்  என்றும் அலைகிறவன். மணவாழ்க்கையிலே நிறைவைத்தருவானா ?நல்லா யோசிச்சு பாரும்மா "

"சார் ,நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன் ,நீங்க உங்க கடமையை செஞ்சுட்டீங்க கவலையை விடுங்க , என்னோட ஆன்ம பலத்தால் அவரை என் வழிக்கு கொண்டுவரமுடியும்னு நம்பறேன். 

அப்படி முடியாத பட்சத்தில் ..நான் சுமுகமாகவே விலகிவிடுகிறேன் ,உங்க கவுரவத்திற்கும் ,நல்ல மனசுக்கும் களங்கம் வரும்படி நடக்கமாட்டேன் .என்னை நீங்கள் நம்பலாம் ".

"அவனை திருத்தமுடியும்கிற உன் நம்பிக்கையை ,திடத்தை நான் பாராட்டுகிறேன் ,அப்படி அவன் திருந்திட்டா என்னைவிட சந்தொஷப்படுபவர்கள் யாரும் இருக்கமுடியாது. அப்பா நான் வரேம்மா. உனக்கு என் வாழ்த்துக்கள்.

"விடை பெற்றுக் கொண்டார் செல்வரத்தினம்.

பஞ்சமிக்குள் ரத்த ஓட்டமே நின்று உடம்பே மரத்துவிட்டார்போல தோன்றியது .சொல்லிவிட்டாலேத்தவிர ரவியை எப்படி மாற்றுவது என்ற கவலையும் பிறந்தது .

பஞ்சமியின் வருகைக்காக காத்து நின்ற ரவி பொறுமையிழந்தான் ..இத்தனை நாழி என்னசெயகிறாள் ?ஒரு வேளை வீட்டில் யாராவது விருந்தாளி வந்து விட்டார்களோ ?இல்லை நான் இங்கே காத்திருப்பேன் என்பதையே மறந்திருப்பாளோ ?என்ன இருந்தாலும் இந்த பெண்களே சுத்த மோசம் ,தன்னை ஒருவன் விரும்புகிராநேன்றால் அவனை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள்.

என் துடிப்பும் ஆவலும் அவளுக்குவேடிக்கையாகப் போய்விட்டனவாஎன்ன ? முதல் சந்திப்பிலேயே இப்படியொரு அழுத்தமான பாதிப்புகளை உண்டாக்கி இன்று அவளுக்காக மணிகணக்காக காத்திருக்க  வைக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை .எத்தனை நாழிதான் இப்படி கொக்குபோல் நிற்பது ? எரிச்சலடைந்த ரவி எதிர்த்தார்போலிருந்தகடைக்குச்சென்று நிஜாம் பாக்குப்பொட்டலத்தை வாங்கி  வாயில் போட்டுக்கொண்டான் .

ஐந்து நிமிடத்திற்குப்பின் ------ தூரத்தில் பஞ்சமி வருவது லேசாகத் தெரிந்தது . என்ன அசமந்தத்தனம் ?ஆடி அசைந்து கொண்டு ...வரட்டும் என்று அலட்ச்யமாக நின்றான் .அருகில் வந்த பஞ்சமி "ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா ரவி ,ஐயம் ..சாரி "

"உம்னா ஒரு சாரி சொல்லிடுவீங்களே ,எத்தனை நாழி காத்துக்கிட்டிருக்கிறது?'எரிச்சலுடன் பொருமினான். மௌனமாக அவனை ஏறிட்டாள் பஞ்சமி ,சரி,சரி முறைக்காதே. 

படத்துக்கு நேரமாயிட்டு  கிளம்பு" உத்தரவிட்டான் ரவி.

"சாரி ரவி ,இன்னைக்கு படத்துக்கு என்னால வரமுடியாது "

"ஓஹோ ,என்ன விஷயம் மகராணி ?'

"எங்க அம்மாவுக்கு இன்னைக்கு பிறந்த நாள் ,கோவிலுக்குப்போய் அர்ச்சனை பண்ணனும் "

"கோவிலுக்கா ..?"அதிர்ந்தான் ரவி ...."ஆமாம் வாங்களேன் பேசிகிட்டே போகலாம் "என்றாள்.

"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ?நான் இந்த மூட நம்பிக்கைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் என்று தெரிஞ்சுமா என்னை கோவிலுக்கு கூப்பிடுரே ?'

"அடேயப்பா ,கோவில் என்ன நீங்க நுழையக்கூடாத பாவமான இடமா என்ன ?நீங்க சுவாமி கும்பிட வேண்டாம் , எனக்குத்துணையா வந்தா போதும் ".

'"நோ பஞ்சமி ,நோ என்னால கோவிலுக்கு வரமுடியாது. மூட நம்பிக்கைகள் வளருவதற்கு காரணமே பெண்கள்தான் அதுல நீயும் சேர்ந்துட்டிஎ ன்னுதான் எனக்கு வருத்தமா இருக்கு. என்ன படிச்சு என்ன வேளை பார்த்து என்ன பயன் ? பத்தாம் பசலியா இருக்கிறாயே ,அந்த கல்லுக்குப்போய் பூஜை செய்யாவிட்டால் உங்கம்மாவிற்கு ஆயுசு குரஞ்சிடுமா என்ன இல்லை பூஜை செய்யரதினாலே ஆயுசு கூடிடுமா "என்னபெசறேநீ ?'
" ஸ் டாப்பிட் ,நான்சென்ஸ் ,இப்ப நீங்க என்ன சொல்றீங்க ?கடவுள் என்று ஒன்று இல்லேன்னா ?'காரமாக கேட்டாள் .பஞ்சமி ......ஓர் இனிமையான மாலையாக இருக்கவேண்டிய சூழ்நிலை ஓர் இறுக்கமான மாலையாக மாறிக்கொண்டிருந்தது. உணர்ச்சிகளின் பிடியிலிருந்து இருவருமே விடுபட முடியாமல் மேலும் மேலும் அதிலேயே அமிழ்ந்துகொண்டி ருந்தனர். 

"கடவுள் என்று ஒருவர் இல்லை அது மூட நம்பிக்கைதான் "அழுத்தமாக அடித்துச்சொன்னான் " ரவி.

"அது மூட நம்பிக்கை இல்லை ஆரோக்கியமான நம்பிக்கை "அவளும் உருதியாகச்சொன்னாள்.

"என்ன உளறுறே ?ஆயிரம் பேர் உன்ன உணவும் ,உடுக்க உடையும் இல்லாம கவலைப்படரப்ப ஒரு கல்லுக்கு தேனையும் ,பாலையும் அபிஷேகம் என்ற பேரிலே கொட்டறது ஆரோக்கியமான நம்பிக்கையா/?"

"நானும் அதையேத்தான் கேட்கிறேன் மக்களின் அன்றாடப்பிரச்சனைகளே தீர்க்கப்படாமல் இருக்கையில் ஒரு தனி மனிதனுக்கு பொன்னாடைகளும் ,பூமாலைகளும் ,எடைக்கு எடை வெள்ளி தங்கமுமா கொடுக்கி றீங்களே அது மூட நம்பிக்கை இல்லையா ?'

"முட்டாள் தனமா பேசாதே ,நாங்க இப்படி கொடுக்கிறது ஒரு மனிதரிடமாவது சேருது நீங்க கொட்டறது வீனாகவல்லவா போகிறது "

"மனிதன்கிட்டே போறது கருப்பு பணமா மாறி பெட்டியிலே தூங்குது ,எந்த வகையிலே மற்றவர்களுக்குப்பயன் படுத்து சொல்லுங்க ?பார்ப்போம் "

"பஞ்சமி நீசொல்றதேல்லாம் ..."

"நம்ப மாட்டீங்க ,ஏதுக்கமாட்டஈங்க ,ஏன்னா அப்படியொரு விதண்டாவாதத்துக்கு உட்படுத்தப்பட்டி ருக்கீங்க , மூளைச்சலவை செய்யப்பட்டி ருக்கீங்க. இன்னைக்கு ஏராளமான இலைகர்களின் சீரழ்வுக்கும் நாட்டில் கொலை , கொள்ளை நடக்கிறதுக்கும் இந்த மனப்பான்மைதான் காரணம் ,மனிதனுக்கு இன்பம் வருகிற நேரத்துக்கு ஒரு பற்றுகோடு தேவைப்படுது நம்ப சமூக அமைப்பிலே யாரையாவது நம்பித்தான் ஆகவேண்டியிருக்கு மனிதர்களும் யார் மேலையாவதுனம்பிக்கை வைத்து பழக்கப்பட்டுவிட்டார்கள். அதனாலதான் கடவுள் என்கிற பேரிலே நம்பிக்கையை உருவாக்கினாங்க நாமும்மனதிலே விரக்தியோ வேதனையோ ஏற்படரப்போ கடவுள்கிட்டே புலம்பறோம் மனசு சமாதானமாகி சொச்ச காலத்தைதொடருவோம் ஆனால் சமீப காலங்களில் உங்களை மாதிரி ஒரு கூட்டம் சேர்ந்து கடவுள் இல்லேன்னு சொல்லிக்கிட்டு அலைய ஆரம்பிச்சுட்டாங்க ,மக்களுடைய ஒரே நம்பிக்கையும் ஆட்டம் கண்டு அதனாலே வாதனையும் விரக்தியும் ஏற்படரப்ப ஒன்னும் செய்யத்தோணாம வன்முறைகளில் ஈடு படுகிறார்கள் ".

"நீதான் புரியாம பேசறே பஞ்சமி கடவுள்தான் இல்லைன்னு சொல்றோமேத்தவிர மனிதாபிமானம் வேண்டாம்னு சொல்லலே என் கடவுள் உங்கடவுள் என்கிற மத நம்பிக்கையாலேதான் இப்ப கொலைகள் நடக்குது "

அதைத்தான் நானும் சொல்றேன் நல்லவங்களுக்கு கடவுள்கிட்டே நம்பிக்கை இருந்தது முரடர்களுக்கு பயம் இருந்தது நீங்க அந்த பயத்தை போக்கிட்டஈங்க 'விளைவு யாரோ ஒரு மனிதனை சப்டியுட்டா வைச்சு தலைவன் என்கிற பேரிலே அவனுக்கு பாதபூஜை யும் ,புகழ்மாலை பாடறதும் ,அவனுக்காக தீகுளிக்கிறதும் சகஜமாயிடிச்சு கடவுளை கல்லுன்னு சொல்ற நீங்க உங்கத்தளைவர்களை  ஏன் கல்லால் கட்டி வைக்கிறீங்க மூலைக்கு மூலை".

நீங்க கோபப்படாம சிந்திச்சு பாருங்க நம்ம மாதிரி உள்ள சாதாரண மனுஷ்ங்ககிட்டே நம்முடைய தன்மானத்தை விட்டுட்டு வாழ்க என்று கோஷம் போடறதை விட இந்த அகண்ட பேரு வெளியில் ELLAAVATRAIYUMIYAKKUKIRA உங்க வார்த்தையில் சொன்னா அந்த இயற்கையை கொண்டாறது மேலில்லையா /இது மூட நம்பிக்கையில்லேங்க உயர்ந்த வாழ்க்கை தத்துவம் "

"பஞ்சமி நான் உன்னோட கோவிலுக்கு வரத்தயாராயிள்ளே நீ போறதையும் நான் விரும்பலே ''.

"இதப்பாருங்க ரவிகடவுள் இருக்கிறார் என்பது என் நம்பிக்கை இல்லேங்கிறது உங்க நம்பிக்கை மொத்தத்திலே நம்பிக்கையை அடிப்படயாவைச்சுத்தாணிந்த உலகமே இயங்குது , அதை நீங்க மறுக்க முடியாது. அதே போல தெய்வநம்பிக்கையை மூட நம்பிக்கைன்னு நீங்க சொல்வதைப்பற்றி நான் வருந்த வில்லை. எந்த மூடனும் எந்த அறிவாளியும் நம்மிடம்தானே வரப்போகிறான் என்ற நம்பிக்கை அந்த தெய்வத்துக்கு இருக்கே யார் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் ஏதோ என் நம்பிக்கையை பழித்ததால் நானும் சூடாகி விவாதம் செய்ய வேண்டியதாகி விட்டது. 

சாரி  என்னை பெற்றவளுக்கோர்ச்சனை பண்ற இந்த சின்ன விஷயத்திலேயே நமக்குள் எப்படி பேதம் வந்து விட்டது பார்த்தீர்களா காலம் பூரா நாம் எப்படி மனம் ஒத்து வாழப்போகிறோம் ,வேண்டாம் உங்கள் நம்பிக்கையை நான் தகர்க்க விரும்பலே என் நம்பிக்கையையும் விட்டு கொடுக்க தயாரா இல்லே ,நாம் நல்ல நண்பர்களாகவே பிரிவோம் நீங்க உங்க பாதையிலும் நான் என் பாதையிலும்  போவோம் அனாவசிய குறுக்கீடுகள் இருவருக்குமே வேண்டாம் அதுதான் நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்க்கை நான் வரேன் ,குட் பை "..அவள் நடந்தால் அவள் சொன்ன தெய்வநம்பிக்கை பற்றிய கடைசி வரிகள் அவனுக்குள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது புரியாமல் நடந்தாள்.  அவன் இப்போது அவளைத்தொடர்ந்தான் பஞ்சமியின் ஆன்ம பலம் அவனை எப்படியெல்லாம் மாற்றிவிட்டது என்பதை எண்ணிஎண்ணி ஊரும் உறவும் பெருமிதப்பட்டன.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.