தேவையா. .?


இன்று ஓரளவிற்கு முற்போக்கு சிந்தனையுடனும், பொறுப்புடனும் சமுதாயம் இருந்தாலும், கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்ப்போம். ..ஒரு பெண் எத்தனை ஆசையோடும், கனவுகளோடும், கற்பனைகளோடும் திருமண பந்தத்திற்குள் நுழைகிறாள். .


ஏதோ விதியின் விளையாட்டால் ஓரிரு ஆண்டிற்குள் அவள் கணவன் இறந்து விட்டால் அவளின் நிலை? அப்பப்ப. .. நினைத்துப் பார்க்கவே பகீர் என்றிருக்கிறது!

அவள் கோலத்தை மாற்றி , அவள் ஏதோ தவறு மற்றும் பாவம் செய்துவிட்டாற் போல் அவளை நிலைகுலைக்க செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்கு முற்றிலும் விளங்கவில்லை. ...


ஒரு பிரிவினர் மொட்டை அடித்து வெள்ளை புடவை கட்டிக் கொள்வது என்பது என்ன கொடுமை. ..! நன்றாய் ஞாபகம் இருக்கிறது. எனது உறவினர் கல்யாணம் ஆகி ௬ மாதத்திற்குள் கணவனை இழந்தார். ... அவர் இந்நிலையில் இருந்தார். .. மிஞ்சிப் போனால் அப்பொழுது அவருக்கு வயது 20 கூட இருக்காது. ..அந்தக் கோலம் என் கண்ணில் எத்தனையோ முறை கண்ணீர் வர வைத்ததுண்டு. ... எனக்கு வயது இல்லை என்றாலும் அன்றே என் மனம் நினைத்ததுண்டு " என்ன இது? ஏன் மனிதர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர். .. ? அவள் கணவன் இறந்தது அவள் குற்றமா? அதற்கு எதற்கு இவளுக்கு இந்த தண்டனை? கோலத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? எதை நிரூபிக்க வருகின்றார் என்று தெரியவில்லை. ... வெற்று நெற்றி, கழுத்து , கை இவை எதைக் குறிக்கின்றன? கணவன் இறந்தால் அனைத்தையும் துறந்து துறவிபோல் வாழவேண்டும் என்றா?


மனைவி இறந்தால் ஒரு ஆணை இப்படி செய்யத் துணிவீர்களா? சொல்லுங்கள்? ஏன் ? இழப்பு என்பது இருவருக்கும் பொதுதானே ? ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. .. இழப்பின் சோகத்தை அவர்கள் மனதில் சுமக்கட்டும். .. ஏன் கோலத்தில் திணிக்கிண்றீர்கள்? தவறு என்று யாருக்கும் தோன்றவில்லையா?


ஒரு பெண்ணோ, ஆணோ, அவர்கள் முடிவெடுக்கட்டும் அவர்கள் எப்படி வாழவேண்டும் என்று? சாஸ்திரம், சம்ப்ரதாயம் என்று அவர்கள் மீது எதையும் புகுத்தாதீர்கள். ... அது முற்றிலும் தவறான ஒன்று. ..


காலங்கள் மாறிவிட்டன. ... ஆனாலும் சிலர் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள மறுக்கின்றனர். .. இந்தச் சமுதாய அமைப்பு அப்படி. ... " என்னடி இது? இப்படி கலர, காலரா புடவையைக் கட்டிண்டு திரியரா? " என்று சிலர். .." அநியாயமா இல்லை ... விதவை இவை. .. இப்படி அலங்காரம் 'செய்ட்துண்டிருக்கா ? " இப்படி சிலர். ... வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாத வேலை எதுவும் இல்லாத மக்களால் துன்பப்பட்டு , மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் எத்தனை? உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். .. அவர்களை நீங்கள் வாழ வைக்கப் போகிறீர்களா? இல்லையே? பின், அவர்கள் என்ன உடுக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்கிற அக்கறையும் வேண்டாம் உங்களுக்கு. ..


போகட்டும் பழைய காலம். .. புதுமைப் பெண்களை வரவேற்போம். ..குறைந்த பட்சம் அவர்களை வாழவிடுவோம் !tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.