என்கவுண்டர்

 

“சார் இடம் தெரிஞ்சுடுச்சி”” ராகவ் சொன்னவுடன் ““டீமை அலெர்ட் பன்னுங்க க்விக்”” என்றேன் உற்சாகத்துடன்.

நான் மத்திய உளவு துறையின் முக்கிய அதிகாரி. பல மாதங்களா நானும் என் டீமும் தேடிய முக்கிய தீவிரவாதியின் இருப்பிடம் தெரிந்து விட்டது. அதற்காக தான் இப்பொழுது செல்கிறோம்.

நான் பெரிய சண்டையை எதிர்பார்தேன். ஆனால் மிக சரியாக ஐந்து நிமிடத்தில் அந்த சண்டை முடிந்தது. முக்கிய தீவிரவாதியும் அவன் சகாக்கள் ஐந்து பேரும் சரணடைந்தார்கள். அனைவரும் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவத்தால் தொடர்புடையவர்கள்.

செல்போன் அழைத்தது. “சார்! ஆப்ரேஷன் சக்ஸஸ்”” உயர் அதிகாரிக்கு தகவல் சொன்னேன்.

“குட்! ஆனா அவங்களே கோர்டுல சப்மிட் பண்ண வேண்டாம், என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்””.

“சாரி சார்! எனக்கு இது சரியா படலே ,இவங்கள வச்சு பெரிய நெட்வொர்க்கை பிடிக்கலாம் சார். அதனால இவங்கள கோர்டுல ஒப்படைக்கலாம்””.

“இதப்பாருங்க இது எதுவும் சரியா வராது இப்ப அவங்க குற்றத்தை ஒத்துக்கிட்டாலும் நாளைக்கு கோர்ட்ல இல்லைனு சாதிப்பாங்க. அப்ப சாட்சி இல்லாம விடுதலை ஆவாங்க. அதுவரைக்கும் அரசாங்க செலவுல அவங்களுக்கு உபச்சாரம் பண்ணனுமா சொன்னதை செய்யுங்க இது ஆர்டர்!!””

““இல்ல சார் என் டூட்டி படி நான் இவங்கள கைது தான் பண்ணனும். நான் கோர்டுல ஒப்படைச்சுறேன் அப்புறம் நீங்களே முடிவு பண்ணுங்க”” செல்லை அனைத்தேன்.

அனைவரையும் வண்டியில் ஏற்றினேன். நேராக கோர்ட் போகுமாறு சொன்னோன். அந்த தீவிரவாதி என்னை பார்த்து சிரித்தான். “

“என்ன சார் போன் பண்ணி சொல்லியும் நீங்களும் உங்க டீமும் பத்து நிமிஷம் லேட்” திகைத்தேன்.

“என்ன யோசிக்குறீங்க நாங்க தான் இன்ஃபெர்மேஷன் சொன்னோம். இல்லையினா உங்களால எல்லாம் எங்கள பிடிக்க முடியாது. எங்களுக்கு மருத்துவ தேவைகள் இருக்கு. அப்படியே கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனாலதான் இப்ப நாங்களே அரஸ்ட் ஆனோம். இல்லனா தகவல் சொல்லியே லேட்டா வர நீங்க எப்படி எங்கள அரெஸ்ட் பண்ண முடியும். எப்படியும் ரெண்டு மூணு வருஷதுல கோர்டு ரீலீஸ் பண்ணிடும் அப்புறம் திரும்பவும் தொழிழை பார்க்க வேண்டியதுதான்”.”

சரியாக அவன் நெற்றியில் சுட்டேன்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.