அன்புள்ள அப்பா அம்மாவுக்கு....

நான் தான் உங்க பவி குட்டி பேசுறேன்.... நீங்க 2 பேரும் எப்படி இருக்கீங்க????....கண்டிப்பா நான் இல்லாம சந்தோசமா இருக்க மாட்டிங்க நினைக்கிறேன்!!!...உங்கள தனியா விட்டு வந்ததுக்கு என்ன மன்னிச்சிருங்க.... நீங்க 2 பேரும் என் மேல எவ்வளோ பாசம் வச்சிருந்திங்க...உங்க 2 பேரையும் எனக்கு ரொம்ப புடிக்கும்....அம்மா நான் உங்க வயித்துல உருவான உடனே அப்பாவுக்கு எவ்ளோ சந்தோசம்!!!... உங்க வயித்துக்குள நான் இருப்பேன் அப்பா வெளிய இருந்து கேப்பாங்க எப்ப வெளிய வருவா??? அப்படின்னு....எனக்கும் உங்கள பாக்க ஆசையா இருக்கு சொல்ல தோணும்...என்ன நல்ல படியா வழக்கனும், நல்ல ஸ்கூல் சேக்கணும்,எல்லாமே கத்து குடுக்கணும் அப்படி இப்படி நீங்க பேசிட்டே இருப்பிங்க நான் எல்லாத்தையும் ஒட்டு கேட்டுட்டே இருப்பேன்... ஒரு நாள் நீங்க அப்பா கிட்ட கேட்டுட்டு இருந்திங்க... அப்பா அம்மா கூட இருந்தா எனக்கு வளைகாப்பு நடத்திருப்பாங்கள ராஜ்???...அதுக்கு அப்பா சொன்னாங்க இப்ப என்ன நாம FRIENDS கூப்பிட்டு நடத்தலாம்னு...என்ன தான் இருந்தாலும் அவங்க பண்ற மாறி இருக்காதுல...கவலைப்படாத சுகன்யா நாம குழந்தை பிறந்ததும் நாம குடும்பம் நாமளா புரிஞ்சிக்கும் சொன்னாங்க.. எனக்காக என் வருகைக்காக நீங்க 2 பேரும் அவ்ளோ எதிர்பார்ப்போடு இருந்திங்க....

அந்த நாளும் வந்தது...அம்மா வலியால துடிச்சாங்க நீங்க அம்மாவ தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் போனிங்க...அம்மாவுக்கு கஷ்டம் குடுத்து நான் வெளிய வந்தேன்..என்ன பாத்ததும் அம்மாவுக்கு ஒரே சந்தோசம்...என்ன தூக்கிட்டு போயி உங்க கிட்ட தான் குடுத்தாங்க NURSE.....என்ன வாங்கி எனக்கு ஒரு முத்தம் குடுத்திங்க அப்பா!! நீங்க நெத்தில....நான் அப்ப கண் மூடி இருந்தேன் உங்கள பாக்க முடியல ஆனா உங்கள உணர முடிஞ்சது...

3 நாள்கள் அப்பறம் நாம வீட்டுக்கு வந்தோம்...நீங்க கொஞ்சம் நாள் வேலைக்கு போகாம என்னையும் அம்மாவையும் நல்லா பாத்துகிட்டிங்க..அம்மாவ எந்த வேலையும் செய்ய விட மாட்டிங்க....என்ன தூக்கி கொஞ்சிட்டே இருப்பிங்க...எனக்கு பவித்ரா பேரு வச்சிங்க....ஆனா பவி குட்டி தான் செல்லமா சொல்விங்க...


என்னோட செலவுக்காக அடுத்த மாசம் வேலைக்கு போய்டிங்க....நானும் அம்மா மட்டும் தான் இருப்போம்...அம்மா என்கூட நீங்க நெறையா பேசிட்டே இருப்பிங்க....நான் எல்லாத்தையும் கேட்டுட்டே இருப்பேன்....ஒரு நாள் சொன்னிங்க நீ தான் பவி குட்டி கொஞ்சம் பெரிய பொண்ணா ஆயி பாட்டி தாத்தவ சமாதானம் பண்ணனும் நாம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்..நானும் அப்பாவும் அவங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ண நாலா நாம கிட்ட பேச மாட்டாங்க சொன்னிங்க...நானும் சிரிச்சேன் அத கேட்டு..

அப்பா நீங்க வேலைக்கு போன அப்பறம் நான் எவ்ளோ மிஸ் பண்ணிருக்கேன் தெரியுமா...நீங்க எப்பவும் நைட் 11 மணிக்கு மேல தான் வருவிங்க..அதுக்கு அப்பறம் களைப்பு ல தூங்கிருவிங்க...முன்ன மாறி என்கிட்டே பேச உங்களுக்கு நேரமே இருக்காது...எனக்காவும் அம்மாவுக்காகவும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்றிங்க....

நான் கொஞ்சம் கொஞ்சம் வளர ஆரம்பிச்சேன்...அம்மா தான் என்கூட எப்பவும் இருப்பாங்க.......கொஞ்சம் கொஞ்சம் நடக்க கத்துகிட்டேன்...அம்மா உனக்கு யாபகம் இருக்கா என்னோட முதல் பிறந்த நாள் அப்ப நீ நான் அப்பா கோவிலுக்கு போனோம்....போயிட்டு வரும் போது...ஒரு சம்பவம் நடந்துச்சி நீயும் நானும் ரொம்ப பயந்தோம்..அப்பா யார்கிட்டயோ கடன் வாங்கிட்டாங்க நமக்காக.... அத குடுக்காத நாலா அப்பாவ அவங்க அடிக்க வந்தாங்க நீயும் நானும் அழுதோம்...

அதுக்கு அப்பறம் தான்மா நீயும் வேலைக்கு போகணும் முடிவு பண்ண...கொஞ்சம் நாள் ல என்ன ஏதோ ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போன அங்க என்ன மாறி நெறையா குழந்தைங்க இருந்தாங்க...என்ன அங்க ஒருத்தவங்க கிட்ட கொடுத்துட்டு எனக்கு ஒரு முத்தம் குடுத்து திரும்பி திரும்பி என்ன பாத்து அழுதுகிட்டே போன....நானும் அழுதேன்....கொஞ்சம் தூரத்துல உன்ன காணோம்...நான் ரொம்ப அழுதேன் அப்ப அந்த ஆன்டி என்ன அடிச்சாங்க..சனியனே அழாதே!!! அப்படி சொன்னாங்க....எனக்கு ரொம்ப பயமா இருந்தது...அழுதுட்டே இருந்ததுல அப்படியே தூங்கிட்டேன்...நெறையா விளையாட்டு பொருள் இருக்கும் எனக்கு எதுவுமே புடிக்காது...நீ எவ்ளோ பாசமா ஊட்டி விடுவ நான் வேணாம் சொன்னாலும் கேக்காம காக்க பாரு அத பாரு இத பாரு சொல்லி தூக்கிட்டே போயி சாப்பாடு தருவ....இங்க நானே சாப்டனும் சொல்வாங்க....நான் சாப்டவே மாட்டேன்...அழுதாலும் அடிப்பாங்க அதுனால ஒரு மூளைலயே போயி உக்காந்துப்பேன்....உன்னையும் அப்பாவையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன் தெரியுமா....சாயங்காலம் வந்து என்ன தூக்கிட்டு போவ....

பாவம்மா நீ வேலைக்கு போயிட்டு வந்து என்ன கூட்டிட்டு போவ...வீட்டுக்கு வந்த அப்பறமும் நீ துணி துவைப்ப சமையல் பண்ணுவ எப்பவும் வேலைய தான் பாப்ப...அப்பறம் எல்லாரும் தூங்கிருவோம்...என்கூட நீயும் அப்பாவும் பேசுறதே இல்லை....களைப்பா இருக்க நாலா தூங்கிருவிங்க...

அப்பறம் என்ன ஸ்கூல் சேத்து விட்டிங்க....அதுவும் பெரிய ஸ்கூல்... CHILD CARE ல இருந்து பயந்த நாலா எனக்கு இந்த ஸ்கூல் போகவும் பயமா தான் இருந்தது...இங்கயும் யாராச்சும் அடிப்பாங்கலோனு... எப்போவும் தனியாவே இருப்பேன்.....அதுனால யாரும் என்கிட்டே பேச மாட்டாங்க....

எனக்கு ஸ்கூல் பீஸ் அதிகம் போல அதுனால தான் அத கட்ட ரொம்ப நேரம் வேலை பாத்துட்டு இப்பலாம் நைட் தான் வீட்டுக்கே வரிங்க மா....எனக்கு எப்ப SUNDAY வரும் ஆசையா இருக்கும்....அப்ப தானே உங்களுக்கு லீவ்...நான் EVENING வந்தா தனியா இருப்பேன் சொல்லி என்ன பக்கத்து வீட்டுல இருக்க சொல்விங்க அங்க ஒரு அங்கிள் மட்டும் தங்கி இருந்தாங்க....

கதிர் அங்கிள் எனக்கு ரொம்ப புடிக்கும்..எனக்கு DAILY சாக்லேட் வாங்கி தருவாங்க...என்ன அங்கேயே படிக்க சொன்னிங்க.... அவங்க அன்பா என்கிட்ட இருந்தாங்க....ஹோம் வொர்க்,ASSIGNMENT லாம் அவங்களே பண்ணி தருவாங்க....அப்பா அம்மா உங்கள அப்பறம் கதிர் அங்கிள் தான் புடிக்கும்...நான் நல்லா படிக்கறேன் மிஸ் கூட சொன்னாங்க....

ஒரு நாள் கதிர் அங்கிள் என்ன வாயில கிஸ் பண்ணாங்க....லிப் லாம் கடிச்சாங்க..எனக்கு வலிக்குது சொன்னேன்...அங்கிள் ஒன்னும் இல்லை பாப்பா சொன்னாங்க...உனக்கு அங்கிள் கேக் வாங்கி வச்சிருக்கேன் இந்தா சொல்லி குடுத்தாங்க.....நானும் சாப்டேன்.... உங்க கிட்ட சொல்லலாம் வந்தேன் நீங்க TIRED அஹ இருக்கு சீக்கிரம் தூங்கிட்டிங்க......

அப்பறம் கதிர் அங்கிள் இப்படியே கிஸ் பண்றது என்ன கட்டி புடிப்பாங்க....எனக்கு உடம்புல சில நேரம் காயமா இருக்கும்...ஆனா இப்ப தான் நீங்க என்ன குளிப்பாட்டி விட மாட்டிங்கள....உங்களுக்கு தெரியாது மா...எனக்கு இப்பலாம் அவங்கள புடிக்கிறதே இல்லை..நான் அங்க போக மாட்டேன் சொன்னாலும் உனக்காக தானே பவி குட்டி அப்பாவும் அம்மாவும் கஷ்டப்படுறோம்....நீ நல்லா படிக்கணும் கொஞ்சம் நாள் அப்பறம் அம்மா சீக்கிரம் வந்துருவேன்....நீ நானும் ஜாலி அஹ இருக்கலாம் சொல்விங்க....நான் சொல்றத கேக்க கூட உனக்கு நேரம் இருக்காது...

ஒரு நாள் எனக்கு ஸ்வீட் வாங்கி குடுத்தாங்க அங்கிள்...நான் வேணாம் சொல்ல சொல்ல சாப்பிட சொன்னாங்க...சாப்பிட்ட கொஞ்சம் நேரத்துல எனக்கு மயக்கம் வந்துருச்சி....கொஞ்சம் நேரத்துல எழுந்த போது உடம்புலாம் வலிச்சது....அங்கிள் மட்டும் பக்கத்துல இருந்தாங்க...என்னால எழுந்து நடக்கவே முடியல வலியால அழுதேன்....அழாத பாப்பா அப்படி சொன்னாங்க...என்னால முடியல ரொம்ப அழுகவும்....கோவத்துல என்ன தள்ளி விட்டாங்க....தலைல அடி பட்டுச்சி....அதுக்கு அப்பறம் நான் இந்த இடத்துக்கு (சொர்க்கம்) வந்துட்டேன்....உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் அப்பா அம்மா....LOVE YOU.....அன்பு பெற்றோர்களை இது ஒரு குழந்தையின் பார்வையில் அவள் அனுபவிச்ச வலிகளை கொண்ட ஒரு கடிதமாக சொன்னேன்.....நிறைய பெற்றோர்கள் பெரிய ஸ்கூல் படிச்சா தான் குழந்தையின் எதிர் காலம் நல்லா இருக்கும் என்று ஓடி ஓடி வேலை செய்கின்றனர் குழந்தைகளுக்காக....ஆனா அவர்களிடம் உக்காந்து பேச கூட நேரம் இல்லை....குழந்தையை பார்த்து கொள்ள ஒரு ஆயாமா... அவங்களுக்கு ஒரு சம்பளம்... கடைமைக்காக அவங்க வேலை செய்வாங்க....அந்த குழந்தை அன்புக்காக ஏங்க ஆரம்பிச்சிருது....அதுனால அன்பு காட்டற மாறி நடிக்கிற முட்டாள்களிடம் சிக்கி கொள்கிறது....கொஞ்சம் விவரம் நல்லா தெரியிற வர குழந்தைகளிடம் டைம் SPEND பண்ணுங்க......அப்படியே வேலைக்கு போகிற கட்டாயம் என்றால் வீட்டுல உள்ள பெரியவங்க கிட்ட குழந்தையை குடுத்துட்டு போங்க....

ஆண் பிள்ளை என்றால் பெண் மீதான நல்ல பார்வையை சொல்லி கொடுங்கள்......ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டா பெரிய பிள்ளைங்க மாறி TREAT பண்ணி தனியா ரூம் கொடுக்க வேண்டாம்...உங்க கூடவே படுக்க வைங்க...மனம் விட்டு பேசுங்க....ஒரு STAGE வர அந்த குழந்தைகளை நீங்களே குளிப்பாட்டி விடுங்க.....குழந்தைகளை முடிந்த வரை நீங்களே பள்ளிக்கு கூட்டிட்டு போங்க கூட்டிட்டு வாங்க...அப்படி முடியாத நிலையில்...தனியே ஆட்டோ,கார் அனுப்பாம... பள்ளி வாகனத்தில் சேர்த்து விடுங்கள்...பொருளாதாரம் வளர்ச்சி என்று பிள்ளைங்களிடம் போன் கொடுத்து பழக்காதீர்கள்...முக்கியமா GAME,NET போன்றவற்றிற்கு அடிமை ஆக்கி விடாதீர்கள்...

பெண் குழந்தைகளிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி சொல்லி கொடுங்கள்....கெட்ட தொடுதலில் எவரேனும் பழகினால் அவர்கள் உறவினர்கள்,பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் யாரா இருந்தாலும் வந்து தன்னிடம் சொல்ல சொல்லுங்கள்...

பெண் குழந்தைகளை பெற்றவர்கள் மட்டும் தான் கவனமாக இருக்க வேண்டும்,பொறுப்பு அதிகம் என்பது இல்லை....ஆண் குழைந்தைகளை பெற்றவர்களுக்கு இன்னும் அதிகம் பொறுப்பு வேண்டும்....வளரும் போதே அவர்களுக்கு சொல்லி கொடுங்கள் பெண்ணை பாதுகாக்க வேண்டி தான் கடவுள் ஆணை வலிமை உள்ளவனாய் படைத்துள்ளான் அவர்களை துன்புறுத்த அல்ல என்று....

பெண் குழந்தைகள் வதைக்கப்படும் செய்திகளை பார்க்கும் போது....மனசு அவ்வளவு வேதனை படுகிறது....ஆண் உருவில் இருக்கும் சில கொடூரர்கள் மீது கோவம் கொட்டி கொண்டு வருகிறது...

குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டியவர்கள் தானே????....ஏன் இந்த கொடுமை????

அவர்களை எங்கும் அனுப்ப தயங்குகிற நிலைமை ஏன்????

பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை போயி பெண் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லையா??????காமம் கொண்டு பார்க்க அவள் ஒரு கன்னிப்பெண்ணா????? இல்லையே?????

அவள் இன்னும் பேதை பருவத்தில் தானே இருக்கிறாள்!!!

இதற்க்கு யார் காரணம்????

சமூகத்தில் ஒரு ஆண் தவறான எண்ணத்தில் வளர்ந்ததா????? இல்லை

அவனுக்கு தவறான எண்ணத்தை தூண்டும் ஆபாசம் காட்டும் இணையதளமா?????

அப்படி தப்பு செய்யும் கொடூரர்களை தண்டிக்காத சட்டமா?????

அறியாமல் செய்யும் தப்புக்கு மன்னிப்பு உண்டு....இது போல் பச்சை குழந்தைகளை வதைத்து அவர்களை கொல்லும் கொடூர எண்ணம் கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்...

குற்றங்கள் குறைய தண்டனைகள் அதிகரிக்க வேண்டும்....சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கிறது தப்பித்து விடலாம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்....ஆபாசம் கொண்ட இணையத்தளத்தை முடக்க வேண்டும்...நல்ல விஷயங்களை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இணையத்தில் இருந்து....

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்.....தெய்வமாய் கூட பார்க்க வேண்டாம்...அவர்களை குழந்தையாய் மட்டும் பாருங்கள்...

உங்கள் நண்பர்கள் யாராவது இப்படி ஒரு தவறான எண்ணத்தில் இருந்தால்....அவர்களை ஊக்குவிக்காமல்.....நல்ல எண்ணங்களை சொல்லி கொடுங்கள்..

மோசமான சமூகத்தில் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்போம்...

நல்ல சமூகமாய் மாற அனைவரும் ஒன்று படுவோம்.....tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.