மரணமே.... வா... வா....

மரணமே..
எனக்கும் ஆசைதான்
உன்னிடம் வருவதற்கு...

நேற்று...
இன்று...
ஒவ்வொரு நாளும்
சிதையின் மீது
எரிந்து கொண்டு...
இடுகாட்டில்
புதைந்து கொண்டு
காணாமல் போய்க்கொண்டிருக்கும்
ஒவ்வொருவரையும்
பார்க்கும் போது...

அவர்களுக்கும்
முன் வந்த நான்
எப்படி...
எதற்காக...

எனக்கான ஒவ்வொருவரும்
மறையும் போது
என் உயிர்ப்பூவின்
இதழ்கள் ஒவ்வொன்றாக உதிர்வதாகவே
என் உள் மனம்
சொல்கிறது...

உயிருக்குயிரான நட்பு..
தாங்கி நின்ற தோழமை...
பாசம் பொழிந்த
உறவுகள்..
ஆதரவாய் இருந்த
சகோதரம்...

எல்லாவற்றையும்
தேடித்தேடிப்
பார்க்கும் போதுதான்
மரணமே உன்னை
நினைக்கத் தோன்றுகிறது...

நான் மட்டும்
எதற்காக இன்னும்...
உயிரற்ற உடலாய்...
வா... வா...
உன்னைக் கண்டு
பயமில்லை எனக்கு...
வா... வா...
வரவேற்க காத்திருக்கிறேன் உன்னை...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.