குரல்களின் மீதான ஆர்வம் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. புகைப்படத்தில் மட்டும் பார்த்த ஒருவரின் குரல் முகத்தைக் காண்கையில் ஆச்சரியம் தோன்றுகிறது சில நேரங்களில் அந்த குரல் முகம் மனதில் ஒட்டிக் கொள்கிறது அலை பேசி வைத்த சில மணித்துளிகளும். ..

குரல்முகத்தினால் மட்டும் கவரப்பட்ட இருவர் இணைந்ததாக கேள்வி பட்டதுண்டு (பிரிந்ததாகவும்) அரிதான நிகழ்வுகள் இவை. இருப்பினும் குரல் முகம் காண நாம் விரும்பிக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு மனித குரலை செவி உணர்ந்த மாத்திரத்தில் அவரது குண நலன், உடலமைப்பு என்று பலவும் மனது கணக்கு போடுகிறது. பிடித்த ஒருவர் எனில் அவரது குரல் எப்படி இருக்கும் என அறிய ஆண்கள் மிகையாகவே ஆர்வம் கொள்கின்றனர்.

எத்தனையெத்தனை குரல்கள். ... அதிகாரமாக ,அன்பாக ,மென்மையாக ,சிநேகமாக ,நெருக்கமாக , உறுதியாக, கரகரப்பாக. ... விந்தை. ஆனால் பொய்யாக நடிக்கும் குரல் இம்மியளவும் பிடிக்காமல் போகிறது.

சில குரல் தோற்றத்திற்கு பொருந்திப் போகிறது. சில நேரங்களில் பொருந்தா விட்டாலும் பிடித்துப் போகிறது. என்னவோ இப்பொழுதெல்லாம் குரல்கள் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குரல் பிடித்தது என்பதற்காக சில நெருடிய வார்த்தைகளைக் கூட மன்னித்து விடுகிறது இந்த மனது.

#இன்டரெஸ்ட்டிங் தான் இல்ல!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.