காதலும் காமமும்

இந்த கதையில் காதல் காமம் இரண்டும் உண்டு காதலை தேடுகிறவள் காமத்தைக் கண்டு கொள்கிறாள்.காமத்தை தேடுகிறவன் காதலை கண்டு கொள்கிறான். வாருங்கள் கதையைப் பார்ப்போம்.

அறையில் இருந்த டேபிள் மீது வைத்திருந்த செல்போன் சினுங்கியது. போனில் அழைப்பது யாரென்று பார்த்தான் கணேஷ். பெயர்தான் கணேஷ். ஆனால் பெண்களை வெறும் போகப் பொருளாக நினைக்கும் பிளேபாய்.

பிறந்தது வளர்ந்தது படித்தது, தற்போது வேலை செய்வது, எல்லாமே சென்னையில்தான். இவனுடைய அப்பா ஒரு அரசியல்வாதி. ஆறு மாதம் ஒரே கட்சியில் இல்லை என்றாலும் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பதை விரல் நுனியில் தெரிந்து வைத்திருந்தார். ஆகவே பெரிய வீடு கார் பங்களா ஊரில் நஞ்சை புஞ்சை ஏராளம்.அதனால் தன் மகனை செழிப்பாக வளர்த்து இருந்தார். கடற்கரை ஓரம் தனிவீடு.கார் பைக் பேங்க் பேலன்ஸ் என்று செல்லமாக வளர்த்து இருந்தார்.ஆனால் கூடவே இருந்து வளர்க்கவில்லை.

இத்தனை வசதி இருந்தாலும் ஏன் வேலைக்கு போகிறான் என்று கேட்காதீர்கள் அப்போழுதுதானே போகும் போதும் வரும்போதும் பல பெண்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் மாதம் ஓருமுறை அவனுடைய வீட்டிற்கு வருவார்கள். அவனுடைய பெற்றோர் இரண்டு நாள் தங்கிவிட்டு கிளம்பி விடுவார்கள். அந்த இரண்டு நாட்களிலே பையன் என்ன என்ன தவறுகள் செய்கிறான் என்பதை கண்டு பிடித்தாலும் ,காணாததுபோல் இருந்து விடுவார்கள். ஆரம்பத்தில் வீட்டிற்கு வரும் தாய் ,முடிந்தவரை வீட்டை ஒழுங்கு படுத்திச் செல்வாள் ஆனாலும் மறுமுறை வரும்போது மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.அதனால் இப்போதெல்லாம் வந்தால்கூட ,மேலே உள்ள அறையில் தங்கிவிட்டு, கிளம்பி விடுவார்கள்.இவர்களின் ஆசை, பையனுக்கு விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்பது. ஆனால் பையனுக்கோ; இருக்கும்வரை அனுபவி என்பதுதான்.

போனை எடுத்து சொல்லு மச்சான் என்றான். எதிர் முனையில் இருந்த தினேஷ்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்.கவிதா வரன்னு சொல்லிட்டாளா?. என்றான். வரன்னு சொல்லி இருக்கா. என்றான்.அப்ப நீ நினைச்சது நடந்தா டபுள் ட்ரீட் தரனும் என்றான்.சரி நீ எப்ப வருவே? பிசினஸ் வேலையை முடிச்சிட்டு நாளைக்கு சென்னை வந்துடுவேன் மச்சான். நாளைக்கு பார்ட்டில மீட் பண்லாம் ஓகே என்றான்.ஓகே என்று போனை துண்டித்துவிட்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டு ;ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைக்க, லைட்டரைத் தேடினான். அப்போதுகீழே காலிங் பெல் சத்தம் கேட்டது.

சிகரெட்டை வைத்து விட்டு; படியில் இறங்கிகீழே போனான். வெளியே நிற்பது யார் என்று லென்ஸ் வழியே பார்த்தான். கவிதா என்றதும் கதவைத் திறந்தவன். ஓரு நிமிடம் கவிதாவைப் பார்த்து சிலை போல நின்று விட்டான் காரணம் :கவிதா அத்தனை அழகாக வந்து இருந்தாள்.கவிதா இவன் வேலை செய்யும் கம்பெனியில் இவனுக்கு கீழே வேலை செய்யும் நான்கு பி ஏ க்களில் ஒருத்தி. இவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைக்கு அருகில் உள்ள, டவுனில் .அப்பா இரல்வேயில் வேலை செய்து, ரிடையர்டு ஆகிவிட்டு, பென்ஷன் வாங்கிகொண்டு இருக்கிறார். இவளுக்கு கீழே இரண்டு தங்கைகள்.பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.இவள் படிப்பிற்காக இருந்த ஒரே சொத்தான நிலம் காலியானது.தற்போது சொந்த வீடும் அப்பாவின் பென்ஷனுமாக குடும்பம் ஓடிக் கொண்டு இருந்தது.

இதற்கு பின் தனக்கும் தன் தங்கைகளின் வருங்கால வாழ்விற்கும்; பொருள் சேர்ப்பது இன்றியமையாதது என்று நினைத்து சென்னைக்கு பயணமானாள். படிப்பு அவளுக்கு நல்ல வேலையைத் தந்தது.பெண்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தாள். மாதம் ஒருமுறை வீட்டிற்கு சென்று திரும்பி வந்துவிடும் சென்னைவாசி.இவளுடன் வேலை செய்யும் பெண்களை ஒப்பிட்டால் இவள் பேரழகி.எளிமையானவள். தான் உண்டு ,தன் வேலை உண்டு என்று இருப்பாள். வேலை நேரங்களைத் தவிரமற்ற நேரங்களில் எந்த ஆனுடனும் பேச மாட்டாள்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ;கணேஷ் வேலை செய்யும் கம்பெனியில் சேர்ந்திருந்தாள்.முதலில் வேலை நிமித்தமாக இருவரும் பேசிக் கொண்டனர்.பின்பு அவளுடைய அமைதி, இவனை அவள்பால் ஈர்த்தது.காரணம் இவன் நல்ல அழகன். இவனுடன் வேலை செய்யும் பெண்களுக்கு ,இவன் மீது ஒரு கண். பணத்துக்காகவும் ,சுகத்திற்காகவும் இவனை தேடி வந்தார்கள்.இவனும் தேடிப் போனான். ஆனால் இவள் இவனுக்கு வித்தியாசமாக தெரிந்தாள்.ஆகவே இவனே வலிய சென்று, நட்பை வளர்த்துக் கொண்டான். அவளிடம் கண்ணியமாக நடந்து ,அவள் நம்பிக்கையைப் பெற்றான். பல இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சுற்றுகிற அளவுக்கு இவர்களின் நட்பு ,நெருக்கமானது.

எந்த வேலையாக இருந்தாலும் அவன் இவளை நம்பி ஒப்படைத்தான் .இவளும் அவனுக்காக ,செய்து முடித்தாள். இவர்கள் இருவரும் நெருக்கமானதால் ;பொறாமையான மற்ற பெண்கள் ;இருவருக்கும் காதல் என்று பரப்பி விட்டனர் .ஆரம்பத்தில்; ஜாடை மாடையாக பேசியவர்கள், ஒருநாள் இவளிடமே கேட்டு விட்டார்கள். இதனைக் கேட்டு அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தவள் ;வேலை முடிந்து ஹாஸ்டலுக்கு சென்றாள். மறுநாள் வேலைக்கு செல்லவில்லை.

போனில் அழைத்த இவனிடம் உடம்பு சரியில்லை என்றாள்.இவனும் சரி என்று விட்டு விட்டான்.அதற்கு அடுத்த நாளும் வேலைக்கு வரவில்லை.போனில் முயற்சி செய்தால் சுவிட்ச் ஆப் என்று வந்தது. "நேரில் சென்று பார்க்கலாமா "என்று யோசித்துக் கொண்டு இருக்கையில், தோட்டவேலை செய்யும் சுப்பையா இவன் அறைக்குவந்தார்.

ஐயா உங்ககிட்ட ஒன்னு சொல்லனுங்க ; நேத்து நான் வேலை முடிஞ்சி கிளம்புறப்ப கவிதாம்மா அழுதுகொண்டே போனதைப் பார்த்தேன் ;என்னன்னு விசாரிச்சா, உங்களுக்கும் அவங்களுக்கும் என்று எல்லார் முன்னாலும் அவங்கள யாரோ கேட்டுட்டாங்களாம்.அப்படின்னு கேள்விப்பட்டேன் .ஆனா, "ஒன்னுங்க ஐயா "அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுங்க ;என்று சொல்லி விட்டு போய்விட்டார். இதை தனக்கு சாதகமாகபயன்படுத்தி கொள்ளவேண்டும்என்று, நினைத்துகொண்டான்.

இரண்டு நாள் அவள் இல்லாதது ,இவனுக்கு சோர்வாக இருந்தது.மேலும் இவர்கள் நெருக்கமான நாளில் இருந்து மற்றவர்கள் இவனிடம் அவ்வளவாக பேசுவதில்லை. அதனால் நேரில் சென்று பார்த்து வர கிளம்பினான்.காம்பவுண்ட் வாசலில் நின்றுகொண்டு போன் செய்தான்.போன் இப்போது அடித்தது. போனில் பேசியவள் விழுந்து அடுத்துக் கொண்டு ஓடி வந்தாள். காரணம் அது மிகவும் கண்டிப்பான ஹாஸ்டல். ஆண்களுக்கு அனுமதி இல்லை. கீழே வந்தவள் முதலில் இந்த இடத்தை விட்டு செல்லுங்கள். வார்டன் பார்த்தால் அவ்வளவுதான் என்றாள்.அப்படி என்றால் ,பக்கத்தில் உள்ள காபி ஷாப்பில் காத்திருக்கிறேன்." வா" என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

அவன்போய் பத்து நிமிடங்கள் கழித்து இவள் காபி ஷாப்புக்கு சென்றாள். அங்கே இவள் வருகைக்காக ஒரு மூலையில் காத்திருந்தவன்; இவளைக் கண்டதும் ,கையசைத்தான்.அவன் எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தவள் ;எதுவும் பேசாமல் அமைதியாக குனிந்து கொண்டு இருந்தாள்.இவனே பேச்சை ஆரம்பித்தான்.ஏன் இரண்டு நாட்கள் ஆபிசுக்கு வரவில்லை என்றான்? இவனை நிமிர்ந்து பார்த்தவளை கவனித்தால் ;கண்கள் கலங்கி இருந்தது.

நான் வேலைய விட்டு விடலாம் என்று இருக்கிறேன் .ஏன்?, இனிமேல் ,என்னால் அந்த ஆபிசுக்கு வர முடியாது.ஏன்? எல்லோர் முன்னிலையிலும் ,என்னை அவமானப் படுத்தி விட்டார்கள்.யார் ? எதற்காக?. நாம இரண்டு பேரும் லவ் பண்றமா. ஆபிஸ் வேலைன்னு சொல்லிட்டு ,ஊர் ஊரா சுத்துகிறோமாம். நான் சொக்குப்பொடி போட்டு ,வசதியான உங்களை புடிச்சிட்டேன்னு ;எல்லார் முன்னாடியும் கேட்டுட்டாங்க, அக்கவுண்ட்ஸ்ல இருக்கிற சவிதாவும் நீலாவும்.நீ என்ன சொன்ன? என்ன சொல்றது?எங்கவீட்டுக்கு தெரிஞ்சா கொன்னு போட்ருவாங்க என்றாள். அவங்க சொன்னதுல என்ன தப்பு?  என்ன தப்பா? ஆமாம் கவிதா நான் உன்னை லவ் பண்றேன். ஆனா இதுவரைக்கும் உங்கிட்ட சொல்லல. இப்போ சொல்லிட்டேன்.உனக்கும் விருப்பம்னா நாளைக்கு வேலைக்கு வந்துவிடு. இதற்கு பிறகு உன் இஷ்டம்.என்று சொல்லிவிட்டுவெளியேபோய்விட்டான்.

சிறிது நேரம் சிலை போல் அங்கேயே அமர்ந்து இருந்தவள், "மேடம் காபி" என்று பேரர் அழைத்த உடன் ,சுய நினைவுக்கு வந்தாள். அவர் வைத்த காபியை குடிக்க மனமில்லாமல் ;எழுந்து வந்து விட்டாள்.எப்படி ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள் என்பதே நினைவில்லை.இவளின் தோற்றத்தைக் கண்டு அறைவாசிகள் என்னவென்று கேட்டனர். இவளும் தட்டு தடுமாறி நடந்தது ,அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

அவர்கள் அனைத்தையும் கேட்டு விட்டு பையனைப் பற்றி விசாரித்தார்கள். "இவள் "அவனைப் பற்றி சொன்னதை வைத்து, அவர்கள் அவனுக்கு ஒ"ஓகே சொல்லி விடு "என்று இவளை நச்சரித்தனர். அவர்களின் தொல்லைதாங்கமுடியாமல் ,இவளும் ஓகே சொல்வதாக சொன்னாள். ஆனால் எப்படி சொல்வது ,என்று கேட்டாள்?.நாளை வேலைக்கு போ. மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்று கூறினார்கள்.இவளும் அடுத்த நாள் ஆபிசுக்கு சென்றாள்.

உள்ளே நுழைந்த இவளுக்கு; ஒரு மாதிரியாக இருந்தாலும் எதிர்படும் அனைவரும் இவளுக்கு மரியாதை செலுத்தியது வித்தியாசமாக இருந்தது.காரணம் முதல் நாளே' கணேஷ் எல்லோரையும் அழைத்து கண்டித்தது; இவளுக்கு தெரியாது. இவள் வருகைக்காக, வழக்கமான நேரத்தைவிட சற்று முன்பே வந்திருந்தான்.இவள் வருவதை கண்ணாடி வழியாக பார்த்தவன்" தான்நினைத்தது நிறைவேறிவிட்டதை" என்னி ஆனந்தமானான்.

ஆறு மாதம் கழிந்தது.இன்று கணேஷின் பிறந்த நாள். அதனால் அவளை விருந்துக்கு அழைத்திருந்தான்.விருந்துக்கு அழைத்தவன் அவளையே விருந்தாக்கிவிட நினைத்தான். இந்த ஐடியாவைத்தான் முன்னமே தினேஷிடம் சொல்லி இருந்தான்.வாசலில் நின்றவளை, இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவனை ,கவிதாவின் குரல் சுய நினைவுக்கு வரவழைத்தது.

உள்ளே வா என்று அழைத்தவன் ,முதலில் அவளுக்கு தண்ணீர் கொடுத்தான்.உள்ளே நுழைந்தவள், அவன் செய்து வைத்திருந்த, ஏற்பாட்டையெல்லாம் பார்த்து, அதிசயித்தாள். ஆனாலும் யாரையும் அழைக்காமல் ,தன்னை மட்டும் அழைத்து இருப்பதை எண்ணியவள்.. என்ன யாருமே வரவில்லை ;நாம் மட்டுமே இருக்கிறோம் என்றாள். யாரும் வரமாட்டார்கள் .நான் உன்னை மட்டும்தான் ,அழைத்து இருக்கிறேன். காரணம் ;இனி நீ மட்டும்தான் ,எனக்கு எல்லாம் என்றான்.

அதைக் கேட்டவளுக்கு ;மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் ,அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தாள். கடிகாரம் பத்து அடித்து ஓய்ந்தது. கடிகாரத்தை கவனித்த இருவரும் ,இரண்டு மணி நேரம் என்ன செய்வது என்று யோசித்தனர்.சரி பேசிக்கொண்டு இருக்கலாம் ,என்று முடிவெடுத்தனர். ஆனால் தன் எண்ணம் எப்படி நிறைவேறும் என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.அறையைத் திறந்துகொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.கட்டிலில் அமர்ந்த கணேஷ் சாய்ந்து கொண்ட கணேஷ் விசில் அடித்தான். அவன் அருகில் உட்கார்ந்த கவிதாவை ,வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டுஇருந்தான்.

ஏன் அப்படி பார்க்கிறீங்க? என்று கேட்டாள். இன்னைக்கு மேடம் "ரொம்ப அழகா இருக்கீங்க "அதான். போதும் ஐஸ், அடுத்து என்ன சொல்லப் போறீங்க? நான் எதுவும் சொல்லல. நீங்க ஏதாவது சொல்லுங்க மேடம்.இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.அதனால் உன்னிடம் ஒரு உண்மையை சொல்கிறேன் கணேஷ். ஒரு உண்மையை சொல்கிறேன் இதுவரை யாரிடமும் சொல்லாதது.

அப்போது எனக்கு பத்து வயது இருக்கும். பள்ளியில் படித்துகொண்டுஇருந்தேன். அப்போது,ஒருநாள் என்னுடைய பெற்றோர் ,வெளியூருக்கு சென்றுவிட்டனர் .என்னை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு சென்றனர்.காரணம் எனக்கு அப்போது இறுதி பரீட்சை நடந்து கொண்டு இருந்தது.அதனால் பள்ளிக்குசென்றுவிட்டு,மீண்டும்திரும்பிவந்து ,பக்கத்து வீட்டில் படுத்துக்கொள் ;என்று சொல்லி விட்டு சென்றனர்.

பக்கத்து வீட்டு மாமி ;எங்கள் எல்லோருக்கும் நல்ல பழக்கம்.அதனால் முன்னமே ,அம்மா அவர்களிடம் சொல்லி விட்டு ,சென்று இருந்தார்கள்.நானும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தேன். பக்கத்து வீட்டில் சாவி வாங்கி வீட்டைத் திறந்து ,வீட்டில் இருந்தேன்.பிறகு இரவாகி விட்டதும்,இருள் பரவத் தொடங்கியதும் சற்று பயமாக இருந்தது.அப்போது கதவைதட்டும்சத்தம்கேட்டது. யாரென்று பார்க்க கதவைத் திறந்தால், பக்கத்து வீட்டு மாமி வந்து இருந்தார். கையில் தட்டில் இரவு உணவு எடுத்து வந்திருந்தார்.

எனைப் பார்த்து என்னடியம்மா பண்ற?என்றார் .படித்துக் கொண்டு இருக்கிறேன் மாமி என்றேன்.சரிம்மா ;படித்து முடித்துவிட்டு, "வீட்டுக்கு வந்து படுத்துக்கோடா "என்று கூறினார்கள்.எனக்கு பயமாக இருந்தாலும் ,நான் இங்கேயே இருக்கேன் மாமி என்றேன். பொம்பள புள்ளை தனியா இருக்க கூடாது என்றார்கள். அவர்கள் பேச்சை மீற முடியவில்லை.சரி நான் படித்துவிட்டு வருகிறேன்.நீங்கள் போங்கள் மாமி என்று அனுப்பி விட்டு படித்துக் கொண்டு இருந்தேன்.

பிறகு வீட்டைப் பூட்டி விட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றேன். கதவைத் தட்டினால் மாமிதான் திறந்தார்கள் .உள்ளே சென்றதும் ,ஒரு  அறையைத் திறந்து தன் மகளுடன் படுத்துக் கொள்ள சொன்னார்கள்.நானும் படுத்துக் கொண்டேன். பக்கத்தில் அவர்களின் மகள் ;குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்தாள். ஆரம்பத்தில் புதிய சூழலில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.சிறிது நேரம் கழித்து தூங்கியும் விட்டேன்.நல்ல தூக்கத்தில் இருந்தபோது  ;சற்று புழுக்கமாக உணர்ந்து ,எழுந்தேன் .அறை இருட்டாக இருந்தது. அப்போது ஒரு கை என்மீது ஊர்ந்தது. அது பக்கத்து வீட்டு பெண்  கை என்று நினைத்தால் ;அது முரட்டுத்தனமாக இருந்தது.என் வாயைப் பொத்திக் கொண்டு என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது.நான் சிறிது நேரம் போராடி விட்டு, பின்பு திமிறி கூச்சல் போட்டேன்.

நான் கூச்சல் போடவும் மின்சாரம் வரவும் ,சரியாக இருந்தது. வெளிச்சம் வந்தவுடன் மாமி ஓடி வந்தார்கள். வெளிச்சத்தில் பார்த்தால்  ;மாமியின் கணவர்
நின்று கொண்டு இருந்தார்.ஓரு நிமிடம் யாரும் அசையவில்லை. இந்த நேரத்தில் தூங்கிகொண்டிருந்த பெண் எழுந்து ,கண்ணை கசக்கிக் கொண்டே,  எல்லோரையும் மலங்க மலங்க பார்த்தது.நிலைமையை சமாளிக்க, மாமிதான் என்னைக் காட்டி ,அக்கா எதோ கனவு கண்டு ,பயந்து கத்திவிட்டாள். அதுதான் பார்க்க வந்தோம் ;என்று அப்போதைய நிலமையை சமாளித்தார்.

பிறகு மாமியுடன் படுக்க வைத்துக் கொண்டார்கள். நான் இரவெல்லாம் தூங்கவில்லை. அழுதுகொண்டே இருந்தேன்.பிறகு எப்போது தூங்கினேன் ;என்று தெரியாது.விடிந்து விட்டிருந்தது. அப்பாவும் அம்மாவும் வந்து விட்டிருந்தனர். மாமி வந்து என்னை தொட்டு எழுப்பினார்கள். அவர்கள் கை என் மீது பட்டதும் ;நான் பதறி அடுத்து ,எழுந்து கொண்டேன். இதைக் கண்ட மாமி; என் கைகளை பிடித்துக்கொண்டு ;இங்க நடந்த எதையும் வெளியே சொல்லிடாதம்மா என்றார். நானும் என் வீட்டுக்கு வந்து விட்டேன். பிறகு அந்த சம்பவம் என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அதனால் எனக்கு ஆண்களைக் கண்டாளே ,வெறுப்பு பயம் ,அப்படியே வளர்ந்தேன். ஆண்கள் எல்லோருமே கெட்டவர்கள் ;என்று ஒதுங்கியே இருந்தேன்.

உங்களை பார்த்த பிறகுதான் .,எனக்கு என் எண்ணம் தவறென்று புரிந்தது.உங்களின் அன்பும்' கண்ணியமும், என்னை உங்களின் பக்கம் ஈர்த்தது. உங்களுடன் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். அதனால்தான் நான் உங்களை நேசிக்கிறேன். இறுதிவரை, உங்களுடன் வாழ நினைக்கிறேன் இன்று இந்த இரவிலும் ;தனியாக உங்களை நம்பி வந்திருக்கிறேன். என்று சொல்லி முடித்தாள்.

இதுவரை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த கணேசுக்கு ,ஒரு மாதிரி ஆகிவிட்டது. இதுவரை எந்த பெண்ணும் ,இவனிடம் இப்படி பேசியதில்லை. முதன் முறையாக ஒரு பெண்ணின் உணர்வை புரிந்து கொள்ள முற்பட்டான் .என்னவோ இதுவரை இருந்த, மனநிலை மாறி இருந்தது.

ஏசி அறையிலும் ,இவனுக்கு வேர்த்து இருந்தது.இவன் முகத்தை எதேச்சையாக பார்த்தவள் ;அவன் முகம் வேர்த்திருப்பதைப் பார்த்து பதறி எழுந்து ,இவள் முந்தானையால் துடைத்துவிட்டு என்ன?.. என்றாள்.ஒன்றும் இல்லை என்றான். இவள் அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.நிலமையை மாற்ற "ஆமாம் "உங்க பிறந்த நாளுக்கு எனக்கு என்ன பரிசு என்றாள்? .இவன் சஸ்பென்ஸ் என்றான்.சரி நீ என்ன கொண்டுவந்தாய் என்றான்? எழுந்து நின்று அவனை நிற்க வைத்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.சில நொடிகள் அப்படியே நின்றிருந்தார்கள் .

அந்த நேரம் பார்த்து, மணி பண்ணிரண்டு அடித்தது. இருவரும் கடிகாரத்தை பார்த்துவிட்டு ஒருவரை ஓருவர் பார்த்துக் கொண்டு, மேஜை மீதிருந்த கேக்கை வெட்ட ஆயத்தம் ஆனார்கள். அவன் வெட்ட ஆரம்பித்ததும் அவள் கைதட்டினாள்.அவன் வெட்டி இவளுக்கு ஊட்டி விட்டான் இவள் வெட்டி அவனுக்கு ஊட்டி விட்டாள். இருவரும் சிரித்துக் கொண்டார்கள். எனக்கு என்ன பரிசு என்று கேட்டாள். அதற்கு ஒரு ஆறு மாதம் பொறுத்துக் கொள் என்றான்.அந்த நேரம் செல்போன்ஒலித்தது. போனை எடுத்தவன் சொல்லு மச்சான் என்றான்.ஹாப்பி பர்த்டே என்று சொல்லி விட்டு மச்சான் கவிதா மேட்டர் என்னாச்சு என்றான்?

நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே ,கவிதாவைப் பார்த்தான்.கவிதா புன்னகை பூத்தாள்.செல்போனை வைத்துவிட்டு என் பிறந்த நாள் பரிசு பிடித்திருக்கிறதா என்றான்..போங்க என்று அவள் வெட்கப் பட்டாள். இனி அவன் கவிதாவின் அன்புக்கு மட்டும்தான் அடிமை... (முடிந்தது)

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.