அமாவாசை இரவு

அன்று இரவு அமாவாசை என்பதால் பயங்கர இருள், கரண்டும் இல்லை. தெருவில் நாய்கள் ஓலமிடும் கூக்குரல் அதிகமாக கேட்டது. வரண்டாவில் படுத்திருந்த நளினி பாட்டியிடம் என்ன பாட்டி வெளியில சத்தம் என கேட்டாள்... பாட்டி வாய் திறக்கவே இல்லை.. நளினி வீட்டுக்கு அருகில் உடுக்கை சப்தம் அதிமானது.. ஒருபெண்ணின் குரல் ஆ..... என்ன விடுடி விடுடி என கேட்டது....

பாட்டி பல்லை நற நற வென கடித்தாள் நரைத்த தலை கிழவி ஏன்டி என கேட்டாள் நளினியிடம்..

நளினி பயந்தாள் பாட்டி எப்பொழுதும் இப்படி கூப்பிட மாட்டாங்களே என உடனே நளினி தண்ணிடம் இருந்த லைட்டை அடித்தவுடன்

ஆ... என அலறினாள் நளினி பாட்டியின் வாயில் சிகப்பு நிறமாக வழிந்தது.. அருகில் உடுக்கை சப்தம் அதிமாக கேட்க பாட்டி ஆட ஆரம்பித்தாள்..

அவள் வீட்டு அருகில் காளி கோவில் என்பதால் அம்மாவாசை அன்று பேயை ஓட்டுவார்கள்..

ஓட்டிய பேயை ஊருக்கு வெளியில் விடுவது வழக்கம்... பாட்டி என்ன ஆச்சு பாட்டி என்றாள் நந்தினி .

ஆ ...வராடி ஆ....வராடி....என கத்தினாள் பாட்டி... யாரு.. யாரு...என்றாள் நந்தினி.. அந்த நேரம் ஒரு பெண்ணின் தலைமுடி கொஞ்சம் ,எலும்பிச்சை பழம் மற்றும் பூஜை பொருளை எடுத்து கொண்டு அந்த நடு இரவில் வேகமாக பாட்டி வீட்டை தாண்டி ஒருவன் ஓடும் போது அந்த முடி கொஞ்சம், நளினி வீட்டின் முன்வாசலில் வீழ்ந்தது.. பாட்டி ஆ... என அலறி கத்த அந்த ஆள் பயந்தான் .அவன் அந்த சப்தம் கேட்டு போதையில் இருந்ததால் அவன் உலரினான்.. எங்கிருந்து இந்த சப்தம்... காளி கோவில் கொடுத்த சராயம் குடிச்சிட்டேன் போதையே இல்லையே.. அரசியல் வாதியோட பொண்ணுக்கு பேய் பிடிச்சு வந்தாங்க ,அவ உடம்புல மந்திரி வீட்டு சாவுக்கு போனப்ப மந்திரி பொண்ணு இவள புடிச்சிகிட்டாளாம்.. இவளவு சும்மாவே திமிர இருப்பாங்க இப்ப பேய்யா வந்து என் உசிற எடுக்கறாங்கடா சாமி... எத்தனையோ பேய எல்லை வெளிய ஆணி அடிச்சு மாட்டிருக்கேன்.. ஆனா என பயந்தவன் ஆ என கத்தினான்... அவன் பின்னால் ஒரு வெள்ளை உருவம் தொட்ட உடன் அய்யோ அம்மா.. கத்தி கீழே விழுந்தான்..

பாட்டி பேய் போல நின்றிருந்தாள்.. டேய் அவள விட்டு விட்டு போற.. அவள எடுத்து போ... எவள என்றான்...சாமியார் ... நீ கையில வைத்திருந்த பொருள் தவறி விழுந்துவிட்டது எடுடா என கத்தினாள்.. பின்னால் ஒரு குரல் பாட்டி பாட்டி என கத்தும் குரல்.. சாமியார் பயந்தான்... அரசியல் பேய்கள் ஆட்டம் தங்க முடியலை... யாரு..யாரு..என கேட்ட போது பாட்டியை அங்கு காணோம்... நளினி ஒரு துணியுடன் பாட்டியின் தலையில் மூடி அவளை அழைத்து வந்தாள் மூச்சு விடமுடியாமல் பாட்டி வீட்டில் படுத்து விட்டாள் .. துணியை எடுத்து பாட்டியின் வாயில் பார்த்த போது ஒரு எலும்பிச்சைபழம் சிகப்புடன் இருந்தது அடிக்கடி பாட்டிக்கு உடுக்கை சப்தம் கேட்டவுடன் சாமி ஆடுவது வழக்கம் மணி இரவு 12 ஐ தாண்டியது...

சாமியார் ஒரு வழியாக அந்த பேய் பொருளை ஒரு வேப்பமரத்தில் வைத்து ஆணி அடிக்க முயலும் போது ...

காற்று பலமாக வீசியது.. அந்தமுடியை எடுத்து மரத்தின் மேல் வைக்கபோகும் போது அந்த முடி திரண்டு பெரிய கயிறாக மாறியது... அந்த கயிறோடு பலத்த சப்தம் ஏன்டா எங்க கதை என்ன ஏதுன்னு தெரியாம எங்கள ஓட்டி விடுற எல்லையை தண்டி வந்துட்ட அம்மனுக்கும் காளிக்கும் சக்தி உங்க எல்லையில மட்டும்தான் என கத்தியது. அந்த கயிறு சாமியாரின் கழுத்தை வேகமாக இறுக்கியது ..

சாமியார் விழி பிதுங்கி என்ன விட்டுவிடு இனிமே உன் பக்கமே வரமாட்டேன் என்று கத்தினான்... பிடி தளா்ந்தது... அந்த முடி லேசாக பறக்க ஆரம்பித்தது... சாமியார் வேகமாக அந்த இடத்தை விட்டே ஒடினான்.. வழியில்வந்து கொண்டிருந்த மந்திரியின் சரக்கு லாரியை கவிழ்த்தது அந்த முடி... அந்த ரோட்டில் இருந்த மந்திரியின் பெட்ரோல் பங்க் தீ பிடித்து எரிந்தது. மந்திரிக்கு தகவல் வர மந்திரி விரைந்து வந்தார்.. தன் ஆட்களும் கும்பலாக வந்தார்கள்..

அந்த முடி மரத்தில் தொங்கியிருந்தது மற்றொரு முடி அந்த இடத்தில் பிண்ணி பினைந்தது..

காற்று பலமாக வீசியது..

அந்த முடி மந்திரியின் அடியாட்கள் தலைவன் ரவுடி ரவியை இழுத்து நெடுஞ்சாலையில் வீசியது..

அனைவரும் பயந்து ஓடினார்கள்..

மந்திரியும் அவனு அடியாட்களும் அங்கிருந்த கோயிலுக்கு ஓடினார்கள்..

அங்கிருந்த கோயிலுக்கு ஓடினார்கள்.. அய்யா இது பேயோட வேலை அய்யா என வேகமாக காரை எடுக்க..

மந்திரி டேய் பார்த்து ஒட்டுடா கபோதி என கத்தினார்.. ஒருவழியாக காளி கோவிலை அடைந்தார்கள் மணி இரவு 1...

இரண்டு முடியும்மீண்டும் வந்தது அவர்களை துரத்தியது ...

வழியில் டீக்கடையில் இருந்த மந்திரி ஆட்களை டீ கிளாஸ்ஸால் மண்டையில் அடித்து கொண்றது அந்த தடித்த அந்த இரண்டு முடிகள்...

வீட்டுக்கு அருகில் கிடந்த முடியுடன் பின்னி பிணைந்தது...

அப்படியே காரை நோக்கி பறக்கும் போது நளினி வீட்டுக்கு அருகில் கிடந்த முடியுடன் பின்னி பிணைந்தது...

உடனே பாட்டி அய்யோ அவுங்க வந்துடாங்க என கத்தினாள்...

நளினி பயந்து போய் யாரு பாட்டி என கத்தினாள் ஒரு ஆம்பிளை பேயும் ஒரு பொம்பளை பேயும் ஒன்னா ஜோடி போட்டு போகிறது.. வெளியில போகாதடி என கத்தினாள்.. நளினி பாட்டி என மயக்கம் போட்டு விழுந்தாள்.. அந்த கயிறான முடி நளினி முகத்தை முறைக்க பார்த்தது... மணி இரவு 1.30 மணி.. மந்திரி கோயில் முன் காரை நிறுத்திவிட்டு உள்ள ஓடி போய் சாமியாரே காப்பாத்துங்க.. என கெஞ்ச யோவ் ஓட்டுக்கும் உயிருக்கும் மட்டும் காலில் வீழ்ந்தா போதாது.. அநியாயம் பன்னக்கூடாது.. வீழ்ந்து கிடக்கிற மக்கள கொஞ்சம் காப்பாதனும்யா என்றார்.. நானே அந்த பேய் கிட்ட இருந்து என்ன காப்பாத்திகினு எப்படியோ வந்துவிட்டேன்..

நீ வேற...

எல்லாம் காளியோட அருள் தான்.. இந்த இந்த விபூதியோட குங்குமம் வச்சிக்கோ... இந்த தாயத்த கட்டிக்கோ ஜெய் மாகாளி என கத்தினான் சாமியார்.. யோவ் உண்மைய சொல்லு ,உன்னுடைய பொண்ணு எப்படி செத்தா சொல்லு என்றான்... அது வந்து சாமி ..... சொல்லுயா....

அப்பதான் நீ பொழைப்ப.. ஒரு ஏழைப்பையனுக்கும் இவளுக்கும் காதல் .. அவன விட்டுட்டு வந்திருன்னு சொன்னேன் எனக்கு தெரியாம இவங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிடாங்க அதான் இரண்டு பேரையும் வெட்டி பொதச்சிட்டேன்.. அந்த சாவுக்கு வந்த என் கட்சி கவுன்சிலர் பொண்ணு மேல இவ புடிச்சிகினு இருக்கிறா.. என்றார் மந்திரி ..

நீ மட்டும் இன்னா பெரிய ராஜ வம்சத்திலயா பொறந்த.. எல்லாம் மக்கள் பணம் ஊழல் பணம் ....... யோவ் ஜாக்கிரதையா இரு.. ஒரு பேய சாமளிக்க முடியாது .. இப்போ இரண்டு பேய்... எனறான் சாமியார் சாமியாடுவதை போல பேசினான்...

அங்கு வெளியில் இணைந்த முடிகளான மந்திரி பெண்ணும் அவள் காதலனும் மந்திரிக்காக காத்திருக்கும் நேரத்தில் மந்திரி தாயத்தும் ,மாந்திரீக கயிறுடன் வெளியே வந்தார்...

அதைபார்த்த கற்றை முடியால் மந்திரியின் கழுத்தை நெருக்கி சாவடிக்க பறந்து வந்தது...

மந்திரியின் கையில் காளியின் பிரசாதம் பார்த்த உடன் அப்படியே நின்றது ... இரண்டும் பேசிக் கொண்டது இவனை இப்போது கொள்ளமுடியாது... நீ உங்க வீட்டுக்குபோ...

என ஒரு கட்டு தனியாக முடி பிரிந்தது...

பிரிந்த கற்றை முடி காரின் அடியில் சுற்றி கொண்டு போனது... மந்திரி பெண்தான் அந்த முடி...

வீட்டை நெருங்கியதும் அதற்கு கோபம் காரை ஒரு திருப்பு திருப்பியது.. மந்திரி வீட்டின் கேட்டில் மோதி நின்றது...

டேய் பாத்துடா என்றார் மந்திரி...

மந்திரி இறங்கி பூசாரி கொடுத்த பழம் ,மாலை அனைத்தையும் வாசலில் மாட்டினார் பயத்துடன்... அந்த கற்றை முடி தன் அப்பாவை பார்த்தது தான் வாழ்ந்த வீட்டை பார்த்தது... இங்குதான் என்னை வெட்டி காரில் ஏற்றினார்கள் என கற்றை முடியான மந்திரி பெண் தன் பழைய நினைவுகளை நினைத்தாள்... நீண்டு மரத்தில் தொங்கி கற்றை முடிஆடியது... மணி இரவு 2.00 ஐ நெருங்கியது....

பாதி ஆண் கற்றை முடி நேராக நளினி வீட்டை நெருங்கியது..

பாட்டி அந்த நேரத்தில் ஒன்னு வருது என கத்தினாள்...

என்ன பாட்டி என மீண்டும் மயக்கம் போட்டாள் நளினி...
அவ்வளவுதான் நளினியின் உடலில் அந்த ஆண் கற்றை முடி நளினியின் தலைமுடியுடன் இணைந்தான்...

சற்று நேரத்தில் பாட்டி கோயிலுக்கு ஓடினாள் ..

மணி3.00 அதிகாலை..

டேய் என கத்தி கொண்டே நளினி எழுந்தாள்... நேராக மந்திரி வீட்டுக்கு சென்றாள் மந்திரி... நளினியின் அம்மா மந்திரி வீட்டு வேலைக்காரி...

நளினியும் தன் அம்மாவுடன் செல்லவதுண்டு சில சமயம்...

மந்திரி வீட்டு வாசலில் நாய்கள் குலைக்கும் சப்தம் கேட்டது..

காவலுக்கு ஆட்கள் இருந்தனர் ,யாரு இந்த நேரத்தில என அடி ஆட்கள் கேட்டனர்... மணி அதிகாலை 4.00....

நான்தான் என்றாள்... வீட்டு வேலைக்காரி என்றான் ஒருவன்...

எங்க உங்க அம்மா வரவில்லையா என்றான் மற்றொருவன்... அவங்களுக்கு உடம்பு சரியில்ல... அதான்.... சரி ...சரி...போ..ஐயாவை தொந்தரவு பன்னாத இப்பதான் படுத்தார்.... எங்க என்றாள் கணத்த குரலுடன் நளினி...


தோட்டத்தில என்றான் ஒருவன்..

சரி போய் வேலைய பாரு என்றான் ஒருவன்....

தோட்டத்துக்கு போனவ ஒரு வேலை காரனை அழைத்து ஐயா கையில இருக்கிற கயிற அவிழ்த்து விடு அதை ஐயாவின் மனைவி காலை பூஜையில வைக்க கேட்டாங்க என்றாள்...

உடனே அவன் அவிழ்த்து விட்டு அவள் அருகில் வந்ததுதான்...

நளினியின் தலைமுடி நீண்டது,அப்போது தெருவில் தொங்கிய தலை முடியும் பிணைந்து அனகோன்டா அளவு மாறியது.

நளினி கீழே விழுந்தாள்..

மந்திரியை அந்த இரட்டை கற்றை முடி கழுத்தை இறுக்கி கண்கள் வெளியே வந்ததும் ,அடியாட்கள் அந்த முடியை கத்தியால் வெட்டினார்கள்..

வெட்ட வெட்ட அந்த கற்றை முடி பிணைந்து அனைவரையும் விழி பிதுங்க சாகஅடித்து கொன்றது..

மந்திரியை தரையில் பிடித்து யானை தும்பிக்கையால் அடிப்பது போல் அடித்தது..

மந்திரி கும்பல் முழுவதும் இரத்தம் வர குரல் கேட்டு இறந்தனர்.

சிரிப்பு சத்தம் ஒர் ஆண்,ஒர் பெண் சிரிக்கும் அந்த பயங்கர இரட்டை சத்தம் கேட்டது .முடி இரண்டும் தனியாக பிரிந்து பிரியமுடியாமல் அழுது காற்றில் மறு ஜென்மம் நோக்கி ஓடியது.


பாட்டி அவளை தேடி வந்தாள்... அவள் முடியை பார்த்து வேலை முடிஞ்சுதா.. எங்க என் பேத்தி என்றாள்... முடி....

நளினி இருந்த திசை நோக்கி பறந்தது...

பாட்டி நளினியை எழுப்பினாள்...

இரண்டு முடிகளும் பாட்டியிடம் நன்றி சொல்லி காற்றில் கலந்தன..

நளினி பாட்டியிடம் எனக்கு என்ன ஆச்சு நான் எப்படி இங்க வந்தேன் என்றாள்..

வாடி வா ...சொல்றேன்...

போலீஸ் வந்தா உன்ன கேள்வி கேட்பாங்க வா வீட்டுக்கு போயிடலாம்... வீட்டுக்கு வந்தார்கள்.. மணி4.30 அதிகாலை..

நளினி உடை மாற்றி வந்தாள்...

பாட்டி என்றாள் பாட்டியை காணவில்லை...

சரி என்று படுத்து பயத்துடன் தூங்கினாள் நளினி...

காலையில் பாட்டி கையில் விபூதியுடன் வந்தவள் ...

ஏய் நளினி எங்க போன எழுந்திரு..

இந்தாடி சாமி குங்குமம் வச்சுக்கோ...

எங்க போனாலும் சொல்லிட்டு போ ..

என கத்தினாள்.. நளினி இவங்கதான்...

என்ன இரவு கூப்பிட்டு வந்து படுக்க வச்சாங்க என நினைத்தாள்... நீ பன்ன கூத்துக்கு நான் கோயில் உள்ள போனவ இப்பதான் வரேன் என்றாள்... நளினி பயந்தாள்...

மந்திரி வீட்டுக்கு வந்த பாட்டி யார் என நினைத்தாள் நளினி.. போலீஸ் வண்டி ஊருக்குள் நுழைந்தது...

பாட்டி என்னடி போலீஸ் மந்திரி வீட்டுக்கு போவுது...

நளினி தெரியல பாட்டிஎன்றாள்... பக்கத்து வீட்டு அண்ணாச்சி நேத்து ராத்திரி மந்திரியையும் அவரோடைய ஆளுங்களையும் எதிர் கோஷ்டி போட்டுடாங்க என சொல்லிகொண்டே போனான்...

சரி வாடி வேலைய பாப்போம் என்றாள் பாட்டி... பாட்டி யார் என நினைத்து கொண்டே பாட்டியின் பின் வீட்டுக்குள்ளே போனாள் நளினி.. நளினி நினைத்தாள் பாட்டி மட்டும் வரவில்லை என்றாள் நான் போலீஸ்ல மாட்டிக்கினு இருப்பேன் என கை எடுத்து கும்பிட்டாள் அம்மா தாயே என அவள் வீட்டு அருகில் இருந்த காளியை பார்த்து... அந்த நேரம் உடுக்கை ,மணி சத்தம் அம்மாவாசை பூஜை முடிந்து ..

காலை பூஜையில் கேட்டது... நளினி காளி தாயே என கும்பிட்டாள்...

அப்போது புரிந்தது வந்த பாட்டி யார் என நளினிக்கு...

மீண்டும் ஜெய் காளிகாம்பாள் தாயே என கும்பிட்டாள்....

முற்றும்..


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.