மேகம் போடும் தாளம்: ஆபிரகாம் வேளாங்கண்ணிBy. கவிதைமணி

பூமியில் பருத்திப் பஞ்சு
பூமியர் மானம் காக்கும்
வானத்து மேகப் பஞ்சு
பூமியர் உயிரைக் காக்கும்

வாயுக்கு வாக்குப்பட்டு
இசைந்து நசிந்து மேகம்
ஓடாத ஓட்டமில்லை
அடிக்கும் அடிக்கு அஞ்சி
ஆடாத ஆட்டமில்லை
இடிக்கும் இடிக்கு அஞ்சி
"மேகம் போடும் தாளம் "

அது வெண்மேகமோ
இல்லை கார்மேகமோ
என்பதே பெரும் கவலை
உழுதுண்டு வாழ்வோர்
எமது தமிழ் உழவர்க்கு

மேகம் இல்லையேல்
மழை யோகம் இல்லை
முப்போகமும் இல்லை
பசி தாகம் தொல்லை
வானை நம்பி வாழ்வோர்
உண்ண போடும் தாளம்
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.